திரைப்பாடல் புதிர் நிறைவுப்பகுதி
ஒரு அழகான தமிழ் விருந்தை நேற்று சுவைத்தோம்
விருந்து படைத்த தோழர்கள் சோமசேகர் , செங்கை சண்முகம கணேச சுப்பிரமணியன் , சிவசுப்பிரமணியன்
அசன் அலி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
காழ்ப்புணர்ச்சி அறைகூவல் வீர வசனங்கள் எதுவும் இல்லாமல்
கண்ணியமான முறையில் கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
நிறைவுரையாக
முதலில் என்னைப்பற்றி
எனக்கு தமிழ் இலக்கணம் என்றாலே வேப்பங்காய் . உயர்வு
நவிற்சி அணி , இல்பொருள் உவமை அணி, தளை தொடை
என்று என்னென்னமோ காதில் விழும் ஆனால் மனதில் பதியாது இலக்கணம் புரிந்தால்தான் இலக்கியத்தை முழுமையாக
உணர முடியும் போலும்
அடுத்து எந்தக் கவிஞரின் படைப்பிலும் குற்றம் காணுவது என் நோக்கம்
அல்ல
நீண்ட நாட்களாய் மனதில் தேக்கி வைத்திருந்த சில ஐயங்களைத்
தெளிவு படுத்திக்கொள்வதற்கே என் பதிவு . மிகத் தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது
இருந்தாலும்
துயிலாத பெண் – மிகச் சிறியவயதில் கேட்டதில் இருந்தே மனதில்
ஒரு உறுத்தல் .இன்னும் கூட முழுதாக அகலவில்லை
தென்னை வனம் சரியென்றால் புன்னந்தோப்பும் சரிதானே
மாதவிப்பொன் மயிலாள் பற்றி என் மைத்துனர் மரபுக்கவிஞர்
அவர்கள் கவிஞர் வாலியிடம் கேட்க அவர் அமைதி காத்தார் என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்
கவிஞர்களும்
அவர்கள் படைப்புகளும் காலத்தால் அழியாதவை .( நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்கிறான் ஒரு புலவன் )
எனவே அவர்கள் பற்றி நல்ல ஒரு இலக்கியத் திறனாய்வு நடத்த
எல்லோருக்கும் உரிமை உண்டு
மீண்டும் படைப்பாளிகளுக்கு நன்றி
அவ்வப்போது இது போல் தமிழில் சிந்திப்போம் இறைவன் நாடினால்
11112020wed
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment