Saturday, 6 July 2024

தமிழ் (மொழி ) அறிவோம் தீவு, திட்டு 0707 2024 ஞாயிறு






 தமிழ் (மொழி ) அறிவோம்

தீவு, திட்டு
0707 2024 ஞாயிறு
தீவு (island) –எல்லோரும் அறிந்த ஒரு சொல்
எல்லாப்பக்கங்களிலும் நீர் சூழ்ந்த நிலபரப்பு தீவு
நம் அண்டை நாடான இலங்கை (ஸ்ரீ லங்கா) ஒரு தீவு
வினா
ஆற்று நீருக்கு நடுவே அமைந்த ஒரு நிலப்பரப்பைக் குறிக்க தனியாக ஒரு சொல் இருக்கிறது
அது என்ன ?
விடை(கள்)
திட்டு
துருத்தி ,குதிர் ,குடா
மண் குதிர்
என் தேர்வு வேறு
இந்த விடைகளும் சரியே
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவி ராஜ் – முதல் சரியான விடை :
[09:20, 06/07/2024] Cb rtd Raviraj: மண்-குதிர் என்பதற்கு மணல் மேடு-மண்திட்டு என்பது பொருள். இது
[09:20, 06/07/2024] Cb rtd Raviraj: இந்த மண்-குதிரைத்தான் நம்பி ஆற் றில் இறங்காதே என்றார்கள் நமது முன்னேர்.
விளக்கத்துக்கு நன்றி
ஹசன் அலி
வேலவன்
கணேச சுப்ரமணியம் :
[09:26, 06/07/2024] CB retd Ganesa subramaniam: துருத்தி (மணிமேகலை))
[11:01, 06/07/2024] CB retd Ganesa subramaniam: குதிர்,,குடா
In Tanjore district, near கண்டியூர். காவேரிக்கும் குடமுருட்டி ஆற்றுக்கும் இடையில் திருப்பூந்துருத்தி என்று ஓர் ஊர் உள்ளது.ஆற்றிடைக் குறையிலுள்ள ஊர்கள் "துருத்தி" என்று பெயர் பெறும். இப்பெயர் பெற்றது.
விளக்கத்துக்கு நன்றி
ஆர்வத்துடன் பங்கெடுத்த சகோ
சிராஜுதீன் , ஆ ரா விஸ்வநாதன் ,செல்வகுமார் மூவருக்கும் நன்றி
(ஆற்றுப்படுகை
ஆற்றினுள்கரைசார்ந்தநிலப்பகுதி; ஆற்றுப்பாய்ச்சலுள்ளநிலம்.
• படுகை, பெயர்ச்சொல்.
1. அடுக்கு
2. ஆற்றின் நீர்ப்போக்கால், மண் படிந்து உள்ள நிலம்
படுகை – பொருள் பொருந்தவில்லை
கொசுறாக இன்னொரு வினா
கட்செவி (WhatsApp )யில் நீல நிறத்தில் ஒரு சிறிய வட்டம் வருவதைப் பார்த்திருப்பீர்கள்
அது எதைக் குறிக்கிறது ?
விடை
Artificial Intelligence (AI) செயற்கை நுண்ணறிவுக்கான குறியீடு அந்த நீல வட்டம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பாப்டி(ஆத்திக்கா)
முதல் சரியான விடை
சிராஜுதீன் – விளக்கமான விடைக்கு நன்றி – விளக்கம் கீழே
செல்வகுமார்
விளக்கம்
நீல வட்டத் தைச் சொடுக்கினால் எண்ணற்ற தலைப்புகள் வரிசையாக வரும்
அதில் ஒன்றைத் தேர்வு செய்தால் அது பற்றி உங்கள் தேவையை அறிய சில வினாக்கள் வரும்
அவற்றிற்கு விடை சொன்னபின் நீங்கள் தேடும் விடை கிடைக்கும்
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் AI நம் வாழ்வில் நுழைந்துவிட்டது
மின்னஞ்சல் ,கூகிள் தேடுதல் போல் செயற்கைநுண்ணறிவை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயம்
என்ன –சிந்திக்கும் திறன் மிகவும் குறைந்து விடும்—இன்றைய தலை முறைக்கு மனக்கணக்கு, வாய்பாடு தெரியாமல் போனது போல்
AI பற்றி முனைவர் சாஜித் விளக்கமாக எழுதிஎதை முன்பு பதிவு செய்திருக்கிறேன்
சகோ சிராஜுதீன் :
:
இது மெட்டா ஏஇ அல்லது லாமா என்றழைக்கப்படும் புது வாட்ஸ்அப் ஏஐ அம்சம் (New WhatsApp AI Feature Called Meta AI or Llama)
இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் புதிய மெட்டா ஏஐ அம்சம் அல்லது லாமா (Llama) அம்சம் உண்மையில் என்ன செய்யும் ?
AI இடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கிறது. சந்தேகங்களுக்கான விடையை இந்த AI மூலம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.வாட்ஸ்அப் இல் காணப்படும் புதிய மெட்டா ஏஐ லாமா இப்போது பல விதமான தகவல்களை வழங்குகிறது.
அதேபோல், அதுவே பல தலைப்புகளிலில் இருந்து ஏதேனும் ஒன்றை கிளிக் செய்ய அனுமதிக்கிறது. மேலும் விருப்பத்திற்கேற்ற தேர்வின் அடிப்படையில் விளக்கங்களை வழங்குகிறது. இது பயனர்களை வாட்ஸ்அப் உடன் கூடுதல் நேரம் இணைத்து வைக்கிறது.
இந்த AI சாட் மற்றும் வாட்ஸ்அப் புகைப்படங்களை படிக்கும் என்ற கவலை பயனர்களுக்கு இருக்க வேண்டாம் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது. இதுவொரு சாதரண AI மட்டுமே. உங்கள் வாட்ஸ்அப் சாட், வீடியோ கால், வாய்ஸ் கால் தகவல்கள் எல்லாம் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் உடன் வருகிறது என்பதனால், உங்கள் வாட்ஸ்அப் தகவலை உங்களை தவிர வேறு யாரும் அணுக முடியாது என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது. -
இறைவன் நாடினால் விடை நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

௦௭௦௭௨௦௨௪
0707 2024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment