“தொக்குசா “என்றால் என்ன ?
இதுதான் நேற்றைய வினா
தொக்குசா என்பது கடலைப் பருப்பும் ஆட்டின் நுரையீரலும் சேர்த்து செய்யப்படும் ஒரு (சுவையான) உணவு வகை
என் பள்ளிகல்விப் பருவத்தில் காரைக்குடியில் இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் .எங்கள் வீட்டில் இதெல்லாம் சமைத்ததில்லை . எங்கள் அத்தாவுக்குப் பிடிக்கும் என்பதால் எங்கள் உறவினர் வீட்டிலிருந்து சமைத்துக் கொடுத்து விடுவார்கள்
மிகச் சரியான முழு விடை எழுதி பாராட்டும் வாழ்த்தும் பெறுபவர்
சகோ சோமசேகர் (பல்துறை வல்லுனர்)
தொக்குசா என்பது எங்கள் ஊரில் நுரையீரலைக் குறிக்கும் என்று எழுதி வாழ்த்தும் பாராட்டும் பெறுபவர்
சகோ அசனலி
எங்கள் பகுதியில் இந்த உணவு கிடையாது என்கிறார் சகோ ஞாழல் மலர்
இது தமிழ்ச் சொல்லா என்ற ஐயம் சகோ வழிக்கரை வடிவேலன் . எங்கள் பகுதியில் புழங்கும் சொல் என்பதால் தமிழாகத்தான் இருக்கும் என்பது என் கருத்து
தொப்புசா (ஈரல் சமையல்) தெரியும் என்கிறார் சகோ மீரா முஸ்டாக்
அனைவருக்கும் நன்றி,
வாழ்த்துகள்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
07042021wed
Sherfuddin P
No comments:
Post a Comment