“இறைவனின் நல்லடியார்கள் வீண் செலவு செய்யமாட்டரர்கள் ,கருமித்தனமாகவும் இருக்கமாட்டர்கள் “
என்ற பொருள் படும் வசனம் திருக்குரானில் எங்கு வருகிறது ?
விடை
சுராஹ் அல்புர்கான் :25:67
“இன்னும் அவர்கள் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; கருமித் தனமாக குறைக்கவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள் “
சரியான விடை அனுப்பிய
சகோ அசன் அலிக்கும் சர்மதாவுக்கும்
வாழ்த்துகள்
பாராட்டுகள ஒரு சுருக்கமான விளக்கம்
அறிஞர்கள் கூற்றுப்படி
வீண் விரயம் என்பது
நெறி தவறிய வழிகளில் (அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் கூட ) செலவு செய்வது
-நல்ல நேர் வழியாய் இருந்தாலும் தன் சக்திக்கு மீறி செலவு செய்வது
- பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக செலவு செய்வது – அது சரியான வழியாக இருந்தாலுமே
கருமித்தனம் என்பது
இருக்கும் பொருள் வசதிக்கு ஏற்ப, தனக்கும் தன குடும்பத்தார் தேவைக்கும் செலவு செய்யாமல் இருப்பது
வசதி இருந்தும் நல்வழியில் செலவு செய்யாமல் இருப்பது
இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பொன்னான நல்வழிதான் நபி பெருமான் இறை அடியார்க்ளுக்கு சொல்லிக் கொடுத்தது
(source :Towards understanding Quran )
இறைவன நாடினால் மீஎண்டும் சிந்திப்போம்
01102021fri
Sherfuddin P
-
No comments:
Post a Comment