களம் ஓன்று , காட்சி மூன்று
பரபரப்பும் போக்குவரத்தும் நிறைந்த அந்தச் சாலையில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் ஓன்று சற்று உயரமான கட்டிடத்தில் ..
கட்டிடம் உயர்ந்தது போல் உணவின் தாமும் உயர்வாகவே இருக்கும் . அந்தப்பகுதிக்கு வரும் மக்கள் பெரும்பாலும் அங்கே சாப்பிடாமல் போகமாட்டார்கள் .இன்னும் சொல்வதென்றால் அந்த உணவகத்தின் ரொட்டி குழம்பை சுவைக்கவே அக்கம் பக்கம் உள்ள ஊர்களிலில் இருந்தும் வருவதுண்டு
காட்சி 1
அரசு வண்டி ஓன்று- காவல் துறை வண்டி அந்த உணவகத்தின் வாசலில் வந்து நிற்கிறது . .உடனே உணவாக உரிமையாளர் பரபரப்பாகி, கையில் இருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு உயரமான படிகளை வேகமாகக் கடந்து இறங்கி வண்டியின் கதவைத் திறந்து விட்டு காவல் துறை அதிகாரியை வாழ்த்துக் கூறி வரவேற்கிறார் . கையைப் பிடித்து இழுக்காத குறையாக உணவகத்துக்குள் அழைத்துச் செல்கிறார் .
“ சும்மா உங்களைப் பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன் . எனக்கு தேநீர் மட்டும் கொடுங்கள் “ என்று சொன்ன அவரிடம் “ அதெல்லாம் முடியாது அத்தி பூத்தாற்போல் நீங்கள் வருகிறீர்கள் . சாப்பிடாமல் போக விடமாட்டேன் “ என்றதோடு பணியாளரை அழைத்து “ ஐயாவுக்குத் தனி அறையை சுத்தம் பண்ணி வை “ என்று சொல்ல “ தனியறையில் இடம் ஏதும் இல்லை “ என்கிறார் பணியாளர்
சரி என் தனி அறையைத் திறந்து சுத்தம் செய்து குளிரூட்டியைப் போட்டு விடு “ என்கிறார்
அதிகாரியோ , “ நான் அவசர வேலையாகப் போய்க்கொண்டிருக்கிறேன் . உங்களைப் பார்த்து விட்டேன் .. சுவையான் தேநீர் அருந்தி விட்டேன் . நன்றி நான் வருகிறேன் “ என்கிறார் .
:” ஒரு ஐந்து நிமிடம் பொறுங்கள் . பார்சல் கட்டித் தருகிறேன் “
என்று உரிமையாளர் வற்புறுத்த “ இல்லை இல்லை எனக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது “ என்று அவர் புறப்படுகிறார் .
அப்படியும் விடவில்லை உரிமையாளர் ‘” சரி , நான் உங்கள் வீட்டுக்கு கொடுத்து விடுகிறேன் , அவர்களிடம் தகவல் சொல்லி விடுங்கள் “ என்று சொன்னவாறு வண்டி வரை சென்று வழியனுப்பி வைக்கிறார் “பணம் வாங்குவதாக இருந்தால் அனுப்பி வையுங்கள் “ என்று அதிகாரி சொன்னதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை
அடுத்த காட்சி – ஒரு ஆறு மாதங்களுக்குப்பின்
அதே உணவகம் ,, அதே உ ரிமையாளர் அதே அதிகாரி படியேறி வருகிறார் . நேரே உரிமையாளரிடம் போய் “ சாப்பிட வந்திருக்கிறேன் “ என்கிறார் . அவரை கண்டும் காணாததும் போல் உரிமையாளர் தலையை நிமிர்த்தாமல் அதை என் என்னிடம் சொல்கிறீர்கள் என்பது போல் “ சாப்பிடுங்க “என்று சொல்கிறார் .
“தனியறை இருக்குமா “ என்கிறார் வந்தவர் . “பார்த்தால்தானே தெரியும் ” என்ற எகத்தாளமான விடை
கிடைத்த இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பணம் செலுத்த வருபவருக்கு ஒரு நப்பாசை .-பணம் வேண்டாம் என்று சொல்லுவார் . நாம் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் பணத்தை செலுத்தி விட வேண்டும் என்று
ஆனால் மீண்டும் கண்டுகொள்ளாத உரிமையாளர் உரத்த் குரலில் “ யார் பில் போட்டது . கணக்கில் பத்து ரூபாய் விடுபட்டி ருக்கிறது” என்று சொல்கிறார் .
“ நீங்களாவது பார்த்து சரி செய்திருக்க வேண்டாமா “ என்று தன்னை சாடுவது போல் உணர்ந்த அதிகாரி பணத்தை செலுத்தி விட்டு சற்று மன வலியுடன் அமைதியாக் நடக்கிறார்
இந்த ஆறுமாதத்தில் ஏன் இந்த தலை கீழ் மாற்றம் ? புரிந்திருக்குமே ! நல்ல , நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி பணியை நிறைவு செய்து நல்ல பெயரோடு ஒய் பெற்று விட்டார்அவர் ஒரு வாரம் முன்பு
இங்கு பதவிக்குத்தான் மரியாதை , மனிதத்துக்கு அல்ல என்பது இப்போதுதான் அவருக்கு கொஞ்சம் புரிகிறது
மூன்றாவது காட்சி
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப்பின்
அதே உணவகம் . இப்போது சாப்பிட வருபவர் இருமுறை நாம் பார்த்தவரின் மகன் . அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றில் உயர பதவி வகிக்கும் அவர் அந்த ஊருக்குப் பணி நிமித்தம் வந்து தங்கி இருக்கிறார்
பழைய நினைப்பில் அந்த உணவகத்துக்கு சாப்பிடவருகிறார் . உணவகத்தின் வெளிதோற்றமே மாறுபட்டு இருகிரது. உயரம் குறைந்து பொலிவு இல்லாமல் இருந்தாலும் உணவின் தரம் அப்படியே இருக்கும் என்ற நினைப்பில் உள்ளே நுழைகிறார் . உள்தோற்றமும் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை
ஒரு இருக்கையில் உட்காருகிறார் . . ஒரே அமைதி . ஐந்து நிமிடகழித்து “ என்ன வேண்டும் “ என்று குரல் மட்டும் வருகிறது – ஆளைக்காணோம் . “புரோட்டா , குருமா “ என்று சொல்கிறார் . மீண்டும் சற்று நீண்ட அமைதி .பிறகு ஒருவர் வந்து “என்ன சாப்பிடுகிரீர்கள “ என்கிறார் “.ஏற்கனவே வேறு ஒருவரிடம் சொல்லி விட்டேனே “ என்று இவர் சொல்ல மீண்டும் பழையகுரல் “ இல்லை , நானில்லை இவரிடம்தான் சொல்லவேண்டும் “ என்று சொல்கிறது
முதலில் தண்ணீர் கொடுங்கள் பிறகு ரொட்டி குருமா “ என்று சொல்ல தண்ணீர் உடனே வந்து விடுகிறது
ஒரு பத்து நிமிட இடைவெளிக்குப்பின் “ரொட்டி குருமா கொஞ்சம் பழசாக இருக்கும் . நீங்கள் சொன்னால் சுட வைத்துத் தருகிறேன் வேண்டுமா ?” என்கிறார் பணியாளர்
“ வேண்டாம் வேண்டாம் புதிதாக என்ன இருக்கிறது ?”
“ சமோசா – மட்டன் சமோசா நன்றாக இருக்கும் முந்தாநாள் மாலைதான் போட்டது . சுட வைத்துக் கொண்டு வரவா /”
“வேண்டாம் வேண்டவே வேண்டாம் “ என்று அலறியவாறு வெளி நடக்கிறார் வந்தவர்
வந்த இடத்தில் வயிறு கெட்டுப்போகாமல் காப்பாற்றிய இறைவனுக்கும் , உண்மையை உரைத்த பணியாளருக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறார்
பதவியில் இருக்கும் அதிகாரிகள் பணி ஓய்வு பெறுவது போல் உணவகங்களும் ஓய்ந்து , ஒய்வடையும் என்பது ஒரு இயற்கை நிகழ்வு போலும்
வழக்கமான என்னுடைய கதைகள் போல் இதுவும் கொஞ்சம் கற்பனை கலந்த உண்மைக் கதைதான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௨ ௧௦ ௨௦௨௧ சனி
02102021
சர்புதீன் பீ
No comments:
Post a Comment