Friday, 27 November 2020

உமா ,சுசீலா

உமா ,சுசீலா

 

அமைப்பு  சாரா உழைப்பாளிகள் - பெரிய எண்ணிக்கையில் பரவலாக இருக்கும் அவர்களுக்கு    தொழில்சங்க அமைப்பு . நலவாரியம் என்று எதுவும் கிடையாது.

இருந்தாலும் அவர்களை பணி நீக்கமோ இடை நீக்கமோ செய்து விட முடியாது முன்னறிவிப்பு இல்லாமல் விடுப்பில் போவார்கள் ..அப்படி எத்தனை நாள் போனாலும் ஊதியத்தில் பிடித்தம் செய்ய முடியாது .குறித்த நேரத்தில் வராவிட்டால் ஏனென்று கேட்க முடியாது

 

பெரும்பாலும் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கும்.ஆனால் நாம் அவர்களை அழைக்க முடியாது .அவர்களுக்கு எதாவது வேண்டும் என்றால் அவர்கள் அழைப்பார்கள்

இதுதான் செர்வன்ட் மெய்ட்(servant maid) என்று அழைக்கப்படும் பணிப்பெண்களின் பொதுவான இலக்கணம் பல நேரங்களில் அவர்கள்

Maid   இல்லை madam ஆ என்ற ஐயம் வரும்

இந்த பொது இலக்கணத்துக்கு விலக்காகமிகச் சிறந்த பணிப்பெண்களும் அமைவது உண்டு

அப்படி நல்ல பெண்களில் ஓன்று குட்டாவில் அமைந்தது .சரியாக காலை ஏழரை மணிக்கு அழைப்பு மணி அடிக்கும் கதவைத் திறந்தால் பணிப்பெண் . ஒன்னரை ஆண்டு குட்டா வாழ்வில் ஒருநாள் கூட விடுப்பில் சென்றது கிடையாது .எந்த வேலையையும் மறுத்துப் பேசும் பழக்கம் கிடையாது முனுமுனுப்பு சிடுசிடுப்பு எதுவும் இருந்ததில்லை

.நன்றாகத் தமிழ் பேசுவார் ,கன்னடம், மலையாளம்,கூர்கி மொழி எல்லாம் தெரியும் நாங்கள் குட்டாவில் இருந்து கிளம்பப் போகிறோம் என்று தெரிந்ததும் அப்படி ஒரு அழுகை .பெற்றோரைப் பிரிவது போல் உணர்கிறேன் என்றார் ,இன்னும் துணைவியுடன் தொலைத்தொடர்பில் இருக்கிறார்

 

இதற்கு நேர் மாறாக கடலூரில் ஒரு பெண் . எப்போதும் முகத்தில் ஒரு சிடுசிடுப்பு . ஏதாவது கேட்டால் அமிலமாகத் தெறித்து வரும் சொற்கள் . குறிப்பிட்ட வேலைக்கு மேல் அதிகமாக மூச்சு விட்டால் கூட அதற்குத் தனியாக பணம் எதிர்பார்க்கும் குணம்

சம்பள முன்பணம் கேட்கும் நாளில் மட்டும் முகம் , சொற்கள் எல்லாம் சாந்தமாக இருக்கும் .அப்போது தலை கீழாக நடக்கச் சொன்னாலும் நடப்பார்  

அரை கிலோ சீனிக்கு (சுகர்) நாற்பது ரூபாய் விலையும் பத்து ரூபாய் சேவைக் கட்டணமும் கேட்ட உத்தமி  மாதம் ஆறு  நாட்களுக்குக் குறையாமல் விடுப்பு .அவர் விடுப்பில் சென்றது நம் குற்றம் போல் ஒரு சிடுசிடுப்பு

.பெருநாளுக்கு பிரியாணி கொடுத்த பாத்திரங்களை வாங்க ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டும் . என்ன தினமும் கேட்கிறாய் ,நானா பிரியாணி சாப்பிட்டேன்  என்றெல்லாம் சுடு சொற்கள்

.. இதெல்லாம் தாண்டி எங்கள் வீட்டில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார் என்றால் அதற்கு முழுக்காரணம் என் துணைவியின் பொறுமையும் இரக்க சிந்தனையும்தான்

.அதையும் தகர்க்கும் அளவுக்கு கடுஞ்சொற்கள் அடர் அமிலமாய் கொட்ட காயம்பட்டுப்போன துணைவி அவரை நீக்கியே ஆகவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்.

 பணிப்பெண்ணுக்கும் தான் பேசியது தவறு என்று  உணர்ந்து விலக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மூன்று நாட்கள் பம்பரமாய்ச் சுழன்று வேலை பார்த்தார்

 .நாளையிலிருந்து நீ வரவேண்டாம் என்று சொன்னதும் அழுது ஆர்ப்பாட்டம செய்தார் .நான் என்ன தப்பு செய்தேன் என்று கேள்வி  என் இடத்திற்கு யார் வருகிறார்கள் பார்ப்போம் என அறைகூவல் வேறு (இடையில் வந்த பல பெண்களை அவர் சண்டை போட்டு விரட்டியிருக்கிறார் .)

 ஒரு வழியாக அவர் இடத்திற்கு வேறு நல்ல ஆள்சேர்த்து விட்டோம்

 

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் பணிப்பெண்கள் இல்லாமல் இருந்ததில்லை எந்த ஊர் எந்த மாநிலம் சென்றாலும் மொழிப் பிரச்னையையும் மீறி ஓரளவு நல்ல பெண் அமைந்து விடும்

வீட்டோடு பணிப்பெண் வைத்திருந்து அதன் பலன்களையும் சிரமங்களையும் எதிர்கொண்ட அனுபவமும் உண்டு

 

காலை மாலை என இரு வேளையும் பணிப்பெண்கள் வந்த காலமும் உண்டு .ஆட்டுக்ககல்லில் இட்லி மாவு ஆட்டியதும் உண்டு

இறைவன் நாடினால் அடுத்த வாரமும் பணிப்பெண்களுடன் பயணிப்போம்

 

28112020sat

sherfuddinp.blogspot.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment