Thursday, 7 October 2021

குரான் 41:16 54:19 தீய்நாட்கள்

 தீயநாள் தீயநாட்கள் 

இந்தச் சொற்கள் வரும் மறை வசனங்கள் எவை?


விடை


1. 41 புஸ்ஸிலத் வசனம் 16


ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, தீய நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம் மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும்

இழிவுள்ளதாகும் அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.41 16


2. 54 அல்கமர் வசனம் 19


நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான தீய ஒரு நாளில், பேரிரைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.5419


தீமை என்ற பொருள் கொண்ட

நஹிஸாத்தில் 

நஹ்ஸின் என்ற அரபுச் சொற்கள் வருகின்றன


சுருக்கமான விளக்கம்


இறைவன் படைப்பில் தீய நாள்

தீய நேரம் என்பது எதுவும் இல்லை 


பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் திருந்தாமல் தொடர்ந்து தீய வழியில் சென்ற ஒரு சமுதாயத்தை தண்டிக்க கொடிய புயலை இறைவன் அனுப்பி வைக்கிறான்

இந்த அழிவுகள் அந்த கேடுகெட்ட சமுதாயத்துக்குதான் தீய நாள்

மற்றவர்களுக்கு அல்ல


இரண்டும் நடந்த புதன்கிழமை ஒரு தீய நாளாக குறிப்பாக இஸ்லாமிய மாதத்தின் கடைசி புதன்கிழமை மிகவும் தீய நாளாகக் கருதப்படும் மனப்பாங்கு -ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே பரவியது 

அதன் தாக்கத்தில் ஸஃபர் மாதம் முழுதும் ஒரு தீய மாதமாகக் கருதப்பட்டு அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை ஒடுக்கத்து புதன் என்றானது


"தீய நாட்கள் " என்று பன்மையிவ் குறிப்பிடும்போது இந்தக்கருத்து அடிபட்டு விடுகிறது


மேலும்,சுரா 69 அல்ஹக்கா வசனம் 7 ஏழிலில்  தொடர்ந்து ஏழு இரவுகள் எட்டு நாட்கள் புயல் சீறியதாக வருகிறது


எனவே இறைவன் படைப்பில் கெட்ட நாள் நேரம் இவற்றிற்கெல்லாம் ஏக இறை நம்பிக்கை கொண்டவரிடம் இடம் இல்லை என்பது உறுதி


(Source Towards understanding Quran)


சரியான விடை அளித்த

சகோ ஹஸன் அலி (வழக்கம் போல் முதல் சரியான விடை)

நௌக்ஷின் கதீஜாவுக்கு

வாழ்த்துகள் பாராட்டுகள்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


08102021வெள்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment