Tuesday, 23 July 2024

முத்திரை பதிப்போம் 14 ஆகாய முதரா (ஆகாஷி முதரா) மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்க 24072024 புதன்





 முத்திரை பதிப்போம் 14

ஆகாய முதரா (ஆகாஷி முதரா)
மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்க
24072024 புதன்
ஆகாஷி என்ற சொல்லுக்கு பார்த்தல், அறிதல் என்று பொருள்
செய்முறை
பத்மாசனம், வஜ்ராசனம் அல்லது சுகாசனத்த்ல் இயல்பாக உட்கார்ந்து கொள்ள வேண்டும்
இரண்டு கைகளிலும் பெருவிரல் நுனி அதேகையில் நடு விரல் நுனியைத் தொட வேண்டும்
மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
நாடியை (முகத்தை ) சிறிது மேல்நோக்கி உயர்த்தி கண்கள் நெற்றியின் நடுப்பகுதியை நோக்கி இருக்க வேண்டும்
நாக்கை மேல்நோக்கி வளைத்து நாக்கின் நுனியால் ஈறுகலைத் தொடவேண்டும்
உல் மூச்சு,சிறிய நிறுத்தம் ,வெளி மூச்சு மூச்சை அடக்கும்,சிறிய நிறுத்தம்
என மூச்சு விடுவதின் நான்கு நிலைகளைக் கவனிக்க வேண்டும்
எச்சரிக்கை
1 நன்ற நிலையில் செய்யக்கூடாது
2 காற்று (வாயு) பிரச்சினை இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது
3 மேலே முகத்தைத் திருப்புவ்திலோ மூச்சை சிறிது அடக்குவதிலோ ஏதேனும் சிரமம் இருப்பது போல் தெரிந்தால் உடனே பயிற்சியியை நிறுத்தி விட வேண்டும்
பார்க்க சற்று சிரமமான ஒரு பயிற்சியாகத் தெரியலாம்
பயன்கலோடு ஒப்பிட்டால் சிரமம் எதுவும் இல்லை
சொல்லப்படும் பயன்கள்
மூளை செயல் திறன் அதிகரிக்கும்
எளிதில் உயர் தியான நிலையை (state of trance)அடையலாம்
உணர்வுகள் அமைதியடைந்து ஒரு மன அமைதி கிடைக்கும்
நாக்கை ஈறுகள் மேல் வைப்பது உணர்வு செயலியை (limbic system) கட்டுபடுத்துகிறது இதனால் அச்சம்,சினம் கவலை போன்ற உணர்வுகள் நீங்கும்
மூளையின் இரு பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கிறது
சக்தி ஓட்டப் பாதைகள் எளிதில் செயல்படுகின்றன
நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன
அதிகம் சாப்பிட்டால் வரும் சிரம நிலையைப் போக்கி உடல் எடை குறைந்த உணர்வைத் தரும்
Sinusitis, ஒற்றைத் தலைவலி ,காது நோய்கள் ,மார்புச் சளி குணமாகும்
குருதி அழுத்தம், இதயத் துடிப்பு சரியாகும்
எலும்புகள், பற்கள் வலிமை பெறும்
நடக்கும்போதும் படியேறும் போதும் ஏற்படும் தடுமாற்றம் குறையும்
இவ்வளவு பயன்கள் உள்ள முத்திரையைப் பயில சற்று சிரமப் படலாமே காசா ,பணமா !
தினமும் சில நிமிடங்கள் செய்தால் சில வாரங்களில் பயன் தெரியும்
அதிகாலையில் செய்வது சிறப்பு
செய்துதான் பார்ப்போமே
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
24072024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment