Thursday, 15 April 2021

குரான் -குறிப்புகள் சில 3

 திரு மறை – குறிப்புகள் சில -3

16042021fri
1.இறைவனின் மாட்சிமையை ஒரே வசனத்தில் சொல்லும் வசனம் 2:255 ஆயத்துல் குர்ஷி என்ற பெயரில் மிக அதிக அளவில் மனனம் செய்யப்பட்டு வருகிறது
2.இசுலாமிய மார்க்க்கத்தில் எந்த வித நிர்ப்பந்தமும் கிடையாது என்ற வசனம் 2:256- இதுவும் மில அதிக அளவில் எடுத்துச் சொல்லப்படும் வசனம்
3.இறைவன் எப்படி பிரிந்து போன உயிரை மீட்கிறான் என்பதும் இப்ராஹீம் நபியின் மனத்திருப்திக்காக அறுத்துப் பிரித்து வைக்கபட்ட பறவைகளை உயிர் பெற்று வரச் செய்த நிகழ்வும் வசனம் 2:259,260 ல் வருகிறது
4.தருமத்தின் சிறப்பு பற்றி மிகவும் வலியுறுத்தும் இறைவன், பிறரிடம் கனிவாக் அன்பாகப் பேசுவதும் அவர்கள் தவறுகளை மன்னிப்பதும் தருமத்துக்கும் மேலான தருமம் என்கிறான்
மேலும் வறுமையை வெளிக்காட்டாமல் இருப்பவர்களை தேடித் பிடித்து அவர்களுக்கு பொருளுதவி செய்யச் சொல்கிறான் இறைவன் (2;261-266 270 -273)
5.வணிகத்தில் பொருள் வாங்கி விற்பதும் வட்டி போல்தான் என்று வட்டியை நியாயப் படுத்துபவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கும் இறைவன் வர வேண்டிய வட்டி அனைத்தையும் தள்ளுபடி செய்யும்படி நல்லடியார்களை வலியுறுத்துகிறான் .மேலும் கடன் வாங்கியவர் வசதிக்குறைவாக இருந்தால் கடனைத் தள்ளுபடி செய்வது ஒரு தருமம் என்கிறான் (2:275-280)
6.வணிக பரிவர்த்தனைகளையும், கடன் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளையும் எழுதிகொள்ளவேண்டும் (282-283)
7.ஒருவரின் சக்திக்கு மேல் அவர்மேல் எந்தப்பொறுப்பையும் சுமத்துவதில்லை என்கிறான் இறைவன் (2:286)
8.தவ்ராத், இன்ஜீல் போன்ற முந்தய வேதங்களை இறக்கி வைத்த இறைவனே குரானையும் இறக்கி வைத்து முந்தய வேதங்களை உறுதிபடுத்துகிறான்
9.குரான் வசனங்கள் இரு வகைப்படும்
முக்கம் எனப்படும் மிகத் தெளிவ்பான வசனங்கள் ஒரு வகை முதஷாபிகத்துன் எனும் வசனங்கள் அவற்றின் பொருள் மனித அறிவுக்கு எட்டாத வை (3:7)
10.இறை நம்பிக்கை இல்லாதவர்களை அவர்கள செல்வச் செழிப்போ, பிள்ளைகளோ காப்பாற்றாது
பத்ருப் போரில் இறைநம்பிக்கையாளர்களை விட மூன்று பங்கு பெரியதான எதிரிப்படையைப் தோற்கடித்தது இறைவன் தன்னை நம்பியவர்களுக்கு கொடுத்த வெற்றி ((3{13)
11.தான் நாடியவருக்கு இறைவன் ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான் (3:21)111111
12.இறைவனை உண்மையாக நேசிப்பவர்கள் நபி பெருமான் வழியில் நடக்க வேண்டும் (3:31,32)
13.ஆதம் நபி, நுஹ் நபி, இப்ராஹீம் நபியின் வழிதோன்றல்கள், இம்ரானின் சந்ததியினர் ஆகியோர் மனித குலத்தில் மிகவும் உயர் நிலை அடைந்தவர்கள் (3:33)
14.ஈசா நபியின் தாய் மரியம் அலை அவர்கள் பிறப்பு, அவர்களுக்கு இறைவன் அருளிய உயர்நிலை, ஈசா நபியின் பிறப்பு,அந்த நபிக்கு இறைவன் அருளிய சில சிறப்புகள் , எப்படி இறைவன் ஈசா நபியை தன்னிடம் அழைத்துக் கொள்வான் போன்ற பல செய்திகள் வசனம் 3:42 –3:55 ல் சொல்லப்படுகின்றறன
15.இப்ராஹீம் நபி ஒரு உண்மையான முசுலீமாகவே இருந்தார். அவர் யூதரோ ,கிறித்துவரோ இல்லை ( 3:67)
16.இசுலாம் தவிர வேறு எந்த மதமும் இறைவனுக்கு ஏற்புடையது இல்லை (3:83-85)
17.முகமது நபி (ஸல் )அவர்கள் பற்றி முந்திய நபிமார்கள் அனைவருக்கும் இறைவன் அறிவித்து அவர்கள் கூட்டத்தினர் முகமது நபி ( ஸல்) அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி மொழி வாங்கியிருக்கிறான் (3:81,82)
இது குரான் ஜூசு மூன்றின் சுருக்கமோ, தொகுப்போ ,விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
நேற்றைய வினா
ரமலான் புனித மாதமாகக் கருதப்படுவது ஏன்?
விடை :
ரமலான் மாதத்தில்தான் புனித குரான் இறக்கியருளப் பெற்றது
“--------ஆகவே எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் (2:185)
இன்றைய வினா
“ஒரு சிலரிடம் ஒரு பொற்குவியலை ஒப்படைத்தாலும் நீங்கள் கேட்டவுடன் திருப்பிக்கொடுத்து விடுவார்கள் --------“
இது எந்த இறை வசனத்தில் வருகிறது ? பொருள் என்ன ?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
16042021fri
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment