Friday, 17 September 2021

குரான் 24:12


 






உங்களைப் போல் நம்பிக்கை கொண்ட நல்லவர் மீது பழி சுமத்தப்படும்போது "இது முற்றிலும் வீண் பழியே " என்று  நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா"

என இறைவன் கேட்பதாக பொருள் தரும் வசனம் திருமறையில் எந்தப் பகுதியில் வருகிறது?





விடை

சுரா 24 அந்நூர் ( பேரொளி)

வசனம்12


"நம்பிக்கை கொண்ட ஆண்களும்,  பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற நம்பிக்கை கொண்டவர்கள்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?"


இந்த வசனம் இந்த சுரா பற்றி ஒரு விளக்கம் - முடிந்த வரை சுருக்கமாக


நபி ஸல் அவர்கள் துணைவி ஆயிஷா ரலி மேல் மிகப்பெரிய வீண்பழி - அவர்கள் ஒழுக்கம் பற்றி - சுமத்தப் படுகிறது


இசுலாமியர்கள் என்று சொல்லிக்கொள்ளும்

நயவஞ்சகர் கூட்டம் இதை ஊதிப் பெரிதாக்கி அதன் மூலம் நபி பெருமானை நிலைகுலையச் செய்து இசுலாத்தின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறது


இறைவனின் ஆணையை . செய்தியை எதிர் நோக்கி நபி பெருமான் வாய் திறவாமல் அமைதி காக்கிறார்கள்


 ஆயிஷா ரலி அவர்களின் பெற்றோரும் மகளுக்கு ஆதரவாக ஆறுதல் சொல்லவில்லை


இந்த நிலையில் தான் எது சொன்னாலும் அது தவறாகி விடும் என்று உணர்ந்து சொல்கிறார்கள் ஆயிஷா ரலி அவர்கள்


அப்போது இந்த இறை வசனம் இறங்குகிறது


வசனம் 11-20 ஆயிஷா ரலி அவர்கள் குற்றம் அற்றவர் என்றுதெளிவாக்குகிறது ..


 மேலும் அவதூறு பரப்பிய நயவஞ்சகர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை   மிகக்கடுமையான பற்றி எச்சரிக்கை விடுக்கிறது


வீண்பழியை நம்பி அதை மற்றவர்களிடம் எடுத்துச் சொன்னவர்கள்  குற்றத்துக்கான சான்று யார் என்று  கேட்காததவர்கள் எல்லோரும் தவறு செய்தவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது


அவதூறில் இருந்து காப்பாற்றிய நபி பெருமானுக்கு நன்றி சொல் என்று ஆயிஷா ரவியின் பெற்றோர் சொல்ல 

"இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்வேன் நபிகளுக்கோ எனக்கு ஆதரவாகப் பேசாத உங்களுக்கோ நன்றி சொல்ல மாட்டேன் " என்று சொல்கிறார்

(Source :Towards understanding Quran)

இந்த சுராவில் ஆண் பெண் உறவின் ஒழுக்கங்கள் .அவை மீறப்பட்டால் உள்ள தண்டனைகள் மற்றவர் வீட்டில் தன் வீட்டிலேயே பெற்றோர் அறையில்  நுழையுமுன் அனுமதி பெறுதல் ஆண் பெண் உடை ஒழுக்கம் கூட்டத்தில் ஒழுக்கம் போன்ற பல செய்திகள் விதியாக .சட்டமாக சொல்லப்படுகின்றன

 

விடை சொல்ல முயற்சித்த 

சகோ ராஜாத்திக்கு நன்றி


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


17092021வெள்

சர்புதீன் பீ






No comments:

Post a Comment