---நெருப்பில் இருப்பவரும் அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் மிகவும் பாக்கியம் அடைந்தவர்கள் -----------“
ஓரு குரான் வசனத்தின் பகுதியான இது எந்த நிகழ்வைக் குறிக்கிறது ?
சுராஹ் 27 வசனம் 8:
அவர் அதனிடம் வந்தபோது” நெருப்பில் இருப்பவரும் அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் மிகவும் பாக்கியம் அடைந்தவர்கள்.மேலும் அகிலங்களுக்கு எல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன் “
என்று அழைக்கப்பட்டார்
நபி மூசா அலை அவர்கள் பெயர் குர்ஆனில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் வருகிறது. அந்த நபி வரலாறும் பல இடங்களில் பல் சூராக்களில் வருகிறது
அந்த நீண்ட வரலற்றை நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.எனவே இப்போது இந்த வசனத்திற்கு தொடர்புடைய நிகழ்வுகளை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்
நபித்துவம் பெறுவதற்கு முன்பு மூசா பத்த ஆண்டுகள் மிடியன் நகரில் வாழ்ந்த பின் தன குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் பயணிக்கிறார் . நடு இரவு,கும்மிருட்டு, வழியும் புலப்படவில்ளை
சற்றுத்தொலைவில் நெருப்பின் ஒளியைப் பார்த்த மூசா அங்கு போய் சரியான வழி தெரிந்து வரலாம் ; கதகதப்புக்குக் கொஞ்சம் நெருப்பையும் கொண்டு வரலாம் என்று அவர் மட்டும் போகிறார் . தூர் மலையின் அடிவாரத்துக்கு அவர் போகும்போது ஒரு ஒளி மட்டும் தெரிகிரது,;நெருப்பு எதுவும் இல்லை . இந்த நிலையில்தான் இறைவனின் குரல் மூஸாவை அழைக்கிறது
தன்னை வெளிப்படுத்திகொண்ட இறைவன் குரல் மூஸாவே உமது கைத்தடியை கீழே எறியும் என ஆணை இடுகிறது . மூஸா அவ்வாறு கைதடியை ஏறிய அது ஒரு பாம்பாகி நெளிகிறது இதைக் கண்ட மூஸா அச்சம் அடைந்து ஓட்டம் பிடிக்கிறார்
இறைவனின் தூதர்கள் இறைவனின் முன்னிலையில் அஞ்சக்கூடாது என சொன்ன இறைவன் மூஸா அவர்கள் நபித்துவம் பெற்றதன் இன்னொரு இன்னொரு சான்றாக அவர் கையை ஒளி வீசச் செய்கிறான்
கைத்தடி பாம்பாக மாறுவது ,கை ஒளி வீசுவது போல் இன்னும் பல சான்றுகளோடு கொடுங்கோல் மன்னன் பிர் அவுனுக்கு எச்சரிக்க செய்து நல்வழிப்படுத்த இறைவன் மூசா நபியையும் , அவரரது உடன் பிறப்பையும் அனுப்புகிறான் . திருந்த மறுத்த பிர் அவுன் கடலில் மூழ்கடிக்கப்ட்டு கொல்லப்படுகிறான்
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசனலி ( முதல் சரியான விடை) ,பீர் ராஜா
இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
முயற்சித்த
சகோ ராஜத்திக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
29102021வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment