குரான் சுராஹ் (2) அல் பக்ராவின் சிறப்பான வளைய அமைப்பு பற்றி முன்பு பார்த்தோம்
சுராஹ் (55)அர்ரஹ்மான் –இந்த சூராவும் ஒரு சிறப்பான அமைப்பில் (structure) படைக்கப்பட்டிருக்கிறது .
அது என்ன ?
விடை
78 வசனங்கள் கொண்ட சுராஹ் அர்ரஹ்மான் முழுதும் பண்டைய அராபிய பாடல்கள் போல சஜ் என்ற அமைப்பில். சொல் நயத்தடன் கூடிய சிறந்த ஒலி அமைப்பில் படைக்கப்பட்டிருக்கிறது.இந்த அமைப்பில் உள்ளவை செவிக்கு மிகவும்
இனிமையாக
இருக்கும், மனதில் எளிதில் பதிந்து விடும் இன்னொரு சிறப்பான அமைப்பு refrain எனப்படும் பல்லவி ;
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ
Fabi-ayyi ala-i rabbikumatukaththiban
— Transliteration
Which is it, of the favours of your Lord, that ye deny?
— Pickthall
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
இந்த வசனம் மொத்தம் உள்ள 78 வசனங்களில் 31 முறை வருகிறது
சூராவின் அறிமுகப்பகுதி – 13 வசனங்கள்
இரு வரியில் அமைந்தவை -26
மூன்று வரியில் அமைந்தவை -4
இவை ஒவ்வொன்றின் இறுதியிலும் பல்லவி போல “ பபி அய்யி ......” என்ற வசனம் வருகிறது
“தபாறக்க ----“ என்று இறைவன் புகழ் பாடும் வசனத்துடன் இந்த சுராஹ் நிறைவு பெறுகிறது
இவ்வளவு சிறப்பான கவிதை அமைப்புள்ள இந்த அர்ரஹ்மான் சுராஹ்
“குரானின் அழகு “ என்றும் “குரானின் அலங்காரம் “ என்றும் அழைக்கபடுகிறது
(Source – Wikipedia )
இந்த சுராவின் மற்ற சிறப்புகள் பற்றி நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன் ..எனவே அவற்றை இங்கு சொல்லவில்லை
ஓரளவு சரியான விடை அனுப்பியவர்கள்
சகோ ரவிராஜ் ,அசனலி , பர்வேஸ்
வாழ்த்துகள பாராட்டுகள்
குறிப்பாக சகோ ரவிராஜுக்கு மீண்டும் ஒரு பாராட்டு, வாழ்த்து . குரான் பற்றிய வினாக்கள் அனைத்தையும் படித்து பல முறை சரியான விடையும் அனுப்பியிருக்கிறார்
முயற்சித்த சகோ ராஜாத்திக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
03092021fri
Sherfuddin P
No comments:
Post a Comment