“ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமல்ல
நாள்தோறும் ஐவேளை தொழுகையிலும் ஆசிரியர்களை நினைவு கொள்வது
இசுலாமிய மாண்பு”
05092021 ஆசிரியர் தினத்தன்று நான் போட்ட செய்தி இது
இன்றைய வினா
தொழுகையின் எந்த நிலையில் ஆசிரியர்கள் நினைவு கூறப் படுகிறார்கள் ?
இசுலாமியர்கள் இறை வணக்கம் மிகச் சுருக்கமாக –
நிற்கும் நிலையில் துவங்கி குனிந்து நிமிர்ந்து பின் சிரம் தாழ்த்தி வணங்கி எழுந்து இருப்பு நிலையில்
அமர்ந்து வலது புறமும் இடது புறமும் மெதுவாகக் கழுத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி சலாம் கொடுத்து நிறைவு செய்யபப்டுகிறது
அப்படி நிறைவு செய்யுமுன் சில பிரார்த்தனைகள்,, கோரிக்கைகள , துவாக்களை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்
முதலில் இறைவனுக்கு வணக்கமும் நபி ஸல் அவர்களுக்கு வாழ்த்தும் சொல்லும் அத்தஹியாத்து து ஆ
அடுத்து தருதே இப்ராஹீம் என்பது – இப்ராகிம் நபி அவர்களுக்கு இறைவன் வழங்கியது போல் நபி ஸல் அவர்களுக்கு இறைவன் ஆசியையும் நிறைவையும் வழங்க வேண்டும் என்று கேட்பது
அதற்கு அடுத்து நமக்கும் , நம் பெற்றோருக்கும் , ஆசிரியருக்கும் இவ்வுலகில் வாழும் , மரணித்த அனைவருக்கும் பாவ மன்னிப்பு வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவது
“ அல்லாஹும் மக்பர்லி வலிவாலி தய்ய வலி உஸ்தாதி -----------அர்ரகுஹமர் ராஹிமின் “
அதன் பிறகு சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்
இதில் உஸ்தாதி என்பது ஆசிரியரைக் குறிக்கும் அரபுச் சொல்
இப்படி ஒரு விளக்கம் தேவையா , இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் ஒரு செய்தியை சொல்லும்போது முடிந்த அளவுக்கு எல்லோருக்கும் தெளிவாகப் புரியும்படி சொல்வ வேண்டும் என்பது என் கருத்து
சரியான விடை அனுப்பிய
சகோ இ ச பீர்முகமது , ,மெகராஜ் , சிரசுதீனுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
10092021fri
SherfuddinP
No comments:
Post a Comment