கண்களைக் காப்போம்
கண்ணாடி அணிந்த மாணவர்கள் மிக அரிதாக இருந்தது என் பல்ளிப்பருவத்தில்
. அதற்கு நேர் மாறாக இப்போது கண்ணாடி இல்லாத மாணவர்களைப் பார்ப்பது அரிதாகி
விட்டது
தொடர்ந்து ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் அடுத்த பத்து
ஆண்டுகளில் காதுக் கருவியும் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்போல்
இருக்கிறது
இதற்கான காரணங்களை ஆராய்வது என் நோக்கமல்ல
எனக்குத் தெரிந்த, நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செய்து வரும் சில
மிக எளிய கண் பயிற்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்
யோகப்பயிற்சி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம்,,வர்மம், அக்குபஞ்சர் உணவு
முறைகள் என கண்ணுக்கு ஏராளமான பயிற்சிகள் இருக்கின்றன
பகலிலேயே நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று ஒரு நூலில் படித்தேன்
கண்ணில் இரண்டு சொட்டு வெங்காயச் சாறு விட்டால் பார்வை தெளிவாகும்
என்று ஒரு குறிப்பு
நான் பயிற்சி செய்து வருவது இது போலெல்லாம் இல்லாமல் மிக எளிதான ஒரு
பயிற்சி
மொத்தம் பத்து நிமிடம் கூட ஆகாது ஒரு நாளைக்கு
பயிற்சி ஒன்று (Sun Gazing)
காலையில் சூரியன் முழுதாக உதிக்கும் முன்பு இதைச் செய்ய வேண்டும்
கிழக்குப்பக்கம் தளர்வாக நின்று கொள்ளுங்கள் .
கண் இமைகள் மூடியிருக்க வேண்டும்
ஆனால் கண்களை இறுக்கமாக மூடக்கூடாது
கழுத்தை வலது இடம், இடது வலமாக நிதானமாக ஒரு நூறு முறை திருப்பவும்
சூரிய ஒளி இமைவழியே பாய்ந்து கண்ணுக்கு ஒளி கொடுப்பதை நன்கு உணர
வேண்டும்
இதற்கு மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆகாது
இதை அடுத்து உடனே இரண்டாவது பயிற்சிக்குப் போக வேண்டும்
பயிற்சி இரண்டு (Palming)
முடிந்தால் சம்மணம் கூட்டி உட்காருங்கள். முடியாவிட்டால் நாற்காலியில்
தளர்வாக உட்காருங்கள்
கண் திறந்து இருக்க வேண்டும்
உள்ளங்கைகளை ஒன்றோடு ஓன்று தேய்த்து சூடாக்கி ஒரு கிண்ணம் போல்
குவித்து கண்கள் மேல் வைக்க வேண்டும்
கண்கள் திறந்து இருந்தாலும் வெளிச்சம் ஏதும் தெரியாத அளவுக்கு கைகளால்
மூட வேண்டும்
கைகள் இமைகள மேல் படக்கூடாது
ஒரு கரும்பலகையை பார்ப்பது போல் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.
இது ஒரு ஐந்து நிமிடம்
முதலில் ஐந்து நிமிடம் ஐந்து யுகமாகத் தெரியும் .போகப்போக பழகிவிடும்
பள்ளிப்பருவத்தில் துவங்கி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்
வயதானவர்களும் ஓரளவு பயன் பெறலாம்
எளிய பயிற்சி என்று சொன்னீர்கள் .ஆனால் சூரிய உதயம் நான் வாழ்கையில்
பார்த்ததே இல்லை என்கிறீர்களா ?
மாலை சூரியன் மறையும் நேரத்தில் மேற்கு நோக்கி முதல் பயிற்சி
செய்யலாம்
அதுவும் முடியாது என்றால் இருக்கவே இருக்கிறது கண்ணாடி .
லேசர் கண்ணாடிகள் விளம்பரம்
தொலைக்காட்சியில் தொடர்ந்து வருகிறது
செயற்கை நுண்ணறிவு (AI)வளரும்
வேகத்தைப் பார்த்தால் கண், காது எல்லாவற்றிற்கும் பதிலாக ஒரு சில்லு (Chips) பொருத்தினால்
போதும் போல் தோன்றுகிறது
என்ன எங்கு பார்த்தாலும் எந்திர(ன்)ங்கள்தான் நடமாடிக்கொண்டிருக்கும்
நிறைவாக இசுலாமிய முறையில் உடல் சுத்தி செய்து தொழுவது உடல், மனதோடு,
கண்ணுக்கும் சிறந்த பயிற்சியாய் அமைகிறது
இறைவன் நாடினால் மீண்டும் அடுத்த பதிவில்
sherfuddinp.blogspot.com
BFW05032020wed
,
No comments:
Post a Comment