Monday, 29 July 2024

English QUIZ Faucet 30072024 Tue





 English QUIZ

Faucer

30072024 Tue
A very simple question about a very very familiar gadget
Device in the picture
What is it known as in a single word?
Let us meet tomorrow with answers by HIS GRACE
Answer
Faucet
Greetings and Congratulations to those who sent correct
Answers:
M/S
Ashraf Hameeda - First Correct answer
Hasan Ali
Sirajuddin
Sivasubramanian
Aathika (Papti)
Kumarasamy
Manohar
Thanks to M/S
AR Viswanathan, Shireen Farook ,Sharmatha,
Somasekar, Rajendran , Thallath,
Nasreen, Rajathi &Riffath
Explanation
Faucet-
A device that controls the flow of liquid, esp. water, out of a pipe
Many of you have replied “Bidet”
A bidet (US: /bɪˈdeɪ/ ⓘ or UK: /ˈbiːdeɪ/) is a bowl or receptacle designed to be sat upon in order to wash a person's genitalia, perineum, inner buttocks, and anus.
bidet. noun. bi•det bi-ˈdā : a bathroom fixture about the height of the seat of a chair used especially for bathing the external genitals and the anal region.
Again
Shatafa is the answer from three of you
Meaning wise it is correct but it is an Arabic word
Hope I have made it clear
Let us meet tomorrow by His Grace
30072024 Tue
Sherfuddin P







Saturday, 27 July 2024

தமிழ் (மொழி) அறிவோம் கூகில் தமிழ் 28072024 ஞாயிறு



 



தமிழ் (மொழி) அறிவோம்

கூகில் தமிழ்
28072024 ஞாயிறு
கணக்கி வந்தது மனக்கணக்கு ,வாய்பாடு மறந்து போனது
கைப்பேசி வந்தது தொலைபேசி எண்கள் நினைவிலிருந்து நீங்கின
கணினி வந்தது அதுவே, எழுத்துப்பிழை ,இலக்கணப் பிழையை spell check , grammar check செய்து நம் வேலையைக் குறைத்தது
கனவு போல் இருந்த செயற்கை நுண்ணறிவு இப்போது நடைமுறைக்கு வந்து விட்டது
செ.நு.வுக்கு முன்னால் வந்தது கூகில் மொழி மாற்றம்(Google translate)
செயலி ,
மிகவும் பயனுள்ள ஒரு எளிதான செயலி
உலக மொழிகள் அனைத்திலுமே செயல்படும்
ஆனால் மொழி பெயர்ப்பை படித்து ,சரிபார்த்து தேவையான திருத்தங்கள் செய்து கொள்ள வேண்டும்
என் கண்ணில் பட்ட ஒரு சில (வேடிக்கையான) மொழி பெயர்ப்புகள்
“இலவச கப்பல் போக்கு வரத்து ’
மெத்தை விளம்பரம் ஒன்றில் வந்தது
15 ,20 ஆயிரம் ரூபாயில் இருக்கும் மெத்தைக்கு இப்படி ஒரு இலவசமா என்ற ஆர்வத்தில் திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன்
ஆனால் அதைப்பற்றி எந்தக் குறிப்பும் இல்லை
சரி இப்படித்தான் இருக்கும் என்று நானே தெளிந்து கொண்டேன்
அடுத்து ஒரு முக நூல் கட்டுரையில்
“பயணத்தின் பெரும்பகுதி சாலையால் மூடப்பட்டது”
மூன்றாவது இணையத்தில் கண்ட ஒரு குறிப்பு
“வயிற்றுப்போக்கு எதிர்ப்பு சொத்து,”
இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள் மட்டுமே
இன்னும் நிறைய இது போல் வருகின்றன
இப்படியே விட்டால் கூகில் தமிழ் மட்டுமே சரி மற்றதெல்லாம் பிழை என்றொரு நிலை ஏற்படலாம்
இன்றைய வினா
மேலே சொன்ன மூன்றுக்கும் சரியான ஆங்கிலம்/ தமிழ் என்னவாக இருக்கும் ?
விடை
1 Free Shipping- இலவச door delivery
2 Major portion of the journey was covered by road—பயணத்தின் பெரும்பகுதி சாலை வழிப் பயணமாக இருந்தது
3 Anti-diarrheal property,--வயிற்ருப்மூன்றும் போக்கு எதிர்ப்பு பண்பு
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் –மூன்றும் சரியான முதல் விடை
கீதா- மூன்றும் சரி
ஹசன் அலி – 1, 2, சரி
ஷிரீன் பாரூக் 1,3 சரி
சிராஜுதீன் – 1 சரி
ஷர்மதா – 1, 3 தமிழ் பொருள் சரி –ஆங்கிலத்தில் என்ன என்று சொல்லவில்லை
பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் விடை நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௮௦௭௨௦௨௪
28 072024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 25 July 2024

திருமறை குரான் குரான் அமைப்பு சூராக்கள் அர்ரஹ்மான் (55) 26072024 வெள்ளி

 





திருமறை குரான்

குரான் அமைப்பு
சூராக்கள்
அர்ரஹ்மான் (55)
26072024 வெள்ளி
கடந்த பதிவுகளில் திரு மறையின் இதயம் எனப்படும் யாசீன் சுராஹ் (36) பற்றிப் பார்த்தோம்
இன்று சுராஹ் அர்ரஹ்மான் (55)பற்றிப் பார்ப்போம்
1 குர்ஆனில் உள்ள 114 சூராக்களில் இறைவனின் திருப் பெயர் ஒன்றை தலைப்பாகக் கொண்ட ஒரே சூராஹ் இதுதான்
2 மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி ஒன்றாக இறைவன் பேசுவது போல் இந்த சூராஹ் அமைந்துள்ளது
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(55:33)
மேலும்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
என்ற ஆயத்து மொத்தமுள்ள 78 ஆயத்துகளில் 31தடவை வருகிறது
3சூராஹ் முழுதும் பண்டைய அரபு மொழியில் ஸஜ்(refrain ) என்ற கவிதை உரைநடை அமைப்பில் உள்ளது
எனவே படிக்க, கேட்கமிக இனிமையாகவும் ,மனனம் செய்ய மிக எளிதாகவும் இருப்பதாகச் சொல்வார்கள்
இன்றைய வினா
சூராஹ் அர்ரஹ்மான் (55)
இந்த சூராவுக்கு அமைப்பின் அடிப்படையில் ஒரு சிறப்புப் பெயர் இருக்கிறது
அது என்ன ?
விடை
குரானின் அழகு
அலங்காரம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை :
(குர்ஆனின் அழகு என்று சூரா அர்-ரஹ்மானை சொல்லலாம். இது அரூஸ்-உல்-குர்ஆன் என்றும் அழைக்கப்படுகிறது).
ஷிரீன் பாருக் (Adornment of the Quran)
ஹசன் அலி (அலங்காரங்கள் நிறைந்தது)
முயற்சித்த சகோ பாப்டி, ஷர்மதா இருவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் விடை நாளை தமிழில் சிந்திப்போம்
19 முஹர்ரம் (1) 1446
26 072024 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Share

Tuesday, 23 July 2024

முத்திரை பதிப்போம் 14 ஆகாய முதரா (ஆகாஷி முதரா) மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்க 24072024 புதன்





 முத்திரை பதிப்போம் 14

ஆகாய முதரா (ஆகாஷி முதரா)
மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்க
24072024 புதன்
ஆகாஷி என்ற சொல்லுக்கு பார்த்தல், அறிதல் என்று பொருள்
செய்முறை
பத்மாசனம், வஜ்ராசனம் அல்லது சுகாசனத்த்ல் இயல்பாக உட்கார்ந்து கொள்ள வேண்டும்
இரண்டு கைகளிலும் பெருவிரல் நுனி அதேகையில் நடு விரல் நுனியைத் தொட வேண்டும்
மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
நாடியை (முகத்தை ) சிறிது மேல்நோக்கி உயர்த்தி கண்கள் நெற்றியின் நடுப்பகுதியை நோக்கி இருக்க வேண்டும்
நாக்கை மேல்நோக்கி வளைத்து நாக்கின் நுனியால் ஈறுகலைத் தொடவேண்டும்
உல் மூச்சு,சிறிய நிறுத்தம் ,வெளி மூச்சு மூச்சை அடக்கும்,சிறிய நிறுத்தம்
என மூச்சு விடுவதின் நான்கு நிலைகளைக் கவனிக்க வேண்டும்
எச்சரிக்கை
1 நன்ற நிலையில் செய்யக்கூடாது
2 காற்று (வாயு) பிரச்சினை இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது
3 மேலே முகத்தைத் திருப்புவ்திலோ மூச்சை சிறிது அடக்குவதிலோ ஏதேனும் சிரமம் இருப்பது போல் தெரிந்தால் உடனே பயிற்சியியை நிறுத்தி விட வேண்டும்
பார்க்க சற்று சிரமமான ஒரு பயிற்சியாகத் தெரியலாம்
பயன்கலோடு ஒப்பிட்டால் சிரமம் எதுவும் இல்லை
சொல்லப்படும் பயன்கள்
மூளை செயல் திறன் அதிகரிக்கும்
எளிதில் உயர் தியான நிலையை (state of trance)அடையலாம்
உணர்வுகள் அமைதியடைந்து ஒரு மன அமைதி கிடைக்கும்
நாக்கை ஈறுகள் மேல் வைப்பது உணர்வு செயலியை (limbic system) கட்டுபடுத்துகிறது இதனால் அச்சம்,சினம் கவலை போன்ற உணர்வுகள் நீங்கும்
மூளையின் இரு பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கிறது
சக்தி ஓட்டப் பாதைகள் எளிதில் செயல்படுகின்றன
நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன
அதிகம் சாப்பிட்டால் வரும் சிரம நிலையைப் போக்கி உடல் எடை குறைந்த உணர்வைத் தரும்
Sinusitis, ஒற்றைத் தலைவலி ,காது நோய்கள் ,மார்புச் சளி குணமாகும்
குருதி அழுத்தம், இதயத் துடிப்பு சரியாகும்
எலும்புகள், பற்கள் வலிமை பெறும்
நடக்கும்போதும் படியேறும் போதும் ஏற்படும் தடுமாற்றம் குறையும்
இவ்வளவு பயன்கள் உள்ள முத்திரையைப் பயில சற்று சிரமப் படலாமே காசா ,பணமா !
தினமும் சில நிமிடங்கள் செய்தால் சில வாரங்களில் பயன் தெரியும்
அதிகாலையில் செய்வது சிறப்பு
செய்துதான் பார்ப்போமே
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
24072024 புதன்
சர்புதீன் பீ

Monday, 22 July 2024

English QUIZ Outage 23072024 Tue





 English QUIZ

Outage
23072024 Tue
6 letters
Of these only 2 --3rd and 5th are consonants
The word can be divided into two words of equal size of which second reminds Shakespeare's description of Cleopatra
The word of six letters is connected with power in a somewhat negative sense
What's is that word?
Initial letter o
(Too many clues !!)
Answer
Outage
Greetings and Congratulations to
MS . Shireen Farook
The only respondent with correct answer
Explanation
Outage =
1. a period when a power supply or other service is not available or when equipment is closed down.
"frequent power outages"
"Age cannot wither her, nor custom stale her infinite variety" is a line from William Shakespeare's Antony and Cleopatra (1606)
Let's meet tomorrow ISA
,23072024 Tue
Sherfuddin P

தமிழ் (மொழி) அறிவோம் குண்டலகேசி 21072024 ஞாயிறு






 தமிழ் (மொழி) அறிவோம்

குண்டலகேசி

21072024 ஞாயிறு
"பெறுப பெறும் பெற்று³இழப்ப இழக்கும்""
எந்தப் பாடல் வரிகள் இவை?
விடை
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான
குண்டலகேசியில்
மறிப மறியும் மலிர்ப என்று துவங்கும் பாடல்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷிரீன பாருக்
சரியான விடை
வேலவன்
சிவசுப்ரமணியன்
ஹசன் அலி
ரவிராஜ்
மீ மு இஸ்மாயில் &
ஆ ரா விஸ்வநாதன் ---விளக்கமான விடைக்கு நன்றி
விளக்கம்
குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் குறிப்பிடப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் இந்நூல் கருதப்படுகிறது. குண்டலகேசி பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.
அறிவுடையார் செயல்
எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல்.
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று
(மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்)
பொருள்:
நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார்.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
21072024 ஞாயிறு
சர்புதீன் பீ

Thursday, 18 July 2024

திருமறை குரான் குரான் அமைப்பு சூராக்கள் யாசீன் (36) குரானின் இதயம் 19072024 வெள்ளி






 திருமறை குரான்

குரான் அமைப்பு
சூராக்கள்
யாசீன் (36) குரானின் இதயம்
19072024 வெள்ளி
குரான் அமைப்பு –இதில் ஆயத்துகள் பற்றி சில செய்திகளை
கடந்த பதிவுகளில் பார்த்தோம்
இனி வருவது சூராக்கள்
சூராஹ் என்பது அத்தியாயம் ,chapter
அல்பாfத்திஹா என்ற முதல் சூராவில் துவங்கி சூராஹ் அந்நாஸ் வரை 114 சூராக்கள்
இதில் மிகப்பெரிய சூராஹ் அல் பக்ராஹ் என்ற பெயர் கொண்ட சூராஹ் 2 -286ஆயத்துகள்
இந்த 2 ஆவது சூராவில் குரானின் மிகப் பெரிய ஆயத்தான 2:282 கடன் ஆயத்து , அதிகம் படித்து மனனம் செய்யப்படும் ஆயத்துல் குர்ஷி 2:255
எல்லாம் வருகிறது
மிகச் சிறிய சூராஹ் அல்கவ்சர் –சூராஹ் 108 - -மூன்று ஆயத்துகள் கொண்டது
ஆயத்துகள் போல சூராக்களிலும் மக்கீன் மதீனி சூராக்கள் உண்டு
இவை எல்லாம் பெரும்பாலும் பலரும் அறிந்ததுதான்
சொல்லப்போனால் நான் எழுதுவன எல்லாமே எல்லோரும் அறிந்ததுதான்
நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளத்தான் என் பதிவுகள்
அளவில் சிறிய பல சூராக்கள் இருக்கின்றன்
எந்த விதத்திலும் அவற்றை குறைவாக எண்ண முடியாது
குரானின் ஒவ்வொரு எழுத்தும் ,ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஆயத்தும் ஒவ்வொரு சூராவும் இறைவன் படைப்பு எனவே எல்லாமே மிக முக்கியமானவைதான்
சூராக்கள் பற்றி பின்பு ஒரு நாள் சுருக்கமாக விளக்கமாக எழுத எண்ணம் –இறைவன் நாடினால்
எனவே இந்தத் தொடரில் சூராக்கள் பற்றி ஒரு சில பகுதிகள் மட்டுமே
இன்றைய வினா
சுராஹ் யாசீன் (36) –இதன் சிறப்பு எல்லோரும் அறிந்த ஓன்று
இந்த சூராவுக்கு ஒரு சிறப்புப் பெயர் இருக்கிறது
அது என்ன ?
விடை
குரானின் இதயம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பர்வேஸ்—முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
ஷிரீன் பாரூக்
பாப்டி
சிராஜுதீன்
ஷர்மதா
Khatheeb Mamuna Lebbai
விளக்கம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனின் இதயம் (சூரா) யாஸீனாகும்
அதன் மொழித்திறன் , நடையில் தெளிவு ,அழகு இதோடு
இதயத்தை உலுக்கி உறங்கும் உணர்வுகளை உசுப்பி விட்டு திரு மறையின் செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக சொல்வது
இவற்றால் இது குரானின் இதயம் என்று சொல்லப்படுகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
12 முஹர்ரம் (1) 1446
19 072024 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 16 July 2024

சொந்த ஊர் 17 சகோ ஜோதி 2 17072024 புதன்

 





சொந்த ஊர் 17

சகோ ஜோதி 2
17072024 புதன்
நாலு மாத இடைவெளிக்குப்பின் சொந்த ஊர்
கொஞ்சம் எனக்கே திகைப்பாக இருக்கிறது எங்கே தொடர வேண்டும் என்று
வழக்கம் போல் இறைவன் மேல் சுமையை இறக்கி வைத்து விட்டு தொடருவோம்
இப்போது சகோ ஜோதியின் இரண்டாவது பதிவு ( சில மாற்றங்களுடன் – அவரிடம் அனுமதி பெற்று)
சகோ ஜோதி
---திரு பறறி ஷர்மதாவின்பதிவு சுவாரஸ்யமாகஇருந்தது.
சீதேவி அனுபவங்கள்மிகவும் நன்றாக இருந்தது
சென்றவாரம் சிக்சர்தரின் பதிவும்மிகவும் நன்றாகஇருந்தது.
ஆசாப் பெரியம்மா, பாத்தக்கா பற்றிபல செய்திகளை
சுவைபட எழுதியிருந்தார்.
ஆசாப் பெரியம்மாஎன்றால் நெடிய உருவம்
அதிகாரமான குரல் என்பதுதான் நினைவில் வரும்
தன் ஒருவருக்கு என்றாலும் ஏனோ தானோ என்று சாப்பிடாது.
அந்த கருவேல முள்விறகை வைத்து வக்கனையாகத்தான்
சமைத்து சாப்பிடும்.
நேற்று முன்தினம்நடைபெற்ற சபேபராத்
அன்று (திருவில் களி கிண்டி பாத்தியா என்பது தான் பெயர்)
நம்மூவரையும், (மெகராஜ், நான், நீ) .அழைத்து நெய், தேங்காய் நிறைய சேர்த்துகளி செய்துகொடுத்தது. ரொம்பருசியாக இருந்தது..
கட்டிடத்தில் வந்து குமுதம், விகடன்கதைகளை விடாமல படிக்குமாம்.
சினிமா பார்த்து விட்டு துல்லியமாக (அன்றைய குமுதம் விமரிசனத்திற்கு இணையாக) விமர்சனம் செய்யுமாம்.
பாத்தக்கா டைம்லி ஜோக் அடிப்பதில்மிகவும் பெயர் பெற்றது
"அட இந்த இனிப்பு நீருக்கு (சுகர் டயாபட்டிஸ்) மருந்து எளவ சாப்புட்டு,
சோத்துப் பருக்கைலஅள்ளுது என்று அதுசொல்லும் பாணி மிகவும் சிரிப்பாக இருக்கும்.
பாத்தக்காவெல்லாம் ஒன்றும் இல்லை எனும் படி பரிமளாக்கா (வேளச்சேரி) அடிக்கும் ஜோக்கிற்கு சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
நினைத்துப் பார்த்தால் நம் ஊர் வாசிகள் அனைவருமே கலைநயம் மிக்கவர்கள் தான்.
நம்பரிமளாக்கா சத்தம் வெளியே வராமல் நாசூக்காக (அது நம் பெரியத்தா பாணி) சொல்ல வந்த கருத்தை அழுத்தம் திருத்த மாகக்கூறிவிடும்)
முத்தக்கா அதி புத்திசாலி .
ஆளாலுக்கு தகுந்தபடி சிரித்துக்கொண்டே நைசாக பேசி காரியம் சாதித்து விடும்..
அதன்புன்னகை மறக்க முடியாதது.
சரிவண்ணன் டான்ஸ் பாட்டு பற்றிகேட்டவே வேண்டியதில்லை.
சினிமா பார்த்து விட்டு பெரிய பெரியடான்ஸர்களின் டான்சை அச்சுப் பிசகாமல் ஆடிக் காண்பிக்கும்.
பெரியம்மாவிற்கு தெரியாமல் என்பதுதான் அதில் ஹைலைட்டான விஷயம்
காத்தூனக்கா சதா எதையும் சட்டை செய்யாமல் பாட்டுப் பாடி சிரித்துச்
கொண்டேயிருக்கும் லாவகமாக ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச்செல்லும்.
ஜெமிலாக் குப்பியின பேச்சு தனி ரகம்.
ஹை பீச்சில் உச்சஸ் தாய் குரலில் ஆரம்பித்த அதே வேகத்தில் குரலை
இறக்கிப் பேசும்.
சையது சச்சா பற்றி சில வார்த்தைகள்:
குடும்பம், என்று ஒன்று இல்லாவிட்டாலும் நம் உறவினர் அனைவருமே தம் வீட்டில் ஒரு நபராகவே பாவித்து வேலையும் வாங்கிக் கொண்டு அது கேட்கும் ருசியில் சமைத்தும் கொடுப்பார்கள்.
நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு சென்று வானம்பாடியாக
கடைசி வரை வாழ்த்து முடித்த சச்சாவின் வாழ்கையும் ஒரு சகாப்தம்தான்.
இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.
இன்னும் ஒரு விஷயம்.
இன்று கர்ப்ப மான பெண்களுக்கு தாய், சேய் நலனுக்காக தடுப்பூசி போடப்படுகிறது.
நம் ஊரில் கர்பம் தரித்த ஐந்தாம், ஏழாம் மாதங்களில்பல மருத்துவ குணம்
கொண்ட மரங்களின் பட்டைகளில் சாறு எடுத்து, கசப்பு தெரியாமலிருக்க
களி கிண்டி அதனுடன் அந்த மருந்தை கொடுப்பார்கள்.
கர்ப்பமான பெண்கள் தைரியம் அடையும் படி உறவினர் பலரை
அழைத்து விருந்து வைத்து , கர்பிணியைவாழ்த்தி ஆசி கூறவைத்து அதை ஒரு
பெரிய விழாவாகவேகொண்டாடுவார்கள்.
இக்காலங்களில் வளையல் போட்டுமகிழ்கிறோம்.
காரைக்குடியில் நம்வீட்டில் முத்துக்கு பெரிய விழாவாகக்கொண்டாடினார்கள்.
அந்த விருந்தில் வாவரசிகளுக்கு (வாழ்வரசிகள்) அவித்த முழு முட்டைவைப்பார்கள்.
ஜோதி (ஷர்புதீன்) க்கு அப்போது எட்டு, ஒன்பது வயதிருக்கும்.
"நானும் வாவரசிதான் என்று உட்கார்ந்து முழு முட்டை வாங்கி
சாப்பிட்டது.
அந்த வயதிலேயே தான் வாவ ரசியா த்தான் கடைசி வரைவாழ வேண்டுமென்ற
முத்திரையை மனதில் பதித்து விட்டது போல்,
கணவர், மகன், மகள், பேரன், பேத்திகளைவிட்டு விட்டு த தான்
விரும்பிய பட்டத்துடன் பறந்து போய் விட்டது.
எல்லாம் இறைவன்செயல்
இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
போட்டோக்கள் இருந்தால் அனுப்பு பழயவர்களைப் பார்ப்பது நமக்கு
புத்துணர்வை வூட்டும்.டர்ந்து உங்கள் பதிவுகளை எதிர் நோக்குகிறேன் -------
இறைவன் அருளால் இனி மாதம் ஒரு முறை சொந்த ஊர் பயணம் தொடரும்
இன்னும் நிறையப் பேர் எழுத தயங்கிக் கொண்டே இருக்கிறர்கள்
எழுதப் போவது நம்மூர் பற்றி அனுப்பபோவது எனக்கு
பிறகென்ன தயக்கம்?
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
17072024 புதன்
சர்புதீன் பீ

Monday, 15 July 2024

English QUIZ 16072024 Tue Mary Had a little lamb





 English QUIZ

16072024 Tue Mary Had a little lamb
Last few weeks we felt refreshed and rejuvenated by traveling through school and college day memories
Now let us become still younger by recalling nursery rhymes.
What is the first song recorded in phonograph machine by Edison?
Answer
Mary had a little lamb
A nursery rhyme
Greetings and Congratulations to those who sent correct answers:
M/S
Ashraf Hameeda - First Correct answer
Hasan Ali
Velavan
Selvakumar
Paapti
Sharmatha
Sivasubramnaian
AR Viswanathan
Shireen Farook
Raviraj
Explanation
Mary had a little lamb
His fleece was white as snow, yeah
Everywhere the child went
Your little lamb was sure to go now
He followed her to school one day
And broke the teachers cool
What a time did they have
That day at school
Tisket, tasket, baby
A green and yellow basket
Sent a letter to my baby
And on my way I passed it
A very popular nursery rhyme
It has the distinction the first song to be recorded in phonograph machine invented by Edson 3y
On December 6, 1877 (the exact date is disputed) Thomas Edison took the first prototype cylinder recording machine that had been constructed over the previous two days by his mechanic John Kruesi, and spoke the nursery rhyme “Mary Had A Little Lamb” into it. Then he successfully played back his own voice.
For the information of younger generation
Phonograph machine, its later edition Gramophone, Record player etc have become outdated with the invention of so many modern gadgets
Let us meet tomorrow I S A
16072024 Tue
Sherfuddin P