Monday, 9 March 2020

அத்தாவின் எழுத்துக்கள் தொழிலாளர் கல்வித்திட்டம்


தொழிலாளர் கல்வித்திட்டம்



தொழிலாளர் கல்வித்திட்டத்தில் கல்வி உங்களுக்குப் புகுத்தப்படுகிறது .படிப்பது என்பது மருந்து சாப்பிடுவது மாதிரி கஷ்டம்தான்;என்றாலும் ஓரளவு படித்தபின் நாம் எவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது என உணர்ந்து கற்றதன் பயனை அனுபவிக்கிறோம் .வியாதியுற்றவன்  கஷ்டத்துடன் கசப்பான மருநதைச் சாப்பிட்டு குணமடைந்த பின் .சந்தொஷப்படுகிறானல்லவா அது போல
ஆனால் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஏராளமாக வந்து குவிகிறார்கள் .இடமில்லை இடமில்லை என்று பள்ளிகளும் கல்லூரிகளும் கதறுகின்றானவே, மருந்து சாப்பிடுவது போல் கஷ்டமாக இருந்தால் இப்படி வந்து குவிவார்களா என்று நீங்கள் எண்ணலாம் .
இங்கு நீங்கள் படிப்பது கல்வி அறிவு பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தவிர வேறு இல்லை.. அங்கோ கல்வி அறிவு பெறுவது மட்டும் நோக்கம் அல்ல  . ஏன்! இப்போதெல்லாம் கல்வி அறிவு பெறும் நோக்கமே இல்லை.. தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பெறுவதுதான் நோக்கம்.
கல்வியை சோதிப்பதற்காக தேர்வும் , பெற்ற அறிவின் திறனைக் காண்பிப்பதற்குப் பட்டமும் இருந்தன .மொத்தமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை அவ்வளவும் ஒரு மாணவன் கற்று விட்டானா என்று அறிய ஏதாவது ஒரு பகுதியை அவனுக்கு முன் அறிவிப்பு இன்றி கேட்டு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனபது போல் அத்துறையில் முழுத்திறனையும் ஆராய்ந்தார்கள் .
ஆனால் இப்பொழுது ஆசிரியர்களே போதிக்கும்போது தேர்வில் வினாக்கள் இந்தப் பகுதியில் வரலாம் இன்ன இன்ன வினாக்கள் வரலாம் என்று பாடம் கற்பிக்கிறார்கள் .
அதாவது பாடத்துக்குத்தான் பரிட்சை என்பதை மறந்து பரிட்சைக்குத்தான் பாடம் என்ற நிலைமை ஆகி விட்டது
பரிட்சையில் தேருவதும் பட்டம் பெறுவதும் எதற்காக ?
உத்தியோகம்
 எனவே தற்காலக் கல்வி உத்தியோகத்தை குறிக்கோளாகக் கொண்டது .பட்டம் இருந்தால் பதவி. பட்டங்கள் கல்லூரிகளில்தான் கிடைக்கின்றன . எனவேதான் அப்பட்டம் பெறுவதற்கு ஏராளமாகக் கூடுகிறார்கள்.
கல்வி அறிவுக்குதான் பட்டம் என்றிருந்தாலும் பட்டம் பெறும் ஆர்வத்தில் கல்வி அறிவைப் பூரணமாகப் பெறாமலே எப்படியாவது தனது குறிக்கோளான பட்டதைப் பெற்று பதவிக்கு லைசென்ஸ் பெறத் துடிக்கிறார்கள் எனவேதான் அங்கு கூட்டமும் கூச்சலும் குழப்பமும் .
மேலும் ஓன்று திரண்ட வாலிப உணர்சிகளை சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்திக்கொள்வது எளிதாகிறது .தேக்கி வைத்த நீர் எங்காவது சிறு துவாரம் ஏற்பட்டால் அதன் வழியே வெகு வேகமாகப் பாய்ந்து கரையையும் உடைத்து வெளியேறுமல்லவா ? அது போல கட்டுப்படுத்தப்பட்ட சிறுவர்களின் உணர்ச்சி மிக்க சிறுவர்களின் உணர்ச்சி மிக்க இளம் உள்ளங்கள் எப்படியாவது வெளியே செல்லக் கிளம்பி விடுகின்றன.. அதன் விளைவுகளை ஆராயும் சக்தி இல்லை .அதைப் பெறத்தானே கல்வி . அதைப் பயில வருமுன் இதுபோல் நேர்ந்தால் அவர்கள என்ன செய்வார்கள் ! இம்மாதிரி வளர்ந்ததுதான் தற்காலக் கல்வி
ஆனால் உங்கள் கல்வித் திட்டமோ கல்வியைப் புகுத்துவதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாதது எனவே நீங்கள்தான் உண்மையான் கல்வி கற்றுப் பயன் பெறுவீர்கள் எனபது உலகம் காணவிருக்கும் உண்மையே

பாளை பெல் அமோர்சஸ் தொழிலாளர் கல்வித்திட்டக் கூட்டத்தில் பேசியது  


சொல்லாக்கம் எழுத்தாக்கம்
எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்சி
நகராட்சி ஆணையர் ஒய்வு

sherfuddinp.blogspot.com
BFW
  09032020

No comments:

Post a Comment