தமிழ் எங்கள் மூச்சாம் “ என்று பாடினான் புரட்சிக்கவிஞன்
எண்ணிலடங்காத சிறப்புகள் கொண்டது தமிழ் மொழி . அவற்றில் ஒரு சிலவற்றைப்பார்ப்போம்
தமிழ் மொழி- சில சிறப்புகள்
-இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்
-தமிழ் பேசப்படும் நாடுகள் :
இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர்
ஐக்கிய அரபு அமீரகம் ,தென்னாப்பிரிக்கா மொரிசியசு பிஜி
-தமிழ் மொழியின் இலக்கிய மரபு 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது
-தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் தமிழும் ஓன்று
-இவ்வளவு பழமை வாய்ந்த இலக்கிய நடை இன்றும் மக்களுக்குப் புரியும் நிலையில் உள்ளது .எடுத்துக்காட்டு ஆத்திச்சூடி 1000 ஆண்டுகளுக்கு முந்தையது .திருக்குறள் -2000 ஆண்டுகளுக்கு முந்தையது ,
- இடைக்காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன .
பரிதிமாற்கலைஞர் மறைமலை அடிகள் போன்றவர்களின் தனித்தமிழ் இயக்கத்தால் ஆவணங்களிலும் ,மேடைப்பேச்சுகளிலும் அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் வந்தது
-தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ,இந்திய அரசியல் அமைப்பின் எட்டாவது பட்டியலில் 22 மொழிகளில் தமிழ் ஓன்று .;புதுச்சேரி ஒன்றியத்தின் அரசு அலுவல் மொழி தமிழ் .
-இலங்கை, சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது
-தென்னாப்ரிக்காவில் தமிழுக்கு அரசியல் அமைப்பு அங்கிகாரம் அளித்துள்ளது .பல அரசு தமிழ்த் தொடகப்பளிகள் இயங்குகின்றன
-இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்த ஒரே இந்திய மொழி தமிழ்
-தற்போது கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது .--குறிப்பாக திரைப்படங்கள், தொலைக்கட்சியில் . மேடைப்பேச்சாளர்கள் பலரும் தங்களை மக்களுக்கு நெருகமானவர்களாகக் காண்பித்துக்கொள்ள கொடுந்தமிழில் பேசுகிறார்கள்
சின்ன வயதில் லண்டன் பி பி சி தமிழ் ஓசையிலும் ,இலங்கை வானொலியிலும் இனிய தூய தமிழ் கேட்டு மகிழ்ந்ததுண்டு. தற்போது டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளில் தூய தமிழ் ஒலிப்பது காதுக்கு இனிமை . மக்கள் தொலைக்காட்சியில் ஓரளவு நல்ல தமிழ் கேட்க முடிகிறது
தமிழில் நமக்கு நன்கு தெரிந்த சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ் , நாஞ்சில் நாட்டுத் தமிழ் உட்பட மொத்தம் 22 வட்டார வழக்குகள் இருக்கின்றதாம்
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற பல அரசு அமைப்புகளும் ஒரு சில தனியார் அமைப்புகளும் தமிழ் மொழி ஆய்வு, வளர்சிப்பணியில் ஈடுபட்டு வருகின்றன
(மூலம் – விக்கிப்பீடியா)
நிறைவு செய்யுமுன் ஒரு சிறிய வினா :
“தொக்குசா “என்றால் என்ன ?
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
06042021tue
Sherfuddin P
.
No comments:
Post a Comment