சிதறிய முத்துக்கள்
அழகான இரு சொற்கள்
நட்பின் வலிமையை, நட்பின் மேன்மையை விளக்கிக் காட்டும்
சிறிய சொற்கள்
பொருளோ பெரிது
கர்ணன் படம் பார்த்த எல்லோருக்கும் இந்தக்காட்சி
நினவில் நிற்கும்
கர்ணன் –துரியோதனன் – உயிர் நண்பர்கள்
பானுமதி துரியோதனன் மனைவி
நண்பனை மனைவிக்கு அறிமுகம் செய்யும்போதே இவன் உன் உடன்
பிறவா உடன்பிறப்பு என்றுதான் சொல்கிறான் துரியோனன்
அந்தப் பாசப் பிணைப்பிற்கு மேலும் வலுவூட்டுகிறது இருவருக்குமிடையில்
உள்ள ஒரு அறிவு அலை வரிசை –படத்தில் இருவரும் சொல்லாடும் காட்சிகள் மிகச் சிறப்பாக
இருக்கும்
கர்ணனும் பானுமதியும் சொக்கட்டான்
ஆடிக்கொண்டிருக்கிறார்கள் .
தனிமையான இடம்தான் . ஆனால்
மாசு அறத்
திகழும் ஏகாந்த இடம் என்கிறார் கவிஞர் . தவறு
நிகழவே முடியாத ஒரு இடம்
ஆட்டம் விறு விறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது . துரியோதனன்
வருவதைப் பார்த்த பானுமதி ஆட்டத்தை விட்டு
எழுந்து விடுகிறார்
இதை அறியாத கர்ணன் தோல்வி பயத்தில் பானுமதி எழுந்ததாக
நினைத்து ஆட்ட மும்முரத்தில் அவரின்
இடையைப் பிடித்து விடுகிறான் .இடையில் இருந்த மேகலை நழுவி விழுந்து அதில் இருந்த
முத்துக்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன
பதறிப்போய் கலங்கி நிற்கிறார் பானுமதி .அதற்கு மேல் பதற்றம் கர்ணனுக்கு .செய்யக்கூடாத தவறை செய்து விட்டோமே என்று
ஆனால் துரியோதனன் !!
பதற்றமில்லை, கோபம் இல்லை
நண்பா ஏன்ன இவ்வளவு பதற்றம் !
என்ன நடந்து விட்டது ?
.உங்கள் ஆட்டம் தொடரட்டும்
சிதறிய முத்துக்களை நான் எடுக்கட்டுமா எடுத்துக்
கோர்க்கட்டுமா
என்கிறான் நிதானமாக
மனதில் பதற்றம் இருந்தால் முத்துக்களைக் கோர்க்க
முடியாது ; கை நடுங்கும்
கிஞ்சித்தும் பதற்றம் இல்லாமல் மனம் அமைதி நிலையில்
இருந்தால்தான் எடுத்த முத்துக்களை கோர்க்க
முடியும்
தன் ஆருயிர் நண்பன் மேல்
தன் வாழ்க்கைதுணை மேல்
கொண்டிருக்கும் முழுமையான , மாசு மறுவற்ற நம்பிக்கையை
எடுக்கவோ கோக்கவோ
என்ற இரு சொற்களில் வெளிப்படுத்துகிறான் துரியோதனன்
பெண்மையைப்
போற்றும் பேராண்மையில் .,நட்பைப் போற்றும் பண்பில்
அவன் பாத்திரப்படைப்பு இமயம் தாண்டி வானுயர்ந்து
நிற்கிறது
பாடல் வரிகளைப் பார்ப்போமா
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப
“எடுக்கவோ கோக்கவோ “ என்றான்
(வில்லி பாரதம் )
உடுக்கை இழந்தவன் கை போல என்ற குறள் நினைவில் வருகிறது
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com
BFW12032020thu
No comments:
Post a Comment