Tuesday, 16 July 2024

சொந்த ஊர் 17 சகோ ஜோதி 2 17072024 புதன்

 





சொந்த ஊர் 17

சகோ ஜோதி 2
17072024 புதன்
நாலு மாத இடைவெளிக்குப்பின் சொந்த ஊர்
கொஞ்சம் எனக்கே திகைப்பாக இருக்கிறது எங்கே தொடர வேண்டும் என்று
வழக்கம் போல் இறைவன் மேல் சுமையை இறக்கி வைத்து விட்டு தொடருவோம்
இப்போது சகோ ஜோதியின் இரண்டாவது பதிவு ( சில மாற்றங்களுடன் – அவரிடம் அனுமதி பெற்று)
சகோ ஜோதி
---திரு பறறி ஷர்மதாவின்பதிவு சுவாரஸ்யமாகஇருந்தது.
சீதேவி அனுபவங்கள்மிகவும் நன்றாக இருந்தது
சென்றவாரம் சிக்சர்தரின் பதிவும்மிகவும் நன்றாகஇருந்தது.
ஆசாப் பெரியம்மா, பாத்தக்கா பற்றிபல செய்திகளை
சுவைபட எழுதியிருந்தார்.
ஆசாப் பெரியம்மாஎன்றால் நெடிய உருவம்
அதிகாரமான குரல் என்பதுதான் நினைவில் வரும்
தன் ஒருவருக்கு என்றாலும் ஏனோ தானோ என்று சாப்பிடாது.
அந்த கருவேல முள்விறகை வைத்து வக்கனையாகத்தான்
சமைத்து சாப்பிடும்.
நேற்று முன்தினம்நடைபெற்ற சபேபராத்
அன்று (திருவில் களி கிண்டி பாத்தியா என்பது தான் பெயர்)
நம்மூவரையும், (மெகராஜ், நான், நீ) .அழைத்து நெய், தேங்காய் நிறைய சேர்த்துகளி செய்துகொடுத்தது. ரொம்பருசியாக இருந்தது..
கட்டிடத்தில் வந்து குமுதம், விகடன்கதைகளை விடாமல படிக்குமாம்.
சினிமா பார்த்து விட்டு துல்லியமாக (அன்றைய குமுதம் விமரிசனத்திற்கு இணையாக) விமர்சனம் செய்யுமாம்.
பாத்தக்கா டைம்லி ஜோக் அடிப்பதில்மிகவும் பெயர் பெற்றது
"அட இந்த இனிப்பு நீருக்கு (சுகர் டயாபட்டிஸ்) மருந்து எளவ சாப்புட்டு,
சோத்துப் பருக்கைலஅள்ளுது என்று அதுசொல்லும் பாணி மிகவும் சிரிப்பாக இருக்கும்.
பாத்தக்காவெல்லாம் ஒன்றும் இல்லை எனும் படி பரிமளாக்கா (வேளச்சேரி) அடிக்கும் ஜோக்கிற்கு சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
நினைத்துப் பார்த்தால் நம் ஊர் வாசிகள் அனைவருமே கலைநயம் மிக்கவர்கள் தான்.
நம்பரிமளாக்கா சத்தம் வெளியே வராமல் நாசூக்காக (அது நம் பெரியத்தா பாணி) சொல்ல வந்த கருத்தை அழுத்தம் திருத்த மாகக்கூறிவிடும்)
முத்தக்கா அதி புத்திசாலி .
ஆளாலுக்கு தகுந்தபடி சிரித்துக்கொண்டே நைசாக பேசி காரியம் சாதித்து விடும்..
அதன்புன்னகை மறக்க முடியாதது.
சரிவண்ணன் டான்ஸ் பாட்டு பற்றிகேட்டவே வேண்டியதில்லை.
சினிமா பார்த்து விட்டு பெரிய பெரியடான்ஸர்களின் டான்சை அச்சுப் பிசகாமல் ஆடிக் காண்பிக்கும்.
பெரியம்மாவிற்கு தெரியாமல் என்பதுதான் அதில் ஹைலைட்டான விஷயம்
காத்தூனக்கா சதா எதையும் சட்டை செய்யாமல் பாட்டுப் பாடி சிரித்துச்
கொண்டேயிருக்கும் லாவகமாக ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச்செல்லும்.
ஜெமிலாக் குப்பியின பேச்சு தனி ரகம்.
ஹை பீச்சில் உச்சஸ் தாய் குரலில் ஆரம்பித்த அதே வேகத்தில் குரலை
இறக்கிப் பேசும்.
சையது சச்சா பற்றி சில வார்த்தைகள்:
குடும்பம், என்று ஒன்று இல்லாவிட்டாலும் நம் உறவினர் அனைவருமே தம் வீட்டில் ஒரு நபராகவே பாவித்து வேலையும் வாங்கிக் கொண்டு அது கேட்கும் ருசியில் சமைத்தும் கொடுப்பார்கள்.
நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு சென்று வானம்பாடியாக
கடைசி வரை வாழ்த்து முடித்த சச்சாவின் வாழ்கையும் ஒரு சகாப்தம்தான்.
இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.
இன்னும் ஒரு விஷயம்.
இன்று கர்ப்ப மான பெண்களுக்கு தாய், சேய் நலனுக்காக தடுப்பூசி போடப்படுகிறது.
நம் ஊரில் கர்பம் தரித்த ஐந்தாம், ஏழாம் மாதங்களில்பல மருத்துவ குணம்
கொண்ட மரங்களின் பட்டைகளில் சாறு எடுத்து, கசப்பு தெரியாமலிருக்க
களி கிண்டி அதனுடன் அந்த மருந்தை கொடுப்பார்கள்.
கர்ப்பமான பெண்கள் தைரியம் அடையும் படி உறவினர் பலரை
அழைத்து விருந்து வைத்து , கர்பிணியைவாழ்த்தி ஆசி கூறவைத்து அதை ஒரு
பெரிய விழாவாகவேகொண்டாடுவார்கள்.
இக்காலங்களில் வளையல் போட்டுமகிழ்கிறோம்.
காரைக்குடியில் நம்வீட்டில் முத்துக்கு பெரிய விழாவாகக்கொண்டாடினார்கள்.
அந்த விருந்தில் வாவரசிகளுக்கு (வாழ்வரசிகள்) அவித்த முழு முட்டைவைப்பார்கள்.
ஜோதி (ஷர்புதீன்) க்கு அப்போது எட்டு, ஒன்பது வயதிருக்கும்.
"நானும் வாவரசிதான் என்று உட்கார்ந்து முழு முட்டை வாங்கி
சாப்பிட்டது.
அந்த வயதிலேயே தான் வாவ ரசியா த்தான் கடைசி வரைவாழ வேண்டுமென்ற
முத்திரையை மனதில் பதித்து விட்டது போல்,
கணவர், மகன், மகள், பேரன், பேத்திகளைவிட்டு விட்டு த தான்
விரும்பிய பட்டத்துடன் பறந்து போய் விட்டது.
எல்லாம் இறைவன்செயல்
இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
போட்டோக்கள் இருந்தால் அனுப்பு பழயவர்களைப் பார்ப்பது நமக்கு
புத்துணர்வை வூட்டும்.டர்ந்து உங்கள் பதிவுகளை எதிர் நோக்குகிறேன் -------
இறைவன் அருளால் இனி மாதம் ஒரு முறை சொந்த ஊர் பயணம் தொடரும்
இன்னும் நிறையப் பேர் எழுத தயங்கிக் கொண்டே இருக்கிறர்கள்
எழுதப் போவது நம்மூர் பற்றி அனுப்பபோவது எனக்கு
பிறகென்ன தயக்கம்?
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
17072024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment