Tuesday, 12 October 2021

தமிழ் கடகம்

 






இந்த இரண்டையும் குறிக்கும் நான்கு எழுத்துச்சொல் எது?



விடை

கடகம்


படத்தில் ஒன்று பனை ஓலையில் செய்யப்பட்ட பெரிய கூடை 

அரிசி பருப்பு எல்லாம் வைத்து தலையில் சுமந்து விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்


அடுத்தது

சிறு பிள்ளைகளுக்கு பால் புகட்டும் பாத்திரம்

பால் புட்டி (feeding bottle) வந்த பின் இது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது

இதற்கு கெண்டி என்று பெயர்


கால ஓட்டத்தில் காணாமல் போன இந்த இரண்டையம் குறிப்பது  கடகம் என்ற சொல்


கடகம் 

இந்த இரண்டும் போக இன்னும்

பல பொருட்கள் கொண்ட சொல்


ஒரு சில:

நண்டு  . யானைக்கூட்டம் . வளையல் .சேனை



சரியான விடை அளித்த


சகோ ராஜேந்திரன் . கணேசன் சுப்ரமணியன் .மெகராஜ் . ஜோதி  விசுவநாதன் .ஹிதயத்  பாப்டி

அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்


முயற்சித்த சகோ ராஜாராமுக்கு நன்றி


இறைவன் நாடினால் மீண்டும சிந்திப்போம்


13102021புதன்

சர்புதீன் பீ




No comments:

Post a Comment