Friday, 13 March 2020

கடன் , கட்டுப்பாடு , கண்ணியம்


சின்னச் சிதறல்


கடன் , கட்டுப்பாடு , கண்ணியம்



நன்றாக நினைவிருக்கிறது
வங்கிக் கிளையில் அலுவலர் (ஆபீசர்) பணி
கடன் கட்டுப்பாட்டு விதிகள்(Credit Restriction Measures) மிகக் கடுமையாக இருந்த நேரம்
அரசுப்பணியில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் வண்டி வாங்கக் கடன் கேட்கிறார் . தொகை ஏழாயிரம் என்று நினவு ..அவருடைய வைப்புத்தொகை பத்தாயிரம் இருக்கிறது . அதை பிணையாகக் கொடுக்கவும் செய்கிறார்
வண்டிக்கடன்தான் வேண்டும். வைப்புத்தொகையின் மேல் கடன் வேண்டாம் என்கிறார்
இவ்வளவு இருந்தும் இந்த சிறிய தொகையை கடனாகக் கொடுக்க அந்தப் பெரிய கிளை மேலாளருக்கு அதிகாரம் இல்லை
எனவே கடன் விண்ணப்பம் மேலாளரின் பரிந்துரையுடன் கோட்ட அலுவலகத்துக்குப் போகிறது
அங்கும் கடன் கட்டுப்பாட்டு விதிகளை சுட்டிக்காட்டி கடன் மறுக்கப்படுகிறது
அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிகள் எல்லாம் இப்போது இல்லையா?
இந்தியப் பொருளாதாரத்தின் , குறிப்பாக அஅனைத்த்து வங்கிகளுக்கும் Watch Dog  என்று அறியப்படும்  RBI   என்னவாயிற்று ?
அந்நியச்செலாவணி பரிமாற்றம் முழுக்க முழுக்க RBI இன் கட்டுப்பாட்டில்தான்

CLR  SLR SCC என்று பலவித கட்டுப்பாடுகள் அதன் கையில் இருக்கிறது .
இதைஎல்லாம் சரிகட்டத்தான் 13000 C போன்ற பல பெருந்தொகைகள் வந்து போனதா  
அரசியல் சார்பு, உணர்வுபூர்வமான சார்பு எல்லாவற்றையும் தாண்டி அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டிய நேரம்
ஆம் வங்கி பற்றி நிறைய பேர் நிறைய எழுதி விட்டார்கள்
புதிதாக எழுத ஒன்றும் இல்லை
முக நூலிலும் மற்ற ஊடகங்களிலும் இப்போது ஒரு பழக்கம் .
காந்தி செய்யாததா  நேரு இந்திரா மன்மோகன்சிங் ராஜீவ்காந்தி செய்யாததா என்று கேள்வி கேட்டு பிரச்சனையை திசை திருப்புவது
அதையும் தாண்டி ஒரு கீழ்த்தரமான குற்றச்சாட்டை சுமத்தி விவாதத்தை முற்றிலும் வேறு பாதைக்கு கொண்டு செல்வது

அவர்கள்தான் அனுப்பப்பட்டு விட்டார்களே .இன்னும் ஏன் இது தொடர்கிறது ?
இப்படியே போனால்  தொலை தொடர்பு ஊழியர்களுக்கு நடந்தது மற்றவரகளுக்கும் வரலாம் . ஊதியம் ஓய்வூதியம் எல்லாமே நிச்சயமற்றதாகி விடலாம்
பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பெருமளவில் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம் என்று சொல்லப்படும் நாம்தான்
சிந்திப்போம் செயல்படுவோம்
என் இந்தப்பதிவுக்கு ஏன்ன மாதிரி கருத்துக்கள் வரும் என்று தெரியவில்லை
என் கருத்துக்கள் யாரையும் புண் படுத்துவது போல் இருக்காது   
ஆனால்
என் பேர் ராசி அப்படி
வங்கி விடுமறை விடுதிக்குப் போனால் மேலும் கீழும் பார்ப்பார்கள்
முகநூலில்  என் பதிவுகள் தடை செய்யப்படும் காரணமே இல்லாமல்
அதைவிடக்கொடுமை சில நாட்கள் முன்பு கனரா வங்கி ஊழியர்கள்  ஓய்வூதியர்கள் குழுவில் என்  பதிவுக்கு வந்த ஒரு அறிவு ஜீவியின் கருத்து
Who is the admin ?
Who is this jihadhi with four wives”
“He is talking about Triple Talaq and article 370”
அவர் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது 
எனக்கு எரிச்சலை உண்டாக்கி ,சினத்தைத் தூண்டி என்னை நிலை குலையச் செய்ய வேண்டும்
அதன் விளைவாக அவரை நான் தரமற்ற சொற்களால் வசை பாட வேண்டும்
எனக்கு அவர் மேல் இரக்கம்தான் உண்டானது—எதோ சரியில்லாதவர் என்று
முறைப்படி அவரது பதிவை அட்மினுக்கு புகாராக அனுப்பினேன்
சிறிது நேரத்தில் என் பதிவு, அவர் பதிவு எல்லாம் முக் நூலிலிருந்து மறைந்து விட்டது
சரி இவ்வளவு கடுமையான கருத்துக்கு ஆளான என் பதிவு என்ன?
 Meager family pension is a crime against women
என்பதுதான்
இதில் எப்படி நாலு மனைவி, முத்தலாக் 370 எல்லாம் வந்தது என்று எனக்குப் புரியவில்லை தெரியவில்லை
உங்களுக்குத் தெரிந்தால் சொல்ல்லுங்கள்

இறைவன் நாடினால் மீண்டும் வேறொரு பதிவில்
sherfuddinp.blogsport.com
bfw13032020fri



 

No comments:

Post a Comment