Sunday, 18 April 2021

குரான் குறிப்புகள்சில 6


 








 



திரு மறை  சில குறிப்புகள் 6

19042021mon

1.முனாகிபின்கள் எனப்படும் வஞ்சகர்களின் குணங்களை எடுத்துரைக்கும் இறைவன்

“:இறைவனை ஏமாற்ற நினைத்து அவர்கள் இறைவனிடம் ஏமாந்து போகிறார்கள் . மிகவும் குறைவாகவே இறைவனை நினைக்கும் அவர்கள் இறைவணக்கத்தில் பிறர் பார்ப்பார்கள் என்பதற்காக மிகத் தயக்கத்துடன் ஈடுபடுகிறார்கள் “ என்கிறான் (4 142-147)

2.ஈசா நபி சிலுவையில் அறையப் படவோ கொல்லப்படவோ இல்லை .இது பற்றிப் பொய் சொல்பவர்கள் மனம் திருந்தி ஏக இறைவழியில் சேர்ந்தால் மீட்புப் பெறலாம்( 4}153-162)

 

3.முந்தய நபிமார்களான நுஹ், இப்ராகிம், மூசா ஈசாவுக்கு இறைவன் அனுப்பிய அதே செய்திதான் புனித மறை குரானிலும் வருகிறது என்று சொல்லும் இறைவன் குரானின் புனிதத்துவத்துக்கும் உண்மைக்கும் அவனே சான்று சொல்கிறான் .ஏக நிறையில் நம்பிக்கை கொள்ளவும் கட்டளை இடுகிறான் (4:163-171)

 

4.ஈசா நபி ஏக இறைவனை வணங்கும் உண்மையான இறைத் தூதராய் இருந்தார் (4 172-173)

5.குழந்தை இல்லாதவர்களின் சொத்துப்பிரிவினை பற்றி வசனம் 4:176ல் வருகிறது

 

6.வசனம்   5:3

தடுக்கப்ப்ட்ட உணவுகள் பற்றி முழுமையாகச் சொல்கிறது .மேலும் ஒரு மிக முக்கியமானசெய்தி இறைவன் சொல்கிறான்

“இன்று நான் உங்கள் மதத்தை முழுமை அடையச் செய்து விட்டேன் .இந்த அருட் கோடையை முழுமையாக உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் .உங்களை இசுலாத்தில் இணைத்து விட்டேன்

இந்த வசனம் பெருமானாரின் நிறைவுப் பேருரையின்போது ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறக்கியருலப்பட்டதாகச் சொல்லப்படுகிறது

 

 

7.உடல் சுத்தி (வுது) செய்யும் முறை, தண்ணீரில்லாமல் உடல் சுத்தி செய்யும் (தயம்மும்) முறை வசனம் 5:6ல்

8.எதிரிகள் நாயகங்களையும் அவர்களுடைய தோழர்களையும் கொல்ல செய்த சூழ்ச்சி , எப்படி இறைவன் அவர்கலைக் காப்பாற்றினான் என்பது  5:7-11ல்

9.முந்தய வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வேதங்களை புறந்தள்ளி, இறைவணக்கம், தருமத்தை தங்களைக் கடவுளின் குழந்தைகள் என்று பொய் சொன்னார்கள்

 

10.ஆதம் நபியின் இரு மகன்களுக்குள் பகை ஏற்பட்டு, அது கொலையில் முடிந்து, இறை அருளால் ஒரு காக்கை தரையைத் தோண்டியதைப்பர்த்து பாடம் கற்று தரையைத் தோண்டி கொலையுண்டவரின் உடலைப் புதைத்த நிகழ்வு 5:27-31

11.சமூகக் குற்றமான திருட்டுக்கு கை வெட்டப்படும் கடுமையான தண்டனை 5:38

அற்பமான திருட்டு, உணவுப் பொருள் திருட்டுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பது நபிகள் நாயகம் சொன்ன விளக்கம்

 

12.எந்த சமுதாயமாக இருந்தாலும் இறைவன் விதித்த விதிகளின் படியே தீர்ப்பு, நீதி வழங்க வேண்டும்  (5:48-50)

13.ஏக இறைவன், நபி பெருமான் உங்களோடு இருக்கும் இறை நம்பிக்கையாளர்கள் இவர்கள் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பாய் இருப்பவர்கள்

இது குரான் ஜூசு

6 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

நேற்றைய வினா:

அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்;

இது எந்த வசனம் ?

விடை

மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன். (4:133)

 

இன்றைய வினா

சத்திய வழி என்பது ஒரு சமுதாயத்துக்கு சொந்தம் அல்ல .இறை நம்பிக்கையோடு செயல்படும் அனைவருக்கும் இது பொதுவானது என்ற கருத்தில் வரும் இறை வசனம் எது ?

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இ(க)டைச் செருகல்

கட்செவியில் தோழர் ஒருவர் அனுப்பிய பதிவு

காணொளி

 

இதற்கு நான் போட்ட எதிர் பதிவு

எனக்கு சில கேள்விகள் 

1.நம் நாட்டில் மொத்த சக்காத் தொகை ஆண்டுக்கு எவ்வளவு? எதாவது கணக்கு (உத்தேசமாகவாவது ) இருக்கிறதா ?

2.இவ்வளவு பெரிய தொகை எங்கே போகிறது, எப்படி செலவாகிறது?  

3.எனக்குத் தெரிந்து நம்மவர்கள் நடத்தும் இலவச மருத்துவமனையோ , பள்ளியோ கல்லூரியோ கிடையாது இது ஏன் ?

 4. பிற மத வழிபாட்டுத் தலங்கள் பலவற்றில் தினமும் பல்லாயிரககனக்கானோருக்கு தரமான உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் நம் மதத்தினர் இது போல் எதுவும் செய்வதாய்த் தெரியவில்லை ..

5.நம்மவர்கள் நடத்தும் சில பள்ளிகளில் கட்டணம் லட்சக்கணக்கில் இருக்கிறது .ஐக்கிய ஜமாத்தார் நடத்தும் பள்ளிகளில் கூட கட்டணம் அதிகம் என்று செய்தி வருகிறது 6..சக்காத் வாங்கி வறுமை நீங்கி வாழ்க்கையில் யாரும் முன்னேறியதாக எனக்குத் தெரியவில்லை.         

மனதில் தோன்றியதை எழுதி விட்டேன் . தவறாக இருந்தால் இறைவன் மன்னிப்பான்

. சமுக சிந்தனையாளர்கள் இது பற்றி சிந்தித்து செயல் பட வேண்டும் . அவ்வளவு பணமும் சரியான முறையில் செலவளிக்கப்பட்டால் நம் சமுதாயம் எங்கோ போய்விடும்

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

 

19042021mon

Sherfuddin P

 

 

 

No comments:

Post a Comment