திரு குரானில் ஜகாத் என்ற சொல் எத்தனை முறை வருகிறது?
விடை
32 முறை
சரியான விடை அனுப்பிய
ரிபாத்துக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த சகோ மெகராஜுக்கு நன்றி
சிறு விளக்கம்
ஜக்காத் என்ற அரபுச் சொல்லுக்கு
தூய்மைப் படுத்துதல் என்று பொருள்
அந்தப் பொருளில் குரான் வசனம்
18 அல்காப் 81
19 மரியம் 13
ஆகிய இரண்டு இடங்களில் வருகிறது
பொருள் .செல்வத்தில் உள்ள குற்றங்களை நீக்கி தூய்மைப்படுத்தும் தருமம் என்ற பொருளில் ஜக்காத் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
அந்தப் பொருளில் குரானில் 30 முறை வருகிறது
மொத்தம் 32 முறை
இஸ்லாத்தின் 5 கடமைகளில் நான்காவதாக வரும் ஜக்காத் செல்வம் சிலரிடம் மட்டும் குமியாமல் பகிர்ந்து அளிக்கப்படும் ஒரு பொருளாதார . சமுதாய நலச் செயலாகும்
திரு குரானில் 30 முறை வலியுறுத்திச் சொல்லப்படும் இந்தச் செயலை எல்லோரும் சரியான முறையில் செய்தால்
வறுமையின் தாக்கம் பெருமளவில் குறையும்
ஏற்கனவே ஜக்காத் பற்றி விரிவாக எழுதியிருப்பதால் இப்போது இதோடு நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
15102021வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment