Wednesday, 28 April 2021

குரான் குறிப்புகள் சில - 16

 திரு மறை சில குறிப்புகள் 16

29042021thu
1.18:71-82)கிசர் ( Khizer)- என்பது மூஸா நபி பாடம் கற்க தேடிச்சென்ற நல்லடியார் பெயர் . அவர் ஒரு படகின் நடுவில் ஓட்டை போடுவதைப்பார்த்த மூஸா அது பற்றிக்கேள்வி கேட்க அவர் இதைத்தான் நான் சொன்னேன் நீ என்னோடு ஒத்து வர முடியாது என்று நீ போய்விடு என்று சொல்ல,மூஸா மனிப்புக்கேட்டுக்கொண்டபின் அவர்கள் பயணம் தொடர்கிறது .
அடுத்து குற்றம் எதுவும் செய்யாத ஒரு இளைஞனை கிசர் கொன்றுவிடமூஸா கேள்வி கேட்பதும் கீசர் சினம் கொள்வதும் மூஸா மன்னிப்புக் கேட்ப்தும் மீண்டும் நடக்கிறது
மூன்றாவதாக ஒரு ஊரில் மூசாவுக்கும் கிசருக்கும் உணவு தர மறுக்கிறார்கள் .அங்கு இடிந்த நிலையில் இருக்கும் சுவரை சரி செய்த கிசர் அதை சரி செய்து கொடுக்க அதற்கான ஊதியம் வாங்கியிருக்கலாமே என மூஸா கேட்க கிசர் –நீயும் நானும் பிரியும் வேளை வந்து விட்டது .அதற்கு முன் நான் என் செயல்களுக்கு விளக்கம் சொல்கிறேன் என்று சொல்லி – அந்தப்படகு சில ஏழைகளுக்கு உரியது . அந்த ஊர் கொடுங்கோல் மன்னன் பழுதில்லா படகுகளை அநியாயமாய்க் கைப்பற்றிக் கொண்டிருந்தான் . அதைத் தடுக்கவே படகில் ஓட்டை போட்டேன்
அடுத்து அந்தச் சிறுவன் இறைவழியில் நடக்கும் அவன் பெற்றோரை வழி கெடுத்துவிடுவதைத் தடுக்கவே அவனைக் கொலை செய்தேன்
இடிந்து நின்ற சுவர் இரு ஆதரவற்ற சிறுவர்களுக்கு உரியது .அதற்குக் கீழ் நல்வழியில் நடந்த அவர்கள் பெற்றோர் தம் பிள்ளைகளுக்காக மறைத்து வைத்திருக்கும் புதையல் இருக்கிறது .எனவேதான் நான் கூலி வாங்கவில்ல்லைஎன்று விளக்கினார்
2.18:83 -108) துல்கர்னைன் என்னும் அரசன் வெற்றிப்பயணத்தில் பூமியின் எல்லையை (கதிரவன் மறையும் இடத்தை அடைகிறார் .அங்குள்ள மக்கள் அவன் சொல்படி நடப்பதாகச் சொல்கின்றனர் .மீண்டும் நீண்ட பயணம் செய்த மன்னன் வெய்யிலில் இருந்து பாதுகாப்புப் பெறாத ஒரு சமுதாயத்தைக் காண்கிறார் .மீண்டும் பயணம் செய்து இரு மலைகளுக்கு இடையில் வாழும் ஒரு வெகுளியான சமுதாயத்தை சந்திக்கிறார் . அவர்கள் விருப்பப்படி (Gog and Magog)யஜூஜ், மஜூஜ் மக்களிடமிருந்து அவர்களைப்பாதுகாக்க செம்பாலும் இரும்பாலும் ஒருவலுவான அரண் அமைத்துக் கொடுத்தார் .இது இறைவன் உங்களுக்கு அருளிய கருணையாகும் .தீர்ப்பு நாளில் இந்த அரண் உடைபட்டுவிடும் என்று சொன்னார்
தீர்ப்பு நாளன்று தீய வழியில் சென்றவர்க்கு நரகம் , நல்லவர்களுக்கு சுவனம் நிச்சயம்
3. (19:1-15 ) இறைவன் ஜக்கரிய்யவுக்கு அவர் வேண்டியபடி ஜான் (யஹ்யா)என்ற இதுவரைக்கும் யாருக்கும் இல்லாத பியருடன் ஒரு ஆண் குழந்தையைகொடுக்கிறான் .ஜக்கரியாவின்முதுமையில் பிறந்த அந்தக் குழந்தை மிகவும் ஞானமுள்ளதாக இருக்கிறது
இறைவன் அருளாலும் அற்புதத்தலும் மரியம் அழிய அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது . ஈசா என்ற பெயர் கொண்ட அந்தக் குழந்தை தொட்டில் குழந்ஹையாக இருக்கும்போதே பேசுகிறது ,தன் தாய் மரியம் மீது அவதூறு சொபெசுபவகர்களுக்கு மறு மொழி கூருகிறது “ நான் இறைவனின் அடியான், இறைவனின் தூதர் நபியாவேன் . .எனக்கு வேதம் அருளபட்டிருக்கிறது . நான் என் தாய்க்கு கடமைப்பட்ட மகனாய் இருப்பேன் .தொழுகை, தருமத்தை நிலை நாட்டுவேன் “ என்கிறது
