Wednesday, 8 September 2021

தமிழ் -பண்டைத் தமிழகத்தில் பார்பிக்யூ

 பண்டைத் தமிழகத்தில் பிரியாணி பார்பிக்யு , கிரில்

மாநகரம் முதல் சிற்றூர் வரை எங்கு பார்த்தாலும் புதிது புதிதாக உணவகங்கள் முளைக்கின்றன் . பெரும்பாலும் பிரியாணி, பரோட்டா, க்ரில்ட் சிக்கன், பார்பிக்யு மட்டன் என அசைவ உணவங்கள் – கையேந்தி உணவகம் முதல் பப்பே (Buffet ) எனப்படும் நட்சத்திர கையேந்தி உணவகம் வரை
எல்லா இடங்களிலும் கம்பியில் கோர்த்து நெருப்பில் வாட்டப்பட்ட கோழி ,மீன் , இறால் ,கறி வகைகள் நல்ல சுவையுடன் பல விலைகளில் சுடச் சுடக் கிடைக்கின்றன.
கம்பி நிறைய கோர்த்த துண்டுகளை அடுப்பில் இருந்து எடுத்து நமக்குப் பரிமாறும்போது வயிறும் மனமும் நிறைந்து விடுகிறது
இப்படி ஒரு உணவு சங்க காலத்திலேயே தமிழரின் உணவாக இருந்தது எனபது ஒரு வியப்பான செய்தி
அருகம்புல்லை மேய்ந்து கொழுத்த ஆடு, அதுவும் செம்மறி ஆடு ,அதன் பின் தொடைக்கறியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுட்டு அதை விருந்தினருக்குப் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குப் பரிமாறுவது தமிழர் பண்பாடு . உண்ணும் விருந்தினர்கள் சூடு பொறுக்கமுடியாமல் அந்தத் துண்டுகளை வாயின் ஒரு பக்கதிலிருந்தூ மறு பக்கத்திற்கு மாற்றி மாற்றி சுவைப்பார்களாம்.
“துராஅய் துற்றிய துருவை அம்புழுக்கின்
கராஅரை வேவைப் பருகு எனத் தண்டி
காழின் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி
அவை அவை முனிகுவம் எனினே சுவைய
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ” (103-108)
பொருநராற்றுப்படை
ஒரே ஒரு உணவு வகையில் எத்தனை இலக்கிய நயம் எத்தனை இலக்கண வரம்புகள் ! எதனை பண்பாட்டு வெளிப்பாடு !!
கொழுத்த தொடை , அதுவும் செம்மறி ஆட்டின் தொடை .அருகம் புல்லை தின்று கொழுத்த செம்மறி ஆடு
தமிழர்களுக்கு நாக்கு நீ------ள----ம் என்று சும்மாவா சொல்கிறார்கள் !
இன்று கூட சுவையை பெரிதாக நினைப்பவர்கள் செம்மறி ஆட்டுத் தொடைக்கறிதான் கேட்டு வாங்குவார்கள்
இந்தபாடலில் வரும்
காழின் சுட்ட -------------ஒற்றி
என்ற வரிகளைத்தான் நேற்று வினாவாகப் பொருள் என்ன என்று கேட்டிருந்தேன்
சரியான விடை அனுப்பிய
சகோ அசனலிக்கும் , கணேசன் சுப்ரமணியனுக்கும்
வாழ்த்துகள்
,பாராட்டுகள்
முயற்சித்த சகோ ரவிராஜுக்கு நன்றி
கறியைதயிரில் ஊர வைத்து சமைப்பார்கள் என்கிறது புறநானூறு
முகலாயர்கள்தான் நம் நாட்டுக்கு பிரியாணியை அறிமுகப்படுத்தியதாக சொல்லப்படுகிறது . ஆனால் அதற்கு முன்பே அரிசிச் சோறில் கறியை சேர்த்து சமைத்து உண்ணும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது . மதுரை மேலூர் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக படைக்கப்படும் உணவு இதற்கு சான்றாக இருக்கிறது
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லும் இன்னும் சில சுவைகள்
கெண்டை , கெளுத்தி , கணவாய் .விலாங்கு வாளை மீன் வகைகளை வயல்களிலிருந்து புத்தம் புதிதாகப் பிடித்து சமைப்பார்கள் – புறநானூறு
வரகரிசிச் சோறு, நண்டுக்குழம்பு , புடலங்காய் கூட்டு –சிறுபாணாற்றுப்படை
திணை அரிசிச் சோறு, கறியை நெய்யில் பொறித்து வேக வைத்து உண்டு, வரும் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் –மலைபடு கடாம்
குழல் மீனைக் காயவைத்து கருவாடாக்கி உண்பார்கள் நெய்தல் நில மக்கள்
“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்” (163)
- சிறுபாணாற்றுப்படை
வேடர் குலப் பெண்கள் எறும்புப் புற்றுகளிலிருந்து புல்லரிசியைத் தேடி எடுத்து ,விளாமரநிழலில் உள்ள உரலில் அதைக்குற்றி ,கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அரிசியை சோறாக்கி உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்பார்கள் – பெரும்பாணாற்றுப்படை
எல்லாமே கறி, மீன் என்று அசைவமாகவே இருக்கிறதே சைவ உணவே இல்லையா என்கிறீர்களா ? ஏன் இல்லை ! நிறையவே இருக்கிறது , எடுத்துக்காட்டாக ஒரு சில
"வரகரிசிச் சோற்றையும், வழுதுணங்காய் வதக்கலையும், முரமுரென்று புளித்திருந்த மோரையும்,” உண்டார்கள் என்கிறது ஔவயாரின் பாடல் ஓன்று
மாதுளம் பழ முத்துக்களை நெய்யில் வதக்கி அதை ஒரு இனிப்புப் பண்டமாக உண்டார்கள் – அகநானூறு
பலாகொட்டைக் குழம்பு, மாங்காய்ப் புளிக்குழம்பு மூம்கில் அரிசி, மோர் பற்றிச் சொல்கிறது மலைபடு கடாம்
நெல் சோறு, வரகுச் சோறு, வெண்நெல் சோறு நண்டுக் கரி, வரால் மீன் குழம்பு ,கோழிக்கறி, முயல் , மாம்பழச் சாறு , மாதுளங்காய், மிளகுப்பொடி, கறிவேப்பிலைப் பொரியல் ,ஊறுகாய் ,கடுகு தாளிப்பது , பசு வெண்ணையில் பொரிப்பது , மோர்க்குழம்பு என சைவம் அசைவம் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டார்கள்
நிறைவு செய்யுமுன் பார்பிக்யு உணவக ங்கள் பற்றி சில வரிகள்
சில ஆண்டுகளுக்கு முன் பார்பிக்யு உணவகம் போயிருந்தோம்.கட்டணம் ஒருவருக்கு ரு 600/ மட்டுமே . நேரத்துக்கு மட்டும்தான் வரம்பு – ஒன்னரை மணி நேரம் என்று நினைவு . மற்றபடி சாப்பிடும் உணவுக்கோ , அளவுக்கோ எந்த வரம்பும் கிடயாது . கறி, கோழி, மீன் இறால் என எல்லா வகை உணவுகளும் நல்ல சுவையுடன் சுடச் சுடகொடுத்துக்கொண்டே இருப்பார்கள் . அத போக இனிப்புகள் , கேக்கில் பல வகைகள் , பனிக்கூழ் என எல்லாமே வரம்பின்றி சாப்பிடலாம்
இங்கு சாப்பிட்டுப் பழகியவர்கள் சோறு, பிரியாணி சப்பாத்தி போன்றவற்றைப் புறந்தள்ளி விட்டுக் கறி, கோழி, மீன் இறால் grilled உணவுகளை ஒரு கை பார்த்து விட்டு கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் பனிக்கூழோடு நிறைவு செய்வார்கள் .
சாப்பிட வந்தவர்கள் யாருக்காவது பிறந்த நாள் , மண நாள் என்று சொன்னால் ஒரு கேக் வெட்டி வாழ்த்துப் பாடுவார்கள் உணவகப் பணியாளர்கள்
அன்றிலிருந்து இன்று வரை மனதில் ஒரு எண்ணம் சிந்ந்தனை – இங்கு அறுநூறு ரூபாய்க்கு சாப்பிடும் உணவுகளை வெளியில் சாப்பிட்டால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் இவர்களுக்கு .
அறுநூறு ரூபாயில் லாபம் பார்க்க முடிகிறது என்றால் மற்றவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் !
பார்பிக்யூ என்ற சொல்லுக்கு திறந்த வெளிப் பெரு விருந்து என்று பொருளாம்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை அனுப்பிய
சகோ அசனலிக்கும் , கணேசன் சுப்ரமணியனுக்கும் மீண்டும் வாழ்த்துகள் ,பாராட்டுகள்
முயற்சித்த சகோ ரவிராஜுக்கு மீண்டும் நன்றி
இறைவன்நாடினால் மீண்டும் தமிழை சுவைப்போம்
௦௮ ௦௯ ௨௦௨௧ புதன்
சர்புதீன் பீ
May be an image of souvlakia
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment