ஆங்கில எழுத்துக்களில் வரிசையாக அமைந்த மூன்று எழுத்துக்கள் GHI
இப்போது பரவலாக. பரபரப்பாக சமூக ஊடகங்களில் வலம் வரும் இந்த எழுத்துக்கள் உலகளாவிய பசிக் குறியீடு –Global Hunger Index என்பதன் சுருக்கம்
ஏன் இந்தப் பரபரப்பு ? காரணம் இல்லாமல் இல்லை
முதல் காரணம் சென்ற ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 101 ஆவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறது
(குறியீட்டு எண் கூடுவது நிலைமை மோசமாவதைக்குறிக்கிறது)
சென்ற ஆண்டு நிலையே அச்சமூட்டுவதாக இருக்கிறது alarming என்று மணி அடித்தன GHI அறிக்கை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்
அடுத்து இந்தச் சரிவில் நாம் மிக ஏழை நாடுகளாக எண்ணியிருந்த நேபாளம் , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நம்மை விட நல்ல நிலமைக்கு உயர்ந்து விட்டன
குறிப்பாக பங்களாதேஷ் பற்றி இங்கு சொல்லவேண்டும்
உடல் உழைப்பு மிக மலிவாக – நம்ப முடியாத அளவுக்கு மலிவாகக் கிடைக்கும் நாடு அது . அதனால்தான் பெரும்பாலான பன்னாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அந்த நாட்டில் அமைத்துள்ளன .
அந்த நாடே இந்தியவை விட முன்னால் சென்று விட்டது
இது மிகவும் கவலை , அச்சம் தரும் செய்தி
பங்களாதேஷ் 76 ; இந்தியா 101(முன்பே சொன்னது -
குறியீட்டு எண் கூடுவது நிலைமை மோசமாவதைக்குறிக்கிறது)
இந்த GHI எப்படி கணக்கிடப்படுகிறது ? மிகச் சுருக்கமாக-
ஊட்டச் சத்து குறைபாடு ,அதன் விளைவாக குழந்தைகள் எடை குறைதல், உயரம் குறைதல் , குழந்தைகள் இறப்பு விகிதம் என்ற நான்கின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
இந்த நிலைக்கு கொள்ளை நோய், மாசு, உலகளாவிய பருவ நிலை மாற்றங்கள் போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன
ஆனால் பங்களாதேசை விட தாழ்ந்த நிலைக்கு காரணம் என்ன ?
விடை யாரும் சொல்லாத வினா
இன்று நம் நாடு இருக்கும் நிலை எந்த வகையிலும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை என வல்லுனர்கள் எச்ச்ரிக்கை விடுக்கிறார்கள்
அண்மை ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றமும் அழிந்து போகும் நிலை
ஒன்றே ஓன்று சொல்லத் தோன்றுகிறது
வரலாற்றை மறந்தவர்களை அதே வரலாறு திரும்பத் தண்டிக்கும்
Those who forget History are condemned to repeat it
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
16102021சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment