Tuesday, 13 April 2021

குரான் - குறிப்புகள் சில 1

 திருமறை –குறிப்புகள் சில 1

குரான் முழுக்க முழுக்க இறைவனின் படைப்பு . இதில் இது முக்கியம் அது முக்கியம் என்று பிரித்துப்பார்க்க முடியாது
குர்ஆனில் வரும் ஒவ்வொரு எழுத்தும் அதை படிப்பவருக்கு நன்மை பயக்கும் .
எடுத்துக்காட்டாக வெறுக்கப்படும் விலங்கின் பெயர் கூட குர்ஆனில் வரும்போது அதைப்படிப்பவருக்கு ஒரு எழுத்துக்கு ஒன்று என மூன்று நன்மை கொடுக்கும் என்பார்கள்
இப்போது எதற்கு அதெல்லாம் என்கிறீர்களா ?
குர்ஆனில் படிக்கும்போது என் சிற்றறிவுக்கு பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிய ஒரு சில செய்திகளை இங்கே தருகிறேன்
முதலில் முதலாம் ஜூசு ( சில குறிப்புகள் மட்டும்)
1.”இஸ்ராயிலின் சந்ததியனரே (children of Israel):”
குர்ஆனில் பல இடங்களில் வரும் சொற்கள் (2:40)
இதற்கு என்ன பொருள் ? இஸ்ராயில் (Israel) என்ற சொல்லுக்கு இறைவனின் அடிமை என்று பொருள்
இது யக்குப் (ஜாகப்) நபிக்கு இறைவனே வழங்கிய பட்டமாகும்
ஆப்ரஹாம் நபியின் மகன் இசாக் நபி (Issac) .இசாக் நபியின் மகன் யகூப் நபி
.யகுப் நபியின் சந்ததியனர் இஸ்ராயிலின் சந்ததியனர் (children of Israel) என்று அழைக்கப் படுகிறார்கள்
2.சப்பாத் (Sabbath) எனும் ஓய்வு தினமாகிய சனிக்கிழமையை ஓய்விலும் இறைவணக்கத்திலும் கழிக்க வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை மீறி வணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டவர்களை குரங்கு போல் மாற்றிய செய்தி
வசனம் 2:65ல் வருகிறது
3.இறைவன் அருள் எனும் பரிசைப்பெற யாருக்கும் தனி உரிமை கிடையாது
முழுமையாக இறைவனுக்கு அடிபணிந்து நல்லது செய்யும் அனைவருக்கும்
இறையருள் எனும் பரிசைப்பெற முழு உரிமை உண்டு (2:112)
4.இறைவனை வணங்கும் திசையை மாற்றுவது ஒரு பெரிய செய்தி இல்லை .அது பற்றி விவாதமோ, கருத்து வேறுபாடோ தேவையில்லாத ஓன்று என்பதை வலியுறுத்தும் இறைவசனம்
“கிழக்கும் மேற்கும் இறைவனுக்கே உரியவை நீங்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் இறைவனை நோக்கியே திரும்புகிறீர்கள் –(2:115)
5.நுஹ் நபிக்குப் பின் ஏக இறைக் கொள்கையை பரப்ப தூதராக இறைவன் இப்ராகிம் நபி அவர்களை நியமித்தான்
இப்ராகிம் நபியின் சந்ததியினர் இஸ்மாயிலின் மக்கள் Children of Ishmael , (அரபு தேசத்தில் வாழ்ந்தவர்கள் – குறைஷிகளும் மற்ற அராபிய வம்சங்களும் இந்தப்பிரிவினர்)இசாக்கின் மக்கள் Children of Isaac( யகுப், யூசுப் , மூசா ,தாவித் ,சுலைமான் ,யஹ்யா ,ஈசா என பல நபிபெருமக்கள் இந்தப்பிரிவைச் சேர்ந்தவர்கள் – இஸ்ரவேலரின் சந்ததிகள் என அறியபட்டவர்கள் ) என இரு பிரிவினர் (2:122 EN 123)
இது முதல் ஜூசின் சுருக்கமோ, விரிவுரையோ,தெளிவுரையோ இல்லை . சில, வெகு சில குறிப்புகள் மட்டுமே
நிறைவாக ஒரு சிறிய வினா ஏற்கனவே ஒரு முறை கேட்டதுதான்
“இஸ்ராயிலின் சந்ததியனரே (children of Israel)”
குர்ஆனில் எத்தனை முறை வருகிறது , ?
முதல் சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி
இந்தப் புனித மாதத்தில் இறைவன் அள்ளிக்கொடுக்கும் அருட்கொடைகள்
அனைத்தும் நம்அனைவருக்கும் முழுமையாக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள்புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
(Source – Towards understanding Quran &Wikipedia )
14042021wed
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment