Tuesday, 5 October 2021

தமிழ் – தனித் தமிழ் சில சிந்தனைகள் , கருத்துக்கள்

 


தமிழ் – சில சிந்தனைகள் , கருத்துக்கள்

 

பல ஆண்டுகள் முன்பு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் ஜலம் என்பது தூய தமிழ்ச சொல் என்று சொன்னார் . மேற்கொண்டு அவரிடம் இது பற்றி பேச முடியவில்ளை ,மீண்டும் சந்திக்கவும் இல்லை

 

இப்போது சில நாட்கள் முன்பு முகநூலில் நண்பர் வழிக்கரை வடிவேலன்             ஜ ,ஷ.ஸ ஹ இதெல்லாம் வடமொழி எழுத்துக்கள இல்லை . வடமொழியில் இது போன்ற எழுத்துக்கள் கிடையாது . தமிழ் ஒலி வடிவத்தின் எழுத்து வடிவங்கள்தான் என்று ஒரு கருத்து வெளியிட்டிருந்தார் .

 ராஜாஜியை இராசாசி என்றும். ஷேக்ஸ்பியரை செகப்பியர் என்றும் மாற்றுவது தவறு என்றும் சொல்லியிருந்தார்

 

அவர் தமிழில் ஆழமான ,பரந்த அறிவு உடையவர் . அவர் கூற்று சரியா என்பதை ஆராயும் அளவுக்கு எனக்குத் தமிழ்ப் புலமை கிடையாது

 

 பெயர்களை மாற்றுவது சரியில்லை என்பது என்னுடைய கருத்தும் ஆகும் .

குறிப்பாக் அரபு மொழியில் ஒரு எழுத்து மாறினால் கூட பொருள் மாறிவிடும்

 

ஆனால் எங்கள் பகுதி (மதுரை திருப்பத்தூரில் ) யில் ஜ, ஷ இதெல்லாம் வாயில் வராது . ஓரளவு படித்தவர்கள் கூட ராஜாவை ராசா என்றும், ரோஜாவை ரோசா என்றும் தான் சொல்வார்கள்

ஜப்பார் என்பது ஜ, சவுக்கு இடைப்பட்ட ஓசையில்,ஒலிக்கும் .

. ஆயிஷா  ஆசாவாகி விடும் ஷாம்பூ சாம்பு என்று வரும்

இதெல்லாம் இயல்பாக வருவது மற்றபடி  வடமொழியைத் தவிர்க்க வேண்டும், தூய தமிழில் பேச வேண்டும் எண்ற எண்ணமெல்லாம் கிடையாது

 

சொந்த ஊரோடு  இப்போது பெரிய தொடர்பு ஏதும் இல்லை . எப்போதாவது எதாவது விழாக்களுக்குப் போனால் ஒன்றிரண்டு நாள் தங்கி வருவது அவ்வளவுதான் , அதனால் இப்போது பேச்சு வழக்கு மாறியிருக்கிறதா என்பது  தெரியவில்லை

 

சாம்பு என்றதும் எனக்கு துப்பறியும் சாம்பு நினைவுக்கு வருகிரது. இருபதாம்  நூற்றாண்டின் துவக்கத்தில்  மிகப் பரவலாக படிக்கப்பட்ட , பேசப்பட்ட ஒரு புதினம் – துப்பறியும் புதினம் அதோடு நகைச்சுவை சேர்ந்து இருப்பதோடு பல உண்மை நிகழ்வுகளின் காலக் கண்ணாடியாகவும் விளங்கிய இந்தப் புதினத்தை தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர் பெயர் மகாதேவன் . நான் அதிகம் இதைப்படிததில்லை .,நிறையக் கேள்விபட்டிருக்கிறேன்

 

இது தொடர்பாக இன்னொரு நகைச் சுவைக்கதை நினைவில் வருகிறது , ஒரு வீட்டில் தேங்காய் எண்ணெய் மிக அதிகமாக குடும்பத்தின் தேவைக்கு மேல் செலவாகிறது

வீட்டில் பணிபுரியும் பெண் எண்ணெயை பயன் படுத்துகிறாரோ என ஒரு ஐயம் . பணிப் பெண்ணோ வன்மையாக மறுக்கிறார்

எப்படி இதைக்கண்டு பிடிப்பது என்ற சிந்தனையில் ஷாம்ப்பூ கை கொடுக்கிறது . தேங்காய் எண்ணெய் நிறத்தில் இருக்கும் ஷாம்பூவை எண்ணெயோடு கலந்து விடுகிறார்கள்

 

வழக்கம்போல் பணிப்பெண் அதைத் தலையில் தேய்க்க தலை எல்லாம் ஒரே நுரை மயம் . என்னமோ எதோ என்ற அச்சத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார் பணிப்பெண்

 

இந்தக் கதைக்குப் பெயர் துப்பறியும் சாம்பு (ஷாம்பூ

 

 

 

மீண்டும் தமிழுக்கு வருவோம்  

 

ஷாம்பூவுக்கு இணையத்தில்  நான் கண்ட தமிழ்ச் சொல்

தலை நீவல், சவர்க்காரக் குழம்பு .

வேறு ஏதாவது சொல் தெரிந்தால் சொல்லாம்

இன்னும் சில சொற்களுக்கு சரியான , இயல்பான் தமிழ்ச் சொல் எனாக்குத் தெரியவில்லை

Main Road என்பதை முதன்மைச் சாலை என்கிறார்கள். பொருத்தமாகத்தான் இருக்கிறது

 

ஆனால் முக்கியமானவர்களில் ஒருவர் என்பதை முதன்மையானவர்களில் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டுமா இல்லை வேறு சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை

 

Relaxed ஓய்வாக, இளக்கமாக என வருகிறது. முழுப் பொருளும் தரும்படி வேறு இயல்பான சொல் இருந்தால் சொல்லுங்கள் .

 

சிகிச்சை – மருத்துவம் என்ற சொல் தவிர்த்து வேறு சொல் இருக்கிறதா ?

Surgery –அறுவை சிகிச்சை, அறுவை மருத்துவம் என்று சொன்னால் சற்று முரட்டுத் தனமாகத் தெரிகிறது.

 

 

– வட மொழி சொற்களுக்கு இணையான சில தூய தமிழ் சொற்கள்

இணையத்தில் கண்டவை

 

-அளவைப்பொலி  உள்ளப்போக்கு      இளிவரவு             முனிவருறையுள்

அற்றம்          கருங்கோள்             நீர்க்குடுவை

பொருள் புரிகிறதா ?

 

நிறைவாக ஒரு வேடிக்கை வினா

“உயிர்க் காலேசு , செத்த காலேசு “

எங்கள் ஊர் சிறப்புப் பேச்சு வழக்கு

என்ன பொருள் ?

 

இறைவன் நாடினால்  நாளையும் தமிழில் சிந்திப்போம்

 

௦௫ ௧௦ ௨௦௨௧ செவ்

050102021

சர்புதீன் பீ

 

 

தமிழ் – சில சிந்தனைகள் , கருத்துக்கள் 2

நேற்று சில தூய தமிழ் சொற்கள் கொடுத்து பொருள் புரிகிறதா என்று கேட்டிருந்தேன்

யாரும் விடை அனுப்பவில்லை

முயற்சித்த சகோ அஷ்ரப் ஹமீதாவுக்கு நன்றி

விடைகள்

அளவைப்பொலி- ஆபாசம்        உள்ளப்போக்கு-அபிப்ராயம்            

இளிவரவு –அவமானம்    முனிவருறையுள் –ஆசிரமம்

அற்றம்-இரகசியம்            கருங்கோள்- இராகு              நீர்க்குடுவை – கமண்டலம்

 

வேடிக்கை வினா- “உயிர்க் காலேசு , செத்த காலேசு “

விடை –

 உயிர்க் காலேசு விலங்கியல் பூங்கா – Zoo

செத்த காலேசு “  - அருங்காட்சியகம் Museum

சரியான விடை அனுப்பியவர்கள்  

சகோ பாப்டி ,பமீலா ,கணேச சுப்பிரமணியம் ராஜா சுப்பிரமணியம்

ராஜாத்தி (முதல் சரியான விடை – இரட்டைப் பாராட்டுகள் )

அனைவருக்கும் வாழ்த்துகள் ,பாராட்டுகள்

 

தனித் தமிழ் சரியா தவறா ? முடிவில்லாத ஒரு வினா

தனியோ இல்லையோ படிப்பவர்களுக்குப் புரியும்படி இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது

 

“மெய்ப்புல அறைகூவலர் “

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோருக்கான கழிவறையில் கண்ட அறிவிப்பு

Physically Challenged என்பதன் மொழி பெயர்ப்பு

இது எத்தனை பேருக்குப் புரியும் ?

 

ஆனால் மொழி சிதையாமல் காக்க தனித்தமிழ் தேவை என்ற கருத்தும் சொல்லப்படுகிறது

இதற்குக் காலம்தான் ஒரு விடை சொல்ல வேண்டும்

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

௦௬ ௧௦ ௨௦௨௧ புதன்  

060102021

சர்புதீன் பீ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment