Thursday, 18 July 2024

திருமறை குரான் குரான் அமைப்பு சூராக்கள் யாசீன் (36) குரானின் இதயம் 19072024 வெள்ளி






 திருமறை குரான்

குரான் அமைப்பு
சூராக்கள்
யாசீன் (36) குரானின் இதயம்
19072024 வெள்ளி
குரான் அமைப்பு –இதில் ஆயத்துகள் பற்றி சில செய்திகளை
கடந்த பதிவுகளில் பார்த்தோம்
இனி வருவது சூராக்கள்
சூராஹ் என்பது அத்தியாயம் ,chapter
அல்பாfத்திஹா என்ற முதல் சூராவில் துவங்கி சூராஹ் அந்நாஸ் வரை 114 சூராக்கள்
இதில் மிகப்பெரிய சூராஹ் அல் பக்ராஹ் என்ற பெயர் கொண்ட சூராஹ் 2 -286ஆயத்துகள்
இந்த 2 ஆவது சூராவில் குரானின் மிகப் பெரிய ஆயத்தான 2:282 கடன் ஆயத்து , அதிகம் படித்து மனனம் செய்யப்படும் ஆயத்துல் குர்ஷி 2:255
எல்லாம் வருகிறது
மிகச் சிறிய சூராஹ் அல்கவ்சர் –சூராஹ் 108 - -மூன்று ஆயத்துகள் கொண்டது
ஆயத்துகள் போல சூராக்களிலும் மக்கீன் மதீனி சூராக்கள் உண்டு
இவை எல்லாம் பெரும்பாலும் பலரும் அறிந்ததுதான்
சொல்லப்போனால் நான் எழுதுவன எல்லாமே எல்லோரும் அறிந்ததுதான்
நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளத்தான் என் பதிவுகள்
அளவில் சிறிய பல சூராக்கள் இருக்கின்றன்
எந்த விதத்திலும் அவற்றை குறைவாக எண்ண முடியாது
குரானின் ஒவ்வொரு எழுத்தும் ,ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஆயத்தும் ஒவ்வொரு சூராவும் இறைவன் படைப்பு எனவே எல்லாமே மிக முக்கியமானவைதான்
சூராக்கள் பற்றி பின்பு ஒரு நாள் சுருக்கமாக விளக்கமாக எழுத எண்ணம் –இறைவன் நாடினால்
எனவே இந்தத் தொடரில் சூராக்கள் பற்றி ஒரு சில பகுதிகள் மட்டுமே
இன்றைய வினா
சுராஹ் யாசீன் (36) –இதன் சிறப்பு எல்லோரும் அறிந்த ஓன்று
இந்த சூராவுக்கு ஒரு சிறப்புப் பெயர் இருக்கிறது
அது என்ன ?
விடை
குரானின் இதயம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பர்வேஸ்—முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
ஷிரீன் பாரூக்
பாப்டி
சிராஜுதீன்
ஷர்மதா
Khatheeb Mamuna Lebbai
விளக்கம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனின் இதயம் (சூரா) யாஸீனாகும்
அதன் மொழித்திறன் , நடையில் தெளிவு ,அழகு இதோடு
இதயத்தை உலுக்கி உறங்கும் உணர்வுகளை உசுப்பி விட்டு திரு மறையின் செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக சொல்வது
இவற்றால் இது குரானின் இதயம் என்று சொல்லப்படுகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
12 முஹர்ரம் (1) 1446
19 072024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment