திரைப்பாடல் சார்ந்த
தமிழ்ப்புதிர்
துயிலாத பெண்
ஓன்று கண்டேன்
படம் மீண்ட
சொர்க்கம்
கங்கைக்கரைத்
தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் –
படம்
வானம்பாடி
மாதவிப்பொன்மயிலாள்
தோகை விரித்தாள்
படம் இருமலர்கள்
பொன் எழில்
பூத்தது புது வானில்
படம் கலங்கரை
விளக்கம்
இந்தப்
பாடல்களுக்குள் ஒரு விதமான ஒற்றுமை இருக்கிறது
அது என்ன ?
இறைவன் நாடினால்
நாளை சிந்திப்போம்
விடை
துயிலாத பெண்ணை
முதலில் பார்ப்போம்
பாடல் வரிகள்
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
நானா?
ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
யாரோ?
ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
ஒரு முரண்[பாடு
தெரிகிறதா ?
முதலில் சுசீலா நானா
என் எனக்கேட்க ராஜா ஆமாம் என்கிறார்
அதன் பின் வரும்
வரிகளில் சுசீலா யாரோ என்று கேட்க ராஜ நீதான் என்கிறார்
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
யாரோ?
ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
நானா?
ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
என்று வரிகள்
அமைந்திருக்க வேண்டும்
அடுத்து
கங்கைகரைக்குப்போவோம் கண்ணன் இருப்பிடம் யமுனை நதிக்கரைதானே அது எப்படி கங்கை
ஆயிற்று ?
மாதவி என்றால்
பெண்தானே பெண் மயிலுக்கு தோகை ஏது?
நிறைவாக பொன் எழில்
பூத்த புது வானில் பாடல் வரிகளில்
தென்னை வனத்தினில்
உன்னை முகம் தொட்டு
என்று வருகிறது
தென்னை வனம் என்று சொல்லும் வழக்கம் இல்லை இப்படி மாற்றி எழுத இலக்கிய விதி, இலக்கணக் குறிப்பு எதாவது இருக்கிறதா
தெரியவில்லை
விடை காண முயற்சித்த
அனைவருக்கும் நன்றி
க(இ)டைச் செருகல்
மாதவிப்பொன் மயிலாள் எனது அருமை மைத்துனர் மரபுக்கவிஞர் ஹாஜி அப்துல் முத்தலிப்
அவர்கள் அடிக்கடி சொல்லக்கேட்டது
கவிஞர் வாலியிடம்
எனது மைத்துனர் இத்பற்றிக் கேட்க அவர் சற்றுக் குழம்பிப்போய் என்ன சொல்வது என்று
புரியாமல் அமைதி காத்தாரம் .
மைத்துனர்
மரபுக்கவிஞருக்கு மனமார்ந்த நன்றி
இறைவன் நாடினால்
மீண்டும் தமிழில் சிந்திப்போம்
04112020wed
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment