கற்றதும் பெற்றதும்
அரிச்சுவடியில்
துவங்கி ஓரளவு குரான் ஓதும் அளவுக்கு அரபு மொழியைக் கற்றது
ஆழ்நிலை தியானம் பயின்றது
எழுத்துப்பணி –
தமிழ் , ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான பதிவுகள் வெளியிட்டது --- முடிந்த வரை
பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுதி வருவது
மூன்று முதுநிலைப்
பட்டங்கள் ஒரு முது நிலைப் பட்டயப்படிப்பு நல்லவிதமாக நிறைவு செய்தது
ஓரளவு மனித மனங்களைப்
புரிந்து தெளிவு பெற்றது
கனவுகள்
அரபு மொழியை
முறையாகப் படித்து பட்டம் , முது நிலைபட்ட்ம் பெறுவது
உளவியல் முதுநிலை
படிப்பு
இதற்கெல்லாம்மேல் மிகத்தரமான
கல்வியை விலையில்லாமல் வழங்கும் ஒரு பள்ளிக்கூடம் துவங்கி அது வளர்ச்சி அடைந்து
ஒரு பல்கலைக் கழகமாக உருவாவது
என்ன இளமை
ஊஞ்சலாடுகிறதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது
கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும் வயது ஏது ?
யார் கண்டது ? இறைவன்
நாடினால் குதிரைகள் என்ன யானைகள் கூட வானத்தில் சிறகடித்து பறக்கலாம்
(பணி ஓய்வு
பெற்று பத்தாண்டுகள் நிறைவு
அதில் விளைந்த
சிந்தனைச் சிதறல் )
01122020tue
sherfuddino.blogspot.com
BLOCKED in FB
No comments:
Post a Comment