திரு மறை சில குறிப்புகள் 12
25042021sun
1.(11:39-49)இறைவன் ஆணைப்படி நுஹ் நபி ஒரு கப்பல் கட்ட த்துவங்க , அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அவரை ஏளனம் செய்கின்றனர் (தண்ணீரே இல்லாத இடத்தில் கப்பல் கட்டுவது கண்டு )
2.யார் ஏளனத்துக்கும் வேதனைக்கும் உள்ளாவார்கள் என்பது போகப் போகத் தெரியும் என நுஹ் நபி சொல்கிறார்
3.இறை கட்டளைப்படி பூமி உலை போல பொங்கி வெள்ளம் பெருகியது . நுஹ் நபியிடம் இறைவன் சொல்கிறான் : “ஒவ்வொரு உயிர் வகையிலிருந்தும் ஆண் பெண் கொண்ட ஒரு இணையை கப்பலில் ஏற்றுங்கள் . உங்கள் மக்களில் இறை நம்பிக்கை கொண்ட அந்த வெகு சிலரையும் , உங்கள் குடும்பத்தாரையும் ஏற்றிகொள்ளுங்கள் இந்தக்கப்பல் நிற்பதும் ஓடுவதும் என் கட்டளைப்படியே “
கப்பல் அலைகளில் மிதந்து செல்ல, நுஹ் நபி தன் மகனை கப்பலில் ஏறக் கூப்பிட, அவன் நான் ஏதாவது மலையில் ஏறி உயிர் பிழைத்துக் கொள்வேன் என்றான் ஒரு பேரலை வந்து மகனை மூழ்கடித்துவிட்டது
இறைவன் ஆணைப்படி மழை குறைந்து பூமியில் நீர் வடிய கப்பல்
ஜூதி மலை மேல் தங்கியது .இதற்குள் நம்பிக்கை இல்லாத அனைவரும் நீரில் மூழ்கடிக்கப் பட்டனர் .
தன் மகன் உயிர் பற்றி நுஹ் நபி இறைவனிடம் கேட்க , அவன் தீயவன் ,உங்களைச் சேர்ந்தவன் அல்ல . அவனுக்காக பரிந்து பேசுவது அறியாமை என்றான் இறைவன். உடனே இறைவனிடம் மன்னிப்புக் கோரினார் நபி
4.நபியே மலையை விட்டு இறங்கி கீழே செல்லும் .உமக்கு எமது பாதுகாப்பும் , அருளும் உண்டு .சில சமுதாயங்கள் இன்னும் புதிதாக தோன்றும் என்று இறைவன் சொன்னான்
5.முகமது நபி ஸல் அவர்கள் அறிந்திராத இந்த நுஹ் நபியின் சரிதையை இறைவன் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான்
6.11:50-60 ஹுத் நபி பற்றிய நிகழ்வு
7.11:61-68 ஸாலிஹ் நபி பற்றி
8.(11:69-76 )லுத் நபியைக் காணச்சென்ற வானவர்கள் இப்ராகிம் நபியை சந்தித்து அவருக்குப் பிறக்கப்போகும் இஸ் ஹாக் பற்றியும் இஸ் ஹாக் மகன் யாகூப் பற்றியும் நற்செய்தி கூற இப்ராஹிமின் மனைவி வயதில் மூத்த் எங்களுக்கு எப்படிப் பிள்ளை பிறக்கும் என்று ஐயம் கொள்ள இது இறைவன் உங்களுக்கு அருளிய அருட்கொடை இது பற்றி ஐயம் வேண்டம் என்று வானவர் கூறினார்
மென்மையான உள்ளம் கொண்ட இப்ராகிம் நபி லூத் சமுதாயதுக்குக்காக பரிந்து பேச வானவர்கள் இது இறைவன் முடிவு செய்து விட்ட ஓன்று. இது பற்றிப் பேசாதீர்கள் என்றனர்
9.(11:77-83) லூத் நபி தம் மக்களிடம் பேசி அறிவுரை கூறியது , அவர்கள் அவரை நிராகரித்ததோடு வானவர்களையும் தீய எண்ணத்துடன் அணுகியது , இறைவன் சாபத்தால் கல் மழை பொழிந்து அவர்கள் அழிக்கப்பட்டது
10.சுராஹ் 12 யூசுப் – இந்த சூராவுக்கு ஒரு தனி சிறப்பு- சூராஹ் முழுக்க யூசுப் நபியின் வரலாறு ஒரு அழகிய கதைபோல முழுமையாகச் சொல்லப்
படுகிறது .
11.நபியே உமக்குத் தெரியாத பல செய்திகளை நாம் குரான் மூலம் அழகிய கதையாகச் சொல்லி தெளிவு படுத்துகிறோம் என்று இறைவன் சொல்கிறான்
யூசுபின் சகோதரர்கள் ( மாற்றாந்தாய் மக்கள் ) அவர்கள் எண்ணிக்கையில் நிறைய இருந்தாலும் அவர்கள் தந்தை (யகூப்நபி) யுசுபிடமும் அவரது தம்பியிடமும் அதிகப் பாசம் காட்டுவதால் பொறாமை கொண்டு யூசுபை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று நினைக்க , ஒருவர் - கொல்ல வேண்டாம் எங்காவது ஆழமான குழியில் போட்டு விடலாம் என்கிறார்.
யூசுபை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக அவர்கள் தந்தையிடம் சொல்லி வேட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு யூசுபை ஒரு இருட்டான கிணற்றில் தள்ளி விட்டு யூசுபை ஓநாய் தின்று விட்டதாக தந்தையிடம் பொய் சொல்கிறார்கள் . அவர் அதை நம்ப மறுத்தாலும் வேறு வழியின்றி பொறுமை காத்து இறைவனிடம் வேண்டுகிறார் ,
யூசுபை கிணற்றில் கண்ட ஒரு வணிகக் கூட்டத்தினர் அவரை சொற்ப விலைக்கு விற்று விடுகிறார்கள்
அவரை வாங்கியவர் தன் மனைவியிடம் இந்தப்பையனை நன்றாகக் கவனித்துக்கொள் . தேவைப்பட்டால் நாம் அவனை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்
சிறுவனாக இருந்த யூசுப் பருவம் அடைந்த போது இறைவன் அவருக்கு நீதி வழங்கும் ஞானத்தயும் அறிவையும் வழங்கினான்
யூசுப் வளர்ந்த வீட்டின் தலைவி ,அறைக் கதவை தாழிட்டு விட்டு தவறான நோக்கத்துடன் யூசுபை அழைக்கிறார் .அந்தப்பெண் நெருங்கி வரவர இறைவன் நல்வழியைக் காண்பித்து யூசுபை காப்பாற்றி விட்டான்
இருவரும் ஒருவரை ஒருவர் முந்தும்படி வாசலை நோக்கி ஓட , யூசுபின் சட்டையை அந்தப்பெண் பின்னாலிருந்து கிழித்து விடுகிறார் .வாசலில் தன் கணவரைக் கண்ட அந்தப்பெண் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்த யூசுபை சிறையில் அடைத்துக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொய் சொல்கிறார்
யூசுப் அதை மறுத்து அந்தப்பெண்தான் தவறு செய்தார் என்று சொல்கிறார்
அங்கு வந்த பணிப்பெண் யூசுபின் சட்டை முன்பக்கம் கிழிந்திருந்தால் யூசுப் தவறு செய்தவர் . மாறக சட்டடை பின் பக்கம் கிழிந்திருந்தால் அந்தப்பெண்தான் தவறு செய்தவர் என்று சொல்கிறார் .யூசுபின் சட்டை பின்பக்கம் கிழிந்திருந்தது கண்டு உண்மை அறிந்து கொண்ட இல்லத் தலைவர் தன் மனைவியை யூசுபிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்
12.அவர் ஊரின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் .ஊரெங்கும் தலைவர் மனைவி தன் வீட்டுப் பணியாளரிடம் தவறாக நடக்க முற்பட்டார் என்ற பேச்சு பரவியது . தலைவர் மனைவி ஊரில் உள்ள உயர்குலப் பெண்களை விருந்துக்கு அழைத்தார் .இருக்கைகளில் சாய்ந்தபடி அவர்கள் பழங்களை கத்தியால் நறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவர்கள் மத்தியில் யூசுபை வரும்படி செய்தார் .அவர் அழகில் மயங்கிய பெண்கள் அனைவரும் கத்தியால் தங்கள் விரல்களை நறுக்கிக் கொண்டனர் .இது மனித அழகல்ல தெய்வீக அழகு என்று வியந்தனர் .தலைவர் மனைவி “ இவனிடம் நான் மயங்கியது உண்மைதான் ,ஆனால் அவன் மறுத்து விட்டான் . அவன் தண்டனைக்கு உள்ளாவான் “என்றார் .
13.இறைவா, நான் இந்தப் பெண்களிடம் மயங்கி தவறு செய்வதை விட சிறைக்குப் போவதையே விரும்பிறேன் “என்றார். தவறு செய்யாத யூசுப்பைஅவர் விரும்பியபடி சிறைக்கு அனுப்பி வைத்தான் இறைவன்
14.சிறையில் இருந்த ஒருவர் தான் மது பிழிந்தெடுப்பதுபோல் கனவு கண்டேன் என்றார் .இன்னொருவர் தம் தலையில் சுமநது சென்ற ரொட்டிகளை பறவைகள் தின்பது போல் கனவு கண்டேன் என்றார். இருவரும் யூசுபிடம் கனவுகளுக்குப் பலன் கேட்டனர் .
15.மது பிழிவது போல் கனவு கண்டவர் அரசனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார் .அவர் தலையை பறவைகள் உண்ணும்என்று சொன்னார் யூசுப்.
16.மது பிழிவது போல கனவு கண்டவரிடம் நீங்கள்அரசரை சந்திக்ம்போது என்னைப்பற்றி ச்சொல்லுங்கள் என்றார் .ஆனால் அவர் சைத்தானின் செய்கையால் சொல்ல மறந்து விட்டார் எனவே யூசுப் இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்
17.ஒருநாள் அரசனுக்கு தாம் கண்ட கொழுத்த பசுக்கள், மெலிந்த பசுக்கள், முற்றிய சோளக்கதிர், காய்ந்த சோளக்கதிர் பற்றிய கனவுக்கு விளக்கம் கேட்டார்.
இது குழப்பமான கனவு ,எங்களுக்கு பலன் என்னவென்று தெரியவில்லை என்றனர் அவையோர்
18.அப்போது யூசுபோடு சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தவர் யூசுப் பற்றி நினைவு வந்து அரசரிடம் கூற, அவர் மூலம் மன்னர் யூசுபிடம் கனவுகளுக்கு விளக்கம் கேட்டார்
19. “ஏழு ஆண்டுகள் தொடரந்து நல்ல விளைச்சல் விவசாயத்தில் இருக்கும் .நீங்கள் உங்கள் உணவுதேவைக்கு மேல் உள்ள சோளங்களை அப்படியே கதிரில் விட்டு விடுங்கள். அடுத்த எழு ஆண்டுகள் கடுமையான உணவுப் பற்றாகுறை ஏற்ரப்டும் .அப்போது உங்கள் உணவு தானிய சேமிப்பு தீர்ந்து விடும்
அதற்கு அடுத்த ஒரு ஆண்டு நல்ல மழை பெய்து செழிப்பாக, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ..நிறைய மது பிழிவார்கள் .இதவே உங்கள் கனவுக்குப் பலன் “ என்று சொன்னார்
இது குரான் ஜூசு
12 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
சுராஹ் பத்தில் சூராவின் பெயராகிய நபியின் பெயர் வரும் வசனம் எது ? என்ன சொல்லப்படுகிறது
விடை
10:98
“நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து மீண்ட யூனுசுடைய சமுதாயம் போல் மற்ற சமுதாயம் ஏன் நம்பிக்கை கொள்ளவில்லை ---------“(கருத்து )
மற்றபடி அந்த நபி பற்றி வேறெதுவும் இந்த சூராவில் இல்லை
தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.
Then has there not been a [single] city that believed so its faith benefited it except the people of Jonah? When they believed, We removed from them the punishment of disgrace in worldly life and gave them enjoyment [i.e., provision] for a time.
தமிழ் மொழியாக்கம் சற்று குழப்பமாக் இருப்பதால் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கொடுத்திருக்கிறேன் .
இன்றைய வினா
“அவர்கள் தங்கள் செயல்களின் விளைவு என்ன என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள் “
என்ற பொருள் எந்த வசனத்தில் வருகிறது ?விளக்கம் என்ன
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25042021 sun
Sherfuddin P
No comments:
Post a Comment