தமிழ் (மொழி) அறிவோம்
குண்டலகேசி
21072024 ஞாயிறு
"பெறுப பெறும் பெற்று³இழப்ப இழக்கும்""
விடை
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான
குண்டலகேசியில்
மறிப மறியும் மலிர்ப என்று துவங்கும் பாடல்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷிரீன பாருக்
சரியான விடை
வேலவன்
சிவசுப்ரமணியன்
ஹசன் அலி
ரவிராஜ்
மீ மு இஸ்மாயில் &
ஆ ரா விஸ்வநாதன் ---விளக்கமான விடைக்கு நன்றி
விளக்கம்
குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் குறிப்பிடப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் இந்நூல் கருதப்படுகிறது. குண்டலகேசி பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.
அறிவுடையார் செயல்
எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல்.
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று
(மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்)
பொருள்:
நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார்.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
21072024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment