Wednesday, 18 November 2020

தமிழ் மொழி அறிவோம் நாவாய்

 



ஒரு சிறிய எளிய வினா

 

கடற் படையைக் குறிக்கும் நேவி (Navy) என்ற சொல்லின் மூலச்சொல் எது ?

இறைவன் நாடினால் நாளை

 

 

?


போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய்

 

பள்ளியில் படித்த நளவெண்பா பாடல் இது .இதில் வரும் நாவாய் என்ற சொல்லுக்கு கடல் கலன் (கப்பல்) என்றும் நா+ வாய் -நாக்கும் வாயும் என்றும் பொருள் கொள்ளலாம்

 

இந்த நாவாய் என்ற சொல்தான் நேவி (Navy) என்ற சொல்லுக்கு மூலச்சொல் என்று சொல்கிறது ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூல்

சரியான விடை அனுப்பிப் பாராட்டுப் பெறுபவர்கள்

திருவாளர்கள் செங்கை சண்முகம் , ராஜா சுப்பிரமணியன்

 

முயற்சித்த அனைவருக்கும் நன்றி

 

இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்

 

18112020wed

Sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment