தமிழ் (மொழி) அறிவோம்
இரண்டெழுத்துச் சொல்
முதல் எழுத்து செல்வத் தெய்வத்தைக் குறிக்கும்
அடுத்த எழுத்து செயலைக் குறிக்கும்
இந்த இரண்டு எழுத்துச் சொல்லுக்கு பலப்பல பொருள்கள்
அவற்றில் ஒரு சில
பொருத்தம். நன்மை .அழகு
அடக்கு. தளர்ச்சி. தாகம்
அந்தச் சொல் எது?
விடை
தகை
த என்பது செல்வத்தின் அதிபதியான குபேரனைக்
குறிக்கிறது
கை என்பது கையினால் செய்யும் செயல்களளைக் குறிக்கிறது
தகை
நன்மை:
தகை சார்ந்த சொற்காத்து (குறள்)
மேன்மை:
தகைமாண் குடுமி (புறநா. 6,26)
அடக்கு:
ஆழிதகைந்ததனுத்தொழிலான் (கம்பரா. அதிகாய. 62)
இன்னும் பல பொருட்கள் உண்டு
சகோ விசுவநாதன் சிசு என்ற விடையும்
சி லட்சுமி
சு நன்மை . சுகம் என்று விளக்கமும் அனுப்பியிருந்தார்
விடையும் சு விளக்கமும் வினாவோடு பொருந்தவில்லை
முயற்சிக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
22093021புத
சர்புதீன் பீ
No comments:
Post a Comment