Thursday, 21 October 2021

குரான் - 26 :128,129, 130

 “வலிமையான பாதுகாப்பான மாளிகைகளை அமைதுக்கொள்கிறீர்கள் . அதில் நிரந்தரமாகவாழ்வோம்என்றஎண்ணத்திலா?”

என்று இறைவன் கேட்பது போல் கருத்து உடைய திருமறை வசனம் எது ?
விடை
26:129 (சுராஹ் அஷ்ஷுராஹ்)
சரியான விடைஅனுப்பிய
சகோ ஹசனளிக்கு
வாழ்த்துக்கள்
பாராட்டுகள்
இதற்கு விளக்கம் அறிய அதன் முன் பின் வசனங்களையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்
நீங்கள் ஒவ்வொரு உயரமான இடங்களிளும் வீணான சின்னங்களை அமைகிறீர்களா 26:128
இன்னும் நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று பாதுகாப்பான் மாளிகைகளை அமைத்துக் கொள்கிறீர்களா ? 26:129
இன்னும் நீங்கள் எவரேனும் குற்றம் செய்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கீரீர்கள் 26:130
இறைவனின் சினத்துக்கு ஆளாகி அடியோடு அழிக்கப்பட்ட சமூகங்கள் பல பற்றி குர்ஆனில் பல இடங்களில் வருகிறது
கி மு இரண்டாயிராம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆத், தமூத் கூட்டத்தினர் பொருளாதாரம் ,நாகரீகத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்தனர் மிக பெரிய உயரமான கட்டிடங்களை நிறுவுவதில் வல்லவர்களாய் இருந்தார்கள் .
பொருளாதார் உயர்வால் நற்குணங்களையும் மனிதத் தன்மையையும் இழந்து இறைவழியை விட்டு விலகி விட்டனர்
அவசியத் தேவைக்காக இல்லாமல் வீண் ஆட்ம்பரத்துக்காக அலங்கார மாளிகைகளை அமைத்தனர்
தங்கள் அருகில் வாழ்ந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியோ ,அவர்கள் வீடில்லாமல் தவிப்பது பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் தங்கள் வளர்சிக்காக அவர்களை வாட்டி வதைத்தனர்
மொத்தத்தில் பொருளாதாரம், நாகரிக வளர்ச்சி பெற்ற அந்தச் சமூகங்கள் மனிதத்தில் மிகவும் கேடு கெட்டு சீரழிந்த விட்டன
அவர்களை எச்சரிக்க இறைவன் அனுப்பிய நபிமர்ர்களையும் அடையாளங்களையும் உதசினப்படுத்தி அவமானப் படுத்தினர்
பொறுக்க முடியாத அளவுக்கு அவர்கள் கொடுமை அதிகரித்த போத இறைவன் கடும் காற்று மழை புயலை அனுப்பி அந்த சமுதாயங்களை இருந்த இடம் தெரியாமல் அடியோடு அளித்து விட்டான்
மாட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போயின
இதெல்லாம் வெறும் கதை அல்ல . வரலாறு . இன்றும் அழிக்கப்பட்ட சமுதாயங்களின் சான்றுகள் பல செங்கடல் அருகிலும் அடியிலும் காணப்பட்டு அவை பற்றி தொல் பொருள், வரலாற்று அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்
(Source Towards understanding Quran )
மீண்டும் எனக்கு புனியாத் தோளைத் தொடரின் தலைப்பு நினைவில் வருகிறது
Those who forget history are condemned to repeat it
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
22102021வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment