மூலிகை அறிமுகம்
மேப் பூக்கள் (May Flower/Flame Tree /Gul Mohar)
03062024புதன்
எச்சரிக்கை
நாம் தோட்டத்திலும் தெரு ஓரங்களிலும் பார்க்கும் மரம் ,செடி கொடிகளின் மருத்துவப் பயன்களை எடுத்துச் சொல்வதே இந்தபதிவின் நோக்கம்
தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை மருந்தாகப் பயன் படுத்த வேண்டாம்
இன்று நாம் பார்க்க இருப்பது மேப் பூக்கள் எனும் அழகான மலர் தரும் மரம் பற்றி
பொதுவாக மே மாதத்தில் பூ பூப்பதால் இந்தப் பெயர்
பருவத்தில் பூத்துக் குலுங்கும்போது அந்தப் பகுதியே அழகாகத் தோன்றும்
இதுவரை இதை நான் மூலிகையாக அறிந்ததில்லை
ஒரு ஆர்வத்தில் இணையத்தில் தேடிக் கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அழகுக்கும் அலங்காரத்துக்கும் மட்டுமே அறியப்பட்ட இதை இரட்டிப்பு எச்சரிக்கயுடன் மருந்தாகக் கையாள வேண்டும்
இது நீரிழிவு எதிர்ப்பு செயல்பாடு,
பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு,
வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்பு,
ஹெபடோபுரோடெக்டிவ் / சைட்டோடாக்ஸிக் தன்மை ,
நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு,
அழற்சி எதிர்ப்பு செயல்பாடு போன்ற சில மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
இது லெகுமினோசே குடும்பத்தைச் சேர்ந்தது.
குல்மோஹரில் ஸ்டெரால்கள், பீனாலிக் கலவைகள், ட்ரைடர்பெனாய்டுகள் மற்றும் ஃபால்வோனாய்டுகள் உள்ளன.
இதன் தாவரவியல் பெயர்
Delonix regia
மருத்துவ பயனில்லாத செடியோ கொடியோ மரமோ கிடையாது என்று சொல்வார்கள்
அந்த வகையில் இந்த அழகிய பூவும் ஒரு மூலிகைதான் என அறிந்து கொண்டோம்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சந்திப்போம்
03062024புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment