Thursday, 8 April 2021

குரான் -சொத்துப் பிரித்தல்

 சொத்துப் பிரித்தல் – இசுலாமிய வழி

சொத்து உரிமை பற்றிய இசுலாமியக் கோட்பாடு மற்ற மதக்கோட்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது
இந்த அடிப்படையை நன்கு புரிந்து மனதில் தெளிவாக நிறுத்திக்கொண்டால் பல குழப்பங்கள், புரிதல் இல்லாமை எல்லாம் விலகி விடும்
அந்த அடிப்படை என்ன என்பதை சுருக்கமாக , தெளிவாக விளக்கவே இந்தப்பதிவு
ஒரு பிள்ளை பிறந்ததுவுடன் அது தன் பெற்றோரின் சொத்துக்கு உரிமை உடையதாகி விடுகிறது என்பது பல மதங்களின் கோட்பாடு .
இன்னும் HUF (Hindu Undivided Family) என்ற அமைப்பில் ஒரு ஆண் குழந்தை கருவில் உருவானவுடனே அந்த அமைப்பில் உரிமை உள்ளதாகிவிடுகிறது என்று சொல்வார்கள்
இதற்கு முற்றிலும் மாறாக இசுலாத்தில்
பிறப்பினால் யாருக்கும் தன் பெற்றோர் சொத்தில் உரிமை வருவதில்லை
பெற்றோர் காலத்திற்கு பின் எந்தக் குழந்தை உயிர்வாழ்கிறதோ அதற்கு மட்டுமே சொத்தில் உரிமை , பங்கு வருகிறது
ஒரு சிறிய எடுத்துக்காட்டு
ஒரு தந்தைக்கு இரு மகன்கள் – இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகளும் இருக்கிறார்கள்
ஒரு மகன் தன் தந்தை உயிருடன் இருக்கும்போதே காலமாகி விடுகிறார்
மற்ற மகன் தன் தந்தைக்குப்பின் காலமாகிறார்
இதில் தந்தைக்கு முன் காலமானவருக்கோ அவரின் குடும்பத்துக்கோ தந்தையின் சொத்தில் பங்கு எதுவும் கிடையாது
அடுத்த மகனுக்கு சட்டப்படி சொத்தில் உரிமை உண்டு
மேலோட்டமாகப் பார்த்தால் இது பெரிய அநீதி, தவறு என்பது போல் எல்லோருக்கும் தோன்றும் (இறைவன் மன்னிப்பானாக )
இறைவன் இயற்றிய சட்டத்தில் எப்படி தவறு, அநீதி வரும் ?
ஆழ்ந்து சிந்தித்தால் இதன் விளக்கம் தெளிவாகும்
Inheritance of property in Muslim law comes only after the death of a person.
Any child born into a Muslim family does not get his right to property on his birth.
If an heir lives even after the death of the ancestor, he becomes a legal heir and is therefore entitled to a share in the property.
இன்னொரு முக்கியமான செய்தி – நான் சம்பாதித்தது என் சொத்து .இதை நான் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பேன் –என்பதற்கு இசுலாத்தில் இடம் இல்லை . நான் வாழும் காலத்தில் நான் சில விதிகளுக்கு உட்பட்டு என் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் . ஆனால் என் காலத்தின் பின் எனது சொத்தில் 1/3 பங்கு மட்டுமே வாரிசு அல்லாத மற்றவர்களுக்குப் போகும் படி எழுதி வைக்கலாம் .
2/3 பங்கு வாரிசுகளுக்கு மட்டுமே போக வேண்டும்
எல்லாற்றிற்கும் மேலாக இறைவன் படைத்த சட்டங்களை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது.
“மேலும் பங்கீடு செய்யும்போது, (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வரியவர்களோ வந்தால் அச்சொத்தில் இருந்து அவர்களுக்கு சிறிது வழங்குங்கள் “----
-----(திருமறை 4:8)
நிறைவு செய்யுமுன் ஒரு சிறிய வினா
சொத்துப்பங்கீடு பற்றி சொல்லும் முக்கியமான மூன்று இறை வசனங்கள் எவை ?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
08042021thu
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment