திருமறை குரான்
குரான் அமைப்பு
சூராக்கள்
அர்ரஹ்மான் (55)
26072024 வெள்ளி
இன்று சுராஹ் அர்ரஹ்மான் (55)பற்றிப் பார்ப்போம்
1 குர்ஆனில் உள்ள 114 சூராக்களில் இறைவனின் திருப் பெயர் ஒன்றை தலைப்பாகக் கொண்ட ஒரே சூராஹ் இதுதான்
2 மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி ஒன்றாக இறைவன் பேசுவது போல் இந்த சூராஹ் அமைந்துள்ளது
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(55:33)
மேலும்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
என்ற ஆயத்து மொத்தமுள்ள 78 ஆயத்துகளில் 31தடவை வருகிறது
3சூராஹ் முழுதும் பண்டைய அரபு மொழியில் ஸஜ்(refrain ) என்ற கவிதை உரைநடை அமைப்பில் உள்ளது
எனவே படிக்க, கேட்கமிக இனிமையாகவும் ,மனனம் செய்ய மிக எளிதாகவும் இருப்பதாகச் சொல்வார்கள்
இன்றைய வினா
சூராஹ் அர்ரஹ்மான் (55)
இந்த சூராவுக்கு அமைப்பின் அடிப்படையில் ஒரு சிறப்புப் பெயர் இருக்கிறது
அது என்ன ?
விடை
குரானின் அழகு
அலங்காரம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை :
(குர்ஆனின் அழகு என்று சூரா அர்-ரஹ்மானை சொல்லலாம். இது அரூஸ்-உல்-குர்ஆன் என்றும் அழைக்கப்படுகிறது).
ஷிரீன் பாருக் (Adornment of the Quran)
ஹசன் அலி (அலங்காரங்கள் நிறைந்தது)
முயற்சித்த சகோ பாப்டி, ஷர்மதா இருவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் விடை நாளை தமிழில் சிந்திப்போம்
19 முஹர்ரம் (1) 1446
26 072024 வெள்ளி
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment