தமிழ் (மொழி ) அறிவோம்
ரங்கம்
14707 2024 ஞாயிறு
(முன் குறிப்பு
ஆனால் என் தெரிவு வேறு சொல்
அதை யாரும் சொல்லவில்லை
எனவே அதையே இந்த வார வினாவாக வைத்து விட்டேன் )
தீவு (island) –எல்லோரும் அறிந்த ஒரு சொல்
எல்லாப்பக்கங்களிலும் நீர் சூழ்ந்த நிலபரப்பு தீவு
நம் அண்டை நாடான இலங்கை (ஸ்ரீ லங்கா) ஒரு தீவு
வினா
ஆற்று நீருக்கு நடுவே அமைந்த ஒரு நிலப்பரப்பைக் குறிக்க தனியாக ஒரு நாலு எழுத்து சொல் இருக்கிறது
அது என்ன ?
முதல் எழுத்து இடையின அகரம்
இரண்டும் நான்கும் மெல்லின ஒற்று
மீதமுள்ளது வல்லினம்
மிகப் பரவலாக பயன்பாட்டில் உள்ள அந்தச் சொல் என்ன ?
விடை
ரங்கம்
சரியான விடை வாழ்த்து பாராட்டு பெறுவோர் சகோ
ரவிராஜ் ----முதல் சரியான விடை
ஹசன் அலி
விளக்கம்
ரங்கம் என்ற சொல்லுக்கு ஆற்றிடைத் தீவு என்றும் நாத் "பாதுகாப்பவர்" என்ற பொருளும் கூறப்படுகிறது. பெரும்பாலும் புகழ்பெற்ற அரங்கநாதர் கோயில்கள் ஆற்றிடைத் தீவுகளில் அமைந்துள்ளன.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௪௦௭௨௦௨
14707 2024 ஞாயிறு
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment