1000 பிறை கண்டவர்
பொருள்? விளக்கம் ?
இதற்குப் பலவிதமான விடைகள் விரிவான விளக்கங்கள் வந்தன
எதுவும் தவறென்று சொல்ல முடியாது
80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை
கண்டவர்கள் என்கிறோம். 80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம்
நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம்
அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும்
சேர்க்கும்பொழுது 1000 பிறைகள்
நிறைவுபெறும்
இது பொருத்தமான
விடையாகத் தெரிகிறது
அரபு
ஆண்டுக்கனக்கின்படி ஆயிரம் பிறைகள் என்று ஒரு விடை வந்தது அதுவும் கணக்கு சரியாக
வரவில்லை
முனைவர் பாஷா ஒரு
புதுமையான பொருத்தமான விடை அனுப்பியுருந்தார் புனித லைலத்துல் கதிரை அடைந்தவர்
என்று
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை
விட மிக மேலானதாகும்.குரான் 97 :3)
அவருக்கு சிறப்பு நன்றி
விடை அனுப்பிய திருவாளர்கள்
அஷ்ரப் ஹமீதா ,செங்கை சண்முகம்
கணேசன் சுப்பிரமணியன் சீ எஸ் வெங்கடேசன்
ரவிராஜ்
சாகுல் , சாஜஹான்
அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
பாராட்டுகள்
ஆயிரம் பிறை கண்டு நலமுடன் வளமுடன் நாம்
அனைவரும் வாழ ஏக இறைவன் அருள்புரிவானாக
14112020sat ,
No comments:
Post a Comment