Tuesday, 24 November 2020

தமிழ் மொழி அறிவோம்

தமிழ் மொழி அறிவோம்



வீராணம் ஏரி
சென்னை நகரின் மிகப்பெரிய ஒரு குடிநீர் ஆதாரம்

இது எங்கு இருக்கிறது?

வரலாற்றுப் புதினம் ஒன்றில் இது பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

அது எது?

விடை

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி இருப்பது சென்னை அருகில் இல்லை
சென்னையிலிருந்து 240 கி மீ


தொலைவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகில் இருக்கிறது

இந்த ஏரி பற்றி விரிவான வர்ணனை
கல்கி எழுதிய  

பொன்னியின் செல்வன் 
என்ற வரலாற்றுப் புதினத்தின் துவக்கத்தில் வருகிறது

பொன்னியின் செல்வன்
பகுதி 1
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது

அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

தொடர்ந்து வலைதளத்திலோ நூலிலோ படித்து மகிழுங்கள்

சரியான விடை எழுதி பாராட்டு பெறுபவர்கள்
தோழர்கள்
கரம்.   கணேசன் சுப்பிரமணியம்
விஸ்வநாதன்  சிலசுப்பிரமணியம்
வேலவன்   தல்லத்   பாடி பீர் முஹம்மது

முயற்சித்த அனைவருக்கும் நன்றி

25112020wed
sherfuddinp.bligspot.com


No comments:

Post a Comment