Saturday, 21 November 2020

நல வாழ்வு


 நல வாழ்வு

கிட்டபார்வை
உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது . இப்போது 25% மாக இருக்கும் இந்தக்குறைபாடு இன்னும் முப்பது ஆண்டுகளில் 50%ஆக உயரும் வாய்ப்பு இருக்கிறதாம் குறிப்பாக ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையில் உள்ள குழந்தைகள் அதிலும் நகர்ப்புறங்களில் இந்தியாவில் வசிக்கும் குழந்தைகளில் ஆறு கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்களாம்
இதற்கு என்ன காரணம் ? ஊட்டச்சத்துக்குறைவா ? நோய் தொற்றா? நுண்ணுயிர்த் தாக்குதலா ?இல்லை இல்லை
நம் வாழ்க்கை முறை மாற்றம்தான் மிகப்பெரிய காரணமாம்
ஓன்று உறங்கும் முறை, , நேரம் மாற்றம் இரண்டு இயற்கை நமக்கு விலையில்லாமல் அள்ளித்தரும் சூரிய ஒளியை விட்டு நாம விலகிப்போனது
நல்ல தூக்கம், நீண்ட தூக்கம், ஆழ்ந்த தூக்கம் இவை கண்ணைப் பாதுகாப்தில் பெரிதும் உதவுமாம்
அடுத்து சூரிய ஒளி. வீட்டில் குளிரூட்டி பயணிக்கும் வண்டியில் குளிரூட்டி , அலுவலகத்தில் மின் தூக்கியில் இருந்து கழிவறை வரை குளிரூட்டி சூரிய ஒளி வேண்டும் என்றால் மேலை நாடுகள் போல் கடற்கரையில் போய் படுக்க வேண்டிய நிலை வரும் போலிருக்கிறது
இதற்கு என்ன செய்யலாம் ?
முதலில் பள்ளிகளில் போதுமான அளவுக்கு காலி இடங்கள், விளையாட்டு திடல்கள் இருக்க வேண்டும் ..ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வகுப்பறைகள் பூட்டப்பட்டு மாணவர்கள் திடலுக்கு அனுப்பப்பட வேண்டும் கைப்பேசிகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும்
இப்போதுள்ள சூழ்நிலையில் நடக்கும் இணைய வகுப்புகள் நிலை மாறியவுடன் கைவிடப்பட் வேண்டும்
மானவர்களுக்கு படிப்புச் சுமை மட்டுப்படுத்தப்பட வேண்டும்
இவையெல்லாம் நடைமுறைப்படுதபட்டால் கிட்டப்பார்வையின் தாக்கம் மட்டுபடுததப்படலாம் என்கிறார்கள்
என் பள்ளி. கல்லூரிப் பருவத்தில் கண்ணாடி என்பது மிக அரிதான ஓன்று இப்போதோ ஆரம்பக் கல்வி மாணவர்களே கண்ணாடி அணிவது மிக இயல்பானதாகி விட்டது
போகிற போக்கைப்பார்த்தால் காதுக்கருவியும் இயல்பான ஒன்றாகி விடும் போல் இருக்கிறது
(நவம்பர் எட்டாம் தேதி (ஹிந்துவில் வந்த கட்டுரையின் மிகச் சுருக்கமான் மொழி பெயர்ப்பு அதன் தலைப்பு
Soak in the Sun, sleep early and tight to avoid myopia )
21112020sat
sherfuddinp.blogspot.com

Also please support and subscribe my channel
My channel link : https://www.youtube.com/channel/UCyi4-LNhZc_24HdcEEgNvNA

No comments:

Post a Comment