Friday, 3 September 2021

முத்திரை பதிப்போம் 5 சுரபி சுரபி முத்திரை







முத்திரை பதிப்போம் 5

உடலையும் மனதையும் சீர் செய்ய
சுரபி முத்திரை
–பல நோய்களுக்கு ஒரு முத்திரை
செய்முறை
தளர்வாக உட்காருங்கள் – பத்மாசனம் அல்லது சுகாசனம் . .கண்கள் மூடியிருந்தால் நலம். இயல்பான மூச்சு சற்று ஆழமாக .
முத்திரைகள் ஆசனங்கள் ,உடற்பயிற்சி செய்யும்போது வெறும் தரையில் உட்காராமல் ஒரு விரிப்பு அல்லது பாயைப் பயன்படுத்துவது நல்லது
வலது சுண்டு விரல் இடது மோதிர விரலின் நுனியைத் தொடவேண்டும் அதே போல் இடது சுண்டு விரல் வலது மோதிர விரல் நுனியைத் தொட்டே வேண்டும்
அடுத்து வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடு விரல் நுனியையும் இடது ஆள்காட்டி விரல் நுனி வலது நடு விரல் நுனியையும் தொடவேண்டும்
இரு கை பெரு விரல்களும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
படிக்கும்போதும் .முதலில் செய்யும்போதும் சிறிது குழப்பமாக இருக்கும் . சில முறை செய்து பழகி விட்டால் எளிதாகி விடும்
சுருக்கமாக – சுண்டு விரல் -> மோதிர விரல் .
ஆள்காட்டி விரல் > நடு விரல்
அவ்வளவுதான்
இந்த முத்திரையின் பலன்களை அறியும்போது குழப்பம் சிரமம் எல்லாம் பறந்து விடும் .ஒரு நாளைக்குப் 15 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம்
சொல்லப்படும் பலன்கள்
செரிமான் சக்தியை மேம்படுத்துகிறது
உடலிலுள்ள நச்சுக்களை அகற்றுகிறது
வயிற்று உப்புசம். வாயுத் தொல்லை தீருகிறது
மனதை அமைதிப்படுத்தி சிந்தனையை தெளிவாக்கி ஒருமுகப்படுத்துகிறது
மூட்டு வலியை சரி செய்கிறது
உள் உறுப்புகள் அனைத்தையும் சரியாக இயங்க வைக்கிறது
இவ்வளவு பயன்கள் தரும் சுரபி முத்திரையை சற்று முயற்சி எடுத்தக் கற்றுக்கொள்ளலாமே
முத்திரைகள் பெரும்பாலும் செய்ய எளிதானவை, பொருட் செலவு , பக்க விளைவில்லாமல் , நல்ல பயன் தரக்கூடியவை
ஆனால் இவை உங்கள் மருந்து, மருத்துவத்துக்கு மாற்று கிடையாது . மருத்துவரைக் கலக்காமல் மருந்து, மருத்துவத்தை நிறுத்த வேண்டாம்
இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்
04092021sat
SherfuddinP

Like
Comment
Share

No comments:

Post a Comment