Friday, 6 March 2020

சசக்கப்ரதமன்



சின்னச் சிதறல் 



சக்கப்ரதமன்





அந்த வங்கிக் கிளையில் பணியாற்றும் குமாருக்கும் வைத்திக்கும்  இரண்டு ஆண்டு  பழக்கம். உடன் பணியாற்றுபவர்கள் என்பதையும் தாண்டி மிக நெருக்கமான நட்பு
 குமார் .  .தன் குடும்பம் பற்றி மனம் திறந்து பேசுவார். தன்னை யாரும் குறிப்பாக துணைவி மதிப்பதே இல்லை என்று குறைப்படுவார்
இவளவுக்கும் பெரிய பணப்பிரச்சனை எல்லாம் கிடையாது . துணைவி இரண்டு பிள்ளைகள் என நான்கே  பேர்தான் .துணைவி மதிக்காததால் பிள்ளைகளும் மதிப்பதில்லை என்று குறைப்படுவார்  
வங்கிக்கடனில் வாங்கிய சொந்த வீடு அதனால் வாடகையும் கிடையாது . அருகருகே வங்கி ஊழியர்கள் வீடுகள் . அதுதான் பெரிய பிரச்சனை . பிறரோடு ஒப்பிட்டு நீ ஏன் அப்படி இல்லை இப்படி இலை அவர் மேலாளராகி விட்டார் நீ ஏன் ஆகவில்லை  என்று மட்டம் தட்டும் மனப்பாங்கு எதெற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு
அதனால் வீட்டுக்குப் போவதையே முடிந்த வரை தள்ளிப்போட்டு வங்கியில், அல்லது வைத்தி  வீட்டில் அல்லது பூங்கா போன்றஇடங்களில் வைத்தியோடு பேசிக்கொண்டிருப்பார் குமார்
இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் கூட வைத்தி  குமார்  வீட்டுக்குப் போனதில்லை அவரும் அழைத்ததில்லை  இவ்வளவுக்கும் இருவர் வீட்டுக்கும் இடையில்  இருபது நீமிட நடைப் பயணத் தொலைவுதான்
இப்படி இருக்கையில் ஒரு நாள் திடீரென்று குமார்  வைத்தியை  குடும்பத்தோடு அவர் வீட்டில் விருந்துக்கு அழைத்தார் . அன்று ஓணம் பண்டிகை
மிகவும் தயங்கினார் வைத்தி   . குமார்  வற்புறுத்திக் கூப்பிட்டதால் நான் மட்டும் வருகிறேன் என்று சொல்லிப்பார்த்தார்  அவரோ விடாமல் எல்லோரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னார்
ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு  துணைவி, மகன் மகளோடு வைத்தி  புறப்பட்டுப் போனார்   
 எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி மிக அன்பாக, சிரித்த முகத்துடன் வரவேற்றார் குமாரின்  துணைவி .
உள்ளே போய் உட்கார்ந்தார்கள் குமாரின் துணைவி நன்றாகப் பேசினார். தான் செய்த சிறப்பு உணவான சக்கப்ரதமன் பற்றி விரிவாக் எடுத்துரைத்தார்  . அதில் சேர்த்துள்ள பொருட்கள் செய்முறை, அதன் ஊட்டச்சத்து, சுவை எல்லாம் விவரித்துச் சொன்னார் பலாப்பழம் என்றாலே வாய் ஊரும் . அதுவும் பலாப்பழ பாயாசம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது
சாப்பிட உட்கார்ந்தார்கள்  . எரிசேரி, புளிசேரி என்று நிறைய கேரளா உணவுகள் .சுவை வைத்தி   வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை . புளியும் வெல்லமும் சேர்த்துச் செய்த ஒரு உணவு --) அதுதான் மிகவும்  சுவையாக இருந்தது .
அதற்குமேல் சாப்பாடு பரிமாறும் முறையில் ஒரு நெருடல் தெரிந்தது வாய்ச்சொல் அளவுக்கு மனமும் இல்லை  கையும் வரவில்லை
எப்படியோ சாப்பிட்டு முடித்தாகள்  அந்த வெல்லம் புளிக்கலவை பசியைத் தூண்டும் பொருளாம். நன்றாகவே தூண்டி  விட்டது
சரி சக்கப்ரதமன் சாப்பிட்டு பசியை ஆற்றிக் கொள்ளலாம் என  நினைத்தார்கள்
 எண்ணத்தை  நிறைவேற்றும் வகையில் பெரிய உயரமான குவளைகளில் நீளமான கரண்டி போட்டுக்கொண்டுவந்தார் குமார் துணைவி . பாயசம் கொண்டு வந்து குவளையில் ஊற்றுவார் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள்
குமாரின் துணைவி  ம் சாப்பிடுங்கள் என்றார் . குவளையை எட்டிப்பார்த்தால் , கோடையில் வற்றிய கிணற்றுத் தண்ணீர் போல் அடியில் கொஞ்சம் பாயாசம் ஒட்டிக்கொண்டிருந்தது
சட்டென்று வைத்தியின்   துணைவி பிள்ளைகளோடு புறப்பட்டார் . இரு எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று வைத்தி  சொல்ல  ,இல்லை இல்லை வீட்டில் நிறைய வேலை இருக்கிறது ,நீங்கள் இருந்து பேசிவிட்டு மெதுவாக வாங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்
வைத்தியும்  கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு வீடு போய்ச் சேர்ந்தார்  
ஏன் இப்படி சடாரென்று வந்து விட்டாய் என்று வைத்தி   கேட்க துணைவி+
பின்ன என்னங்க போய் நுழைந்ததில் இருந்து  சக்கப்ரதமன் சக்கப்ரதமன்  என்று வாய் ஓயாமல் சொல்லிகொண்டே இருந்தார் . சாப்பாடு சுவை  பரிமாறிய முறை எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை கிட்டத்தட்ட முழுப்பட்டினிதான்
சரி பாயசம் நிறைய செய்திருப்பதாய்ச் சொன்னார். அதோடு பெரிய குவளையும் கொண்டு வந்தார் . அதில் ஓரளவு பசி தீரும் என்றிருந்தேன் பார்த்தல் கழுவப்போடும் டம்ளரில் ஒட்டியிருப்பது போல் கொஞ்சூண்டு இருந்தது சரியான எரிச்சல் . அதுதான் வீட்டுக்கு வந்து விட்டேன் என்றார்
என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதி காத்தார் வைத்தி   

sherfuddino.blogspot.com

BFW06032020fri


crazy FB blocked this 







No comments:

Post a Comment