4.19:41-50 இப்ராகிம் நபி சரித்திரம் மீண்டும் இங்கு நபி பெருமான் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது
5.19:51-65 இறைவன் அருளால் நபித்துவம் பெற்ற நபிமார் மூஸா, இஸ்மாயில் ,இத்ரிஸ் பற்றி சொல்லப்படுகிறது
6.66-82 இறை நம்பிக்கையாளர்கள் , நம்பிக்கை அற்றோர் – இவ்வுலக வாழ்வு ,மறுஉல்க வாழ்வு
எப்படியிருக்கும் என்று விவரிக்கப்படுகிறது
7.19:83-98 இறைவனுக்கு மகன் உண்டு என்று சொல்பவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்
8.201 - 8வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்த இறைவன் இறக்கி வைத்த புனித குரான் ஒரு நல்ல வழிகாட்டும் அறிவுரை ஆகும்
9.20:9 - 24 மூசா நபிக்கு தூர்மலையில் நபித்துவம் வழங்கப்பட்டு அவர் பிர்அவுனிடம் அனுப்பப்பட்டார்
10.20:25-54 மூசா நபி, தனக்கு மன வலிமை வேண்டும், நாவிலுள்ள முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும், தனக்கு துணைக்கு ஒருவர் தன் குடுபத்தில் இருந்து வேண்டும் என்று இறைவனிடம் கேட்க அவை எல்லாவற்றையும் இறைவன் கொடுத்தான் .மூசாவின் அண்ணன் ஹாருனுக்கு நபி பட்டம் வழங்கி மூஸாவுக்குத்வுக்குத் துணையாக அவரை அனுப்பினான்
பிர் அவுன் மூசாவிடம் உங்கள் இறைவன் யார் என்று கேட்க ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அமைப்பை உண்டாக்கி வழி காட்டியவனே எங்கள் இறைவன் என்கிறார் மூசா
அப்படிஎன்றால் நம் முன்னோர் நிலை என்ன என்கிறான் பிர் அவுன் கேட்க இது பற்றி அந்த இறைவனே அறிவான் என்று சொல்கிறார்
11.2056 98- முன்பு பல இடங்களை சொல்லப்பட்ட மூசாவின் கதை திரும்பவும் வருகிறது
12.20:105 - 112 தீர்ப்பு நாளன்று மலைகள் தவிடு பொடியாகிவிடும் . பூமி ஒரே சீரான பரந்த வெளியாகிவிடும்
13.(20:114) இறைவா என் அறிவை விசாலமானதா ஆக்கி வைப்பாயாக என்று குரான் ஓதும்போது கேட்க வேண்டும்
14.(20:132)உங்கள் குடும்பத்தினரை தொழச் சொல்லுங்கள் .அனைவர்க்கும் உணவளிப்பவன் இறைவனே ..இறையச்சம்கொண்டவர்கள் நல்ல மறுமை பெறுவார்கள்
இது குரான் ஜூசு
16ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில் மூசா ,கிசர் உரையாடல், மன்னர் துல்கர்னைன் பயணம்,ஈசா நபியின் பிறப்பு அற்புதம் ,இன்னும் பல செய்திகள் சொலப்படுகின்றன. இறைவன் நாடினால் எப்போதாவது அவை பற்றி சிறிது விரிவாகப்பாப்ர்போம்
ஒரு பெண்ணின் பெயரில் வரும் ஒரே சுராஹ் – சூராஹ் 19 மரியம் இந்தப்பகுதியில் வருகிறது . குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே பெண் என்ற சிறப்பும் ஈசா நபியை ஈன்றெடுத்த மரியம் அலைக்கு உண்டு
நேற்.றைய வினா
பிடித்து வைத்திருந்த மீன் ஒரு மாறு பட்ட வழியில் கடலுக்குள் போனது பற்றி சொல்லும் வசனம் எது?
விடை (18:63)
மூசா நபி தன் பணியாளரிடம் சாப்பிட மீனைக் கொண்டுவருமாறு சொல்ல,அவர் “ நாம் முன்பு ஒய்வு எடுத்த இடத்தில் மீன் ஒரு வித்தியாசமான முறையில் கடலுக்குள் போய். நான் இதை உங்களுக்கு சொல்ல மறந்துவிட்டேன் “ என்கிறார் "
இன்றைய வினா
கடலையும் குரானையும் தொடர்பு படுத்தும் வசனம் எது
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
2942021 thu
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment