அழகிய பெண்ணின் பெயராக இன்றும் பயன்பாட்டில் உள்ளது
;மழைமேகம் என்று இலக்கியப் பயன்பாட்டில் வரும் அந்த மூன்று எழுத்துச் சொல் எது ?
விடை
எழிலி
• நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். குறள் 17
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்
• எழிலி முழங்குந் திசை யெல்லாம் (நாலடி, 392)
• சரியான விடை அனுப்பி வாழ்த்தும் பாராட்டும் பெறுவோர்
• சகோ கணேசன் சுப்ரமணியன் (திருக்குறளுடன் முதலாவதாக விடையளித்த இவருக்கு இரட்டைப் பாராட்டுகள்)
• பாப்டி, மெஹராஜ் , இதயத் ,ராஜாத்தி
•
மற்றொரு சரியான விடை
மஞ்சு
இதை அனுப்பிய
சகோ அசனலி, , ராஜேந்திரனுக்கு
வாழ்த்துகள்
, பாராட்டுகள் வந்த மற்ற விடைகள்
முகில் ,மேகலை , மேகலா , எழில் ,நிலவு , காரிகை , மயில், தையல்
தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. விடை அனுப்பிய அனைவரும் நல்ல தமிழ்ப் புலமை உடையவர்கள்
எனவே ஒவ்வொரு விடையையும் கூகிளில் முடிந்த வரை தேடிபார்த்து பிறகுதான் தெரிவு செய்தேன்
ஆர்வத்துடன் பங்கேற்ற
சகோ கிரசன்ட் ஷேக் , சர்மதா , தல்லத்,
ஜோதி , அஷ்ரப் ஹமீதா , மரு.சந்ரசேகர்,
ஜெயராம் பிரகாஷ், நஸ்ரீன் விசுவநாதன் ,
சேகர், ரவிராஜ், சுராஜ் ,
கரம் சிராஜுதீன் அனைவருக்கும் நன்றி
பெயர்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் sorry
சகோ மணிவண்ணன் தனக்குத் தமிழ் புலமை இல்லை , ரசிக்கும் தன்மைதான் உண்டு என்று குறிப்பிடிருந்தார்
புலமையும் ரசிப்பும் ஒன்றோடு ஓன்று பின்னிப் பிணைந்தவை என்பது என் கருத்து
புலமை இல்லாமல் ரசிக்க முடியாது , ரசிப்பு இல்லாத புலமை சுவைக்காது
கூகிளில் விடை தேடுவது தவறு என்பது போல் சிலர் உணர்கிறார்கள் . இதில் எந்தத் தவறும் இல்லை
It is just a learning process for me and you
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௯ ௦௯ ௨௦௨௧
29092021 புதன் (சகோ ரவி ராஜுக்காக )
சர்புதீன் பீ
No comments:
Post a Comment