Thursday, 26 March 2020

மூலிகை அறிமுகம் கண்டங்கத்திரி



கண்டங்கத்திரி



இது  மருத்துவக் குறிப்பு இல்லை
வீட்டுத் தோட்டத்திலும் குப்பை மேட்டிலும் தெரு ஓரங்களிலும்  நம் கண்ணில் படும் செடி கொடி மரங்களின் மருத்துவ குணங்களை எடுத்துக்காட்டி அவற்றை மூலிகைகளாக அறிய வைப்பதே என் நோக்கம்
தகுதி வாய்ந்த, அனுபவம் உடைய மருத்துவரை கலந்து அறிவுரை பெற்றே பயன் படுத்த வேண்டும்

கண்டங்கத்திரி –
எல்லா இடங்களிலும் எளிதாக வளரும் செடி இலை தண்டு எல்லாவற்றிலும் சிறிய முட்கள் இருக்கும் பூ நீல நிறத்தில் இருக்கும் காய் பச்சை  பழம் மஞ்சள் நிறத்தில் சிறிய கத்தரிக்காய் வடிவில் இருக்கும்

எளிதில் முளைக்கும் இந்தச் செடியின் பயன்கள் எண்ணற்றவை .இலை பூ காய் பழம் விதை பட்டை  வேர் எல்லாம் மருத்துவ குணம் கொண்டவை
நீண்ட வாழ்நாளையும் நல்ல உடல் நலத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பதால் கற்ப மூலிகைகளில் ஒன்றாக அறியப்படுகிறது கண்டங்கத்திரி
குருதிக்கொதிப்பு (BP), பல்கூச்சம், தலைவலி , வாத நோய்களை குணப்படுத்தும்
சுவாசம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகள் , வறட்டு இருமல், எல்லா வகையான சுரங்கள் குணமாகும்
வேர்வை நாற்றம் நீங்கும்  

பாத வெடிப்பு, நீர்க்கடுப்பு, , குழந்தைகளின் நாள்பட்ட இருமல் ,கபம் சிறு நீரகக் கற்கள் என பல நோய்களுக்கு தனியாகவும்  மற்ற மூலிகைகளோடு சேர்ந்தும் மருந்தாகிறது
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட இந்தச்செடி மிக எளிதில் வளரும்
படத்தில் இருப்பது எங்கள் வீட்டில் தானாக முளைத்த செடி
மீண்டும் சொல்கிறேன் இது மருத்துவக் குறிப்பு அல்ல .
மூலிகை அறிமுகம் மட்டுமே
இறைவன் நாடினால் அடுத்த பதிவில்

sherfuddinp.blogspot.com

bfw26032020thu

No comments:

Post a Comment