" (இறைவன்) இரவை உங்களுக்கு ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் பகலை உழைப்புக்கு ஏற்றதாகவும் ஆக்கியிருக்கிறான் "
எனும் பொருள் படும் வசனம்
திருமறையில் எங்கு வருகிறது?
விடை
சுரா 25 வசனம் 47
சுரா அல்புர்கான்
தவறு. சரியைப் பிரித்துப் பார்க்கும்
அளவுகோல் அடிப்படை என பல பொருள் தரும் இந்த அரபுச்சொல் புனித குர்ஆனுக்கு மற்றொரு பெயராக உள்ளது
ஏக இறைக் கொள்கை வலியுறுத்தப்படும் இந்த வசனம் இறப்புக்குப் பின் உள்ள வாழ்வுக்கு சான்றாக இருப்பதோடு அறியாமை இருள் மறைந்து மெய்ஞானம் உதித்ததையும் குறிக்கிறது என அறிஞர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்
புனித மறையில் இன்னும் சில இடங்களிலும் இந்த இரவு பகல் செய்தி வருகிறது
எடுத்துக்காட்டு
சுரா 78 வசனம் 9 10 11
சுரா 36 :27
அல்புர்கான்
சுரா வசனம் 70
மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டு சரியான வழியில் சென்றால் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்கிறது
சரியான விடை அனுப்பிய
சகோ அசன் அலிக்கும்
ஷிரீன் பாருக்குக்கும
வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25092021வெள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment