Thursday, 4 July 2024

திருமறை குரான் குரான் அமைப்பு ஆயத்துகள் ஆயத்துல் குர்ஷி (2:255) 05072024 வெள்ளி






 திருமறை குரான்

குரான் அமைப்பு ஆயத்துகள்
ஆயத்துல் குர்ஷி (2:255)
05072024 வெள்ளி
சென்ற பகுதியில் குர்ஆனில் உள்ள ம்கபெரிய, மிகச் சிறிய ஆயத்துகள் பற்றிப் பார்த்தோம்
இன்றைய வினாவுக்குப் போகுமுன்
வசனம் ,சூராஹ் இது பற்றி ஒரு சிறிய குழப்பம் சிலருக்கு இருப்பது போல் தோன்றுகிறது
சூராஹ் என்பது அத்தியாயம் ,chapter
வசனம் (ஆயத்) என்பது ஒரு வாக்கியம் sentence என்று வைத்துக்கொள்ளலாம்
அல்பாfத்திஹா என்பது முதல் சூராஹ்
அதில் 7 வசனங்கள் இருக்கின்றன
இன்றைய வினா
மிக அதிகமாக ஓதப்படும்,மனனம் செய்யப்படும் குரான் வசனம் எது ?
விடை
சுராஹ் 2(அல் பக்ரா) வசனம் 255
ஆயத்துல் குர்ஷி ( அரியாசன ஆயத்துThrone Verse) எனப்படும்
இந்த வசனம்தான் உலகெங்கிலும் அதிக அளவில் ஓதப்பட்டு மனனம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தபட்டும் வருகிறது
குரானின் மிக மகத்தான வசனம் என்று போற்றப்படும் இந்த வசனம் பாதுகாப்பு தரும் வசனம் என்று அறியப்படுகிறது
சைத்தானின் தீங்கு,
கண்ணேறு
மன நோய்
போன்ற பலவற்றிலிருந்து பாதுகாப்புத் தரும் இந்த வசனம் பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
ஆனால் வந்தது ஒரு சில சரியான விடைகளே
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ Khatheeb Mamuna Lebbai முதல் சரியான விடை
பர்வேஸ் அஹமத்
ஹசன் அலி
ஆயத்துல் குர்ஸி
اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاواتِ وَالأَرْضَ وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
ஆயத்துல் குர்ஸி
"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
255. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?17
அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.
அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர.
அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று.
அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.
திருக்குர்ஆன் 2:255F
வந்த மற்ற விடைகள்
அல்ஹம்து சூராஹ் ,அல் இக்லாஸ் சுராஹ் ,
பிஸ்மில்ல்லாஹ் ஹிர்ரமாநிர்ராஹீம் ,.
அல்லா
, ளா இலாஹா இல்லலாஹு
ஆர்வத்துடன் பங்கெடுத்த
சகோ மெஹராஜ் . தல்லத் ஷர்மதா
அனைவரு க்கும் நன்றி
சிறப்பு நன்றி சகோ ரவி ராஜுக்கு
(சுராஹ், வசனம் குழப்பம் இன்னும் தெளிவாகவில்லையோ என்று
தோன்றுகிறது )
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
28 துல்ஹஜ் (12) 1445
05072024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment