Friday, 23 April 2021

குரான் குறிப்புகள் சில 11

 திரு மறை சில குறிப்புகள் 11

24042021sat
1.[9:98] இன்னும் அரபு மக்களில் சிலர் அவர்கள் செய்யும் தருமத்தை ஒரு தண்டனையாகவும் ,தண்டமாகவும் நினைக்கிறார்கள் .எல்லாம் அறிந்த இறைவன் அவர்களை வேதனைக்கு உள்ளாக்குவான்
2. [9:112] இறைவனின் நல்லடியார்கள் எப்போதும் இறைவனை வணங்கிக் கொண்டும் ,அவன் புகழ் பாடிக்கொண்டும் அவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டும் அவனுக்குத் தலை வணங்கி ,சிரம் தாழ்த்திகொண்டும் ,இறைவன் விதித்த வரம்புகளை மீறாமலும் தீயவற்றை விலக்கி நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல செய்தி கூறி வாழ்த்துங்கள்
3. [9:128] உங்களில் ஒருவரே இறைதூதராக வந்திருக்கிறார் .உங்கள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர் அவர் .மென்மையான குணம் கொண்ட அவர் மிகவும் இரக்க சிந்தனை உடையவர்
4.10. 1-10 இந்த உலகத்தை உருவாக்கி உயிர்களைப்படைத்து திரும்பவும் படைக்கும் இறைவன் ஒருவன் மட்டுமே . வானம், பூமி, கதிரவன், நிலவு இரவு, பகல் எல்லாமே அவனது மாட்சிமைக்கு சான்றுகள் ஆகின்றன்
5. (10:13:14)) நிச்சயமாக நாம் முந்திய சமுதாயங்கள் பலவற்றை அழித்திருக்கிறோம்—புகழ் பெருமையின் உச்சியில் நின்ற அவர்கள் தவறான வழியில் சென்றதால் . அவர்கள் இடத்தில் உங்களை நியமித்து உங்கள் செய்லக்ளைக் கண்காணித்து வருகிறோம்
6. (10:24.இறைவன் அனுப்பிய மழையால் பயிர்கள் செழித்து வளன்ர்ந்து மனித்ர்களுக்கும் கால் நடைகளுக்கும் உணவாயின . பயிர்கள் நன்கு வளர்ந்து இந்த உலகமே அழகான நிலையில் பூமி தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என மக்கள் பெருமிதம் கொண்டிருந்தனர் .ஆனால் இறைவனை மறுத்த அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக ஒரே நாளில் பயிர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டான் இறைவன்
7. (10:31) வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வாழ்வாதாரம் அளிப்பதும், பார்வையையும் செவிப்புலனையும் கட்டுபடுத்துவதும் உயிர்ப்பிப்பதும் மரிக்கச் செய்வதும், மீண்டும் உயிர்ப்பிப்பதும்,உலகின் அனைத்து நிகழ்வுகளையும் கட்டுபடுத்துவதும் அந்த ஏக இறைவன் மட்டுமே
8. (10:37) புனித குரான் இறைவனால் இறக்கி அருளப்பெற்றது. வேறு யரும் அதைப் படைக்க முடியாது
9. (10:44) நிச்சயமாமாக இறைவன் எந்தத் தவறும் செய்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்துகொள்கிறார்கள்
10. (10:69, 70) இறைவனுக்கு எதிராகப் பொய் புனைபவர்கள் இவ்வுலக வாழ்வில் நலமாக இருப்பது போல் தோன்றலாம் . ஆனால் இறுதியில் அவர்கள் இறைவனிடமே போய்ச் சேர வேண்டும் . அங்கு அவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது .
11.சில பல செய்திகள், தேவை,முக்கியத்துவத்துக்கு ஏற்ப குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லப்படும் அந்த வகையில்
சூரா 10 71-73ல் நுஹ் நபியின் வரலாறும்
10 83-92ல் மூசா நபியின் வரலாறும் வருகிறது
12. (10:88) மூசா நபி இறைவனை நோக்கி சொன்னது “இறைவனே நீ பிர்அவுனுக்கும் அவனுடன் இருப்பவர்களுக்கும் இவ்வுலக வாழ்வில் .செல்வத்தையும் செல்வாக்கும் வழங்கினாய் .அவர்கள் அதைவைத்து மக்களை வழிதவறச் செய்கிறார்கள் .அவர்கள் செல்வச் செருக்கை அழித்துஅவர்களுக்கு கொடிய வேதனையை அழித்தால்தான் அவர்கள் நேர்வழிக்குத் திரும்புவார்கள் “
13. (10:100) இறைவன் நாடினால் ஒழிய யாரும் இறைநம்பிக்கை கொள்ள முடியாது .இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பெரும்வேதனை காத்திருக்கிறது
இது குரான் ஜூசு
11 ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
நேற்.றைய வினா :
“--------அவர்கள் குறைவாக சிரிக்கட்டும் அதிகமாக அழட்டும்”
என்ற கருத்துள்ள வசனம் எது ?
விடை
[9:82
தபுக் போரில் இறை தூதருக்கு துணையாய் நில்லாமல் சாக்குப் போக்குச் சொல்லி பின் தங்கியவர்கள் பற்றி இறைவன் சொல்கிறான் :
“ ---------அவர்கள் குறைவாக சிரிக்கட்டும் அதிகமாக அழட்டும்=------”
இன்றைய வினா
சுராஹ் பத்தில் சூராவின் பெயராகிய நபியின் பெயர் வரும் வசனம் எது ? என்ன சொல்லப்படுகிறது
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
2404202 sat
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